உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w87 1/1 பக். 10-14
  • “பலங்கொண்டு திடமனதாயிரு“

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “பலங்கொண்டு திடமனதாயிரு“
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • யோசுவாவின் பெலம்—எந்த ஊற்றுமூலத்திலிருந்து
  • யெகோவாவின் நாமம் முன்னிலைக்கு
  • யோர்தானில் யெகோவாவின் அற்புதம்
  • அற்புதத்துக்கு நினைவுச் சின்னம் உண்டாக்குவது
  • யோசுவா நினைவுகூர்ந்தவை
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • பைபிள் புத்தக எண் 6—யோசுவா
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
  • நாம் வெற்றி பெறவே அவர் விரும்புகிறார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • “நம்முடைய தேவனாகிய யெகோவாவையே சேவிப்போம்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
w87 1/1 பக். 10-14

“பலங்கொண்டு திடமனதாயிரு“

“அவர்களுக்குப் பயப்படீர்களாக; உங்கள் தேவனாகிய யெகோவா தாமே உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்.”—உபாகமம் 3:22.

இஸ்ரவேலரின் சரித்திரத்தில் அதிமுக்கியமான சம்பவங்கள் நடைபெறுவதற்கான காலம் வந்துவிட்டிருந்தது. கடவுளுடைய பரிசுத்த ஜனம் இப்பொழுது வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குள் பிரவேசிக்க தங்களை தயாரித்துக்கொள்ள வேண்டியவர்களாக இருந்தார்கள்! 40 வருடங்களாக, பயங்கரமான பெரிய வனாந்தரத்தினூடாக மோசே இஸ்ரவேலரை வழிநடத்திக்கொண்டு வந்திருந்தான். ஆனால் இப்பொழுது மோவாபியரின் தேசத்தில், யோர்தான் நதி பிரதேசத்தில் கடைசி தடவையாக கடவுளுடைய ஜனங்களை அவன் பார்த்து பேசுகிறான். 120 வயதில், “அவன் கண் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை.” பேசும் சக்தியையும் அவன் இழந்துவிடவில்லை. அவனை அடுத்து வரவேண்டியவனாக இருந்த யோசுவாவும் இஸ்ரவேலர் அனைவரும், யெகோவாவின் கட்டளைகளை அவன் வல்லமையோடு விளக்குவதையும், தேசத்தை சுதந்தரித்துக்கொள்ள பிரவேசிக்கையில், அவர்கள் பலங்கொண்டவர்களாக இருக்கும்படியாக அவன் அவர்களுக்கு ஊக்கமாக புத்தி சொன்னதையும் கேட்டு, அவர்கள் கிளர்ச்சியடைந்திருக்க வேண்டும்.—உபாகமம் 1:1-5, 19, 21, 29, 30; 3:22; 31:6, 7, 23; 34:7.

2 வெகு காலத்திற்கு முன்பாக நடந்த அந்த சம்பவங்கள் வெறும் சரித்திரமாக மட்டும் இருக்கின்றனவா? நிச்சயமாக இல்லை! அப்போஸ்தலனாகிய பவுல் நமக்குச் சொல்லுகிறான்: “தேவ வசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.” (ரோமர் 15:4) அந்த சரித்திரத்துக்கு நவீன நாளில் இணையான ஒன்று இருக்கிறது. ஆவிக்குரிய போராட்டத்துக்கு அது நம்மை பலப்படுத்தக்கூடும். “உலகத்தின் முடிவு காலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாகும்படி” இவை எழுதப்பட்டிருக்கின்றன. சாத்தானின் கண்ணிகளை தவிர்ப்பதற்கு இவை நமக்கு உதவி செய்கின்றன.—1 கொரிந்தியர் 10:11; 1 பேதுரு 4:7.

யோசுவாவின் பெலம்—எந்த ஊற்றுமூலத்திலிருந்து

3 இப்பொழுது, வெகு சீக்கிரத்தில் கடவுளுடைய ஜனங்கள் யெகோவாவின் புதிய ஒழுங்குமுறைக்குள் அணிவகுத்துச் செல்லுவார்கள். உலகில் இன்று உருவாகிவரும் சம்பவங்களின் நிமித்தமாக, நாம் தைரியத்தை வளர்த்துக்கொள்வது அவசியமாகும். இதை நாம் எவ்விதமாகச் செய்யலாம்? வாக்குப் பண்ணப்பட்ட தேசத்துக்குள் பிரவேசிக்க, யோசுவா ஆயத்தமாகையில் கடவுள் அவனுக்கு பின்வருமாறு கட்டளையிட்டிருந்தார்: “என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப் பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்க மாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு அதைவிட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக. இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயை விட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப் பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.”—யோசுவா 1:7, 8.

4 ஆம், அங்கேதான் இரகசியம் இருக்கிறது! தினந்தோறும் பைபிளை வாசியுங்கள். நமக்கு கடவுள் கொடுத்திருக்கும் கட்டளைகள் அதில் அடங்கியிருக்கின்றன. அதன் பேரில் தியானம் பண்ணுங்கள். அதன் நினைப்பூட்டுதல்களின்படி செய்யுங்கள். உங்களைச் சுற்றியுள்ள பொருளாசையுள்ள ஒழுக்கங்கெட்ட உலகினுள் விலகிச் சென்றுவிட உங்களை அனுமதியாதேயுங்கள். எந்த சூழ்நிலைமையில் நீங்கள் இருந்தாலும், ஞானத்தோடு செயல்படுங்கள். கடவுளுடைய வார்த்தையை படிப்பதன் மூலமாக நீங்கள் பெற்றுக்கொண்டிருக்கும் திருத்தமான அறிவையும், ஆவிக்குரிய புரிந்துகொள்ளுதலையும் நடைமுறை வாழ்க்கையில் பொருத்திப் பாருங்கள். அதைக் குறித்து மற்றவர்களிடம் பேசுங்கள். அவ்விதமாகச் செய்து, யெகோவாவின் மீது சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் நிச்சயமாகவே பலங்கொண்டு திடமனதாயிருந்து, ‘உங்கள் வழியை வாய்க்கப்பண்ணுவீர்கள்.’—சங்கீதம் 1:1-3; 93:5; 119:165 -168-ஐ ஒப்பிடவும்.

5 யோசுவா “வாலிப பிராயம் முதற்கொண்டு மேசேயின் ஊழியக்காரனாக” இருந்து வந்திருக்கிறான். (எண்ணாகமம் 11:28) இந்த நெருங்கிய கூட்டுறவு, இவன் ஆவிக்குரிய பெலத்தைப் பெற்றுக்கொள்ள உதவியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேபோலவே, இன்றுள்ள வாலிப ஊழியர்கள், பக்தியுள்ள பெற்றோர்கள், பயனியர்கள், நீண்ட கால சாட்சிகள் இன்னும் மற்ற யெகோவாவின் உண்மைத் தவறாத ஊழியர்களோடு சேர்ந்து வேலை செய்வதன் மூலம் பெலத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இப்படியாக வைராக்கியமுள்ளவர்களோடு சேர்ந்து வீட்டுக்கு வீடு சாட்சி கொடுப்பதில் ஈடுபடுவது, மகிழ்ச்சியைத் தருவதாகவும், நம்முடைய வாலிபர்களில் முதிர்ச்சியையும் ஊழியத்தில் முன்னேறவேண்டும் என்ற ஆசையையும் வளர்க்க உதவி செய்யக்கூடும். (அப்போஸ்தலர் 20:20, 21; ஏசாயா 40:28-31) யெகோவாவின் ராஜ்யத்தின் சார்பாக முழுநேர ஊழியத்தைக் காட்டிலும், இளம் சாட்சிகள் வேறு என்ன சிறப்பான இலக்கைக் கொண்டிருக்க முடியும்!—சங்கீதம் 35:18; 145:10-12.

6 அமலேக்கோடே யுத்தம் பண்ண யோசுவாவை மோசே அனுப்பியபோது, “யோசுவா தனக்கு மோசே சொன்னபடியே செய்தான்.” அவன் கீழ்ப்படிந்தான்; ஆகவே அவன் வெற்றியடைந்தான். நாமுங்கூட, யெகோவாவின் அமைப்பின் மூலமாக பெற்றுக்கொள்ளும் யுத்த கட்டளைகளுக்கு உன்னிப்பாக கவனம் செலுத்துவோமேயானால், யெகோவாவின் வெற்றியில் பங்குகொள்வோம். யெகோவா மோசேயிடம், அமலேக்கின் மீது அவருடைய வெற்றியை நினைவுகூரும் பொருட்டு அதை ஒரு புத்தகத்தில் எழுதி, யோசுவாவின் செவி கேட்கும்படி வாசிக்கச் சொன்னார். யோசுவா, யெகோவாவின் வெற்றியைக் குறித்து மற்றவர்களிடம் பேசுவதன் மூலம் அதை மேலுமாக மேன்மைப்படுத்தியிருப்பான் என்பதில் சந்தேகமில்லை. அதே விதமாகவே நாம் இன்று கர்த்தராகிய ஆண்டவர் யெகோவாவின் மகத்தான செயல்களை யாவரறியச் செய்து, பொல்லாதவர்கள் மீது வரஇருக்கும் அவருடைய “நீதியைச் சரிக்கட்டும் நாளை”க் குறித்து அறிவிக்கலாம்.—யாத்திராகமம் 17:10, 13,14; ஏசாயா 61:1, 2; சங்கீதம் 145:1-4.

7 வாக்குப் பண்ணப்பட்ட தேசத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கு மோசே, 12 இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்களை அனுப்பியபோது, அவன் யோசுவாவையும் அனுப்பினான். திரும்பி வந்தபோது, வேவுக்காரரில் 10 பேர், கானானில் குடியிருந்தவர்களைக் குறித்து தங்கள் பயத்தை வெளியிட்டு எகிப்துக்கு திரும்பிப் போவதற்கு ஏற்பாடு செய்ய ஜனங்களை கூட்டி இணங்க வைத்தார்கள். ஆனால் யோசுவாவும் காலேபும் தைரியமாக இவ்விதமாகச் சொன்னார்கள்: “யெகோவா நம்மேல் பிரியமாயிருந்தால், அந்த தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார். யெகோவாவுக்கு விரோதமாக மாத்திரம் கலகம் பண்ணாதிருங்கள்; அந்த தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களை விட்டு விலகிப் போயிற்று; யெகோவா நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்பட வேண்டியதில்லை.”—எண்ணாகமம் 13:1 -14:38

8 என்றாலும் இஸ்ரவேல் சபையார் தொடர்ந்து முறுமுறுத்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே யெகோவா, தலையிட்டு, பயந்து தயக்கம் காட்டின இஸ்ரவேலரை நாற்பது வருஷங்கள் வனாந்தரத்தில் அலையும்படியாக தீர்ப்பளித்தார். காலேபையும் யோசுவாவையும் தவிர அவர்களுடைய யுத்த மனிதர் அனைவரும் வாக்குப் பண்ணப்பட்ட தேசத்தை பார்க்காமலே மரித்துப் போனார்கள். இன்று நமக்கு என்ன ஒரு எச்சரிப்பாக இது இருக்கிறது! யெகோவாவின் ஏற்பாடுகளுக்கு எதிராக ஒருபோதும் முறுமுறுக்காமல் இருப்போமாக. சாட்சி கொடுப்பதற்கு கடினமாக இருக்கும் பிராந்தியங்களைநாம் எதிர்பட்டாலும்கூட, ஜீவனைக் காக்கும் ராஜ்ய செய்தியோடு ஜனங்களின் வீடுகளுக்குச் செல்வதில் பலங்கொண்டு திடமனதாயிருப்போமாக. வெளியரங்கமாக சாட்சி கொடுப்பதற்கு பதிலாக, தங்களுடைய சகோதரர்களை பழிதூற்றி உலகத்தின் வழிகளுக்கு—மாதிரி படிவ எகிப்துக்கு—திரும்பிச் சென்றுவிடுவதையே விரும்பிய அந்த நவீன நாளைய விசுவாச துரோகிகளைப் போல நாம் இல்லாதிருப்போமாக.—எண்ணாகமம் 14:1-4, 26-30; லூக்கா 12:45, 46; அப்போஸ்தலர் 5:27-29, 41, 42-ஐ ஒப்பிடவும்.

யெகோவாவின் நாமம் முன்னிலைக்கு

9 பன்னிரண்டு வேவுக்காரர்களின் பைபிள் பட்டியல், யோசுவாவை ஓசேயா என்று குறிப்பிடுகிறது. இதன் பொருள், “இரட்சிப்பு” என்பதாகும். ஆனால் இந்த இடத்தில் பதிவு இவ்விதமாகச் சொல்லுகிறது: “நூனின் குமாரனாகிய ஓசேயாவுக்கு யோசுவா [யெகோவா இரட்சிப்பாக இருக்கிறார் என்ற பொருள்] என்று மோசே பேரிட்டிருந்தான்.” மோசே இவ்விதமாக ஏன் யெகோவாவின் நாமத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தான்? ஏனென்றால் அந்த பெயர் நிலைநாட்டப்படுவதற்காகவே அடிப்படையில் யோசுவா ஊழியஞ் செய்தான். மோசே இஸ்ரவேலருக்குப் பின்னால் வலியுறுத்திக் காண்பிக்க இருந்த கட்டளைக்குக் கீழ்ப்படிவதில் யோசுவா உயிருள்ள ஒரு முன்மாதிரியாக ஆனான்: “உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்பு கூருவாயாக.” அவ்விதமாகச் செய்தததினால், ‘யெகோவா இரட்சிப்பாயிருக்கிறார்’ என்பதை கண்கூடாக காண்பிக்க அவன் சிலாக்கியம் பெற்றான்.—எண்ணாகமம் 13:8, 16; உபாகமம் 6:5.

10 யெகோவாவின் நாமத்தை நாமும்கூட மிகவும் விலையேறப் பெற்றதாகவும், எல்லா துதிக்கும் பாத்திரமானதாகவும் கருதுகிறோமா? அவருடைய பிரசித்திப் பெற்ற பெயரின் பொருள், அவருடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவதன் சம்பந்தமாக “ஆகச் செய்கிறவராக இருக்கிறார்” என்பதாகும். அவருடைய ராஜ்ய வாக்குத்தத்தங்கள் இருதயத்துக்கு எத்தனை கிளர்ச்சியூட்டுவதாக இருக்கின்றன! யோசுவாவினுடையதைப் போன்ற வைராக்கியத்தோடு இந்த சமயத்திலும் அவருடைய புதிய மற்றும் நீதியுள்ள புதிய ஒழுங்கின் நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைவருக்கும் முன்பாக, யெகோவாவின் நாமத்தையும் நோக்கங்களையும் மகிமைப்படுத்த நாம் விரும்ப வேண்டும். சோதனையான இந்த காலங்களில், யோசுவாவுக்கு யெகோவா சொன்ன வார்த்தைகளிலிருந்து நாம் பெலத்தைப் பெற்றுக் கொள்ளலாம்: “நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய யெகோவா உன்னோடே இருக்கிறார்.”—யோசுவா 1:9a

11 கிரேக்க மொழியில், யோசுவா என்ற பெயருக்கு இணையானப் பெயர் இயேசுவாகும். இதன் பொருளும்கூட “யெகோவா இரட்சிப்பாக இருக்கிறார்” என்பதாகும். இயேசு கிறிஸ்துவின் மூலமாகவே யெகோவா மனிதவர்க்கத்துக்கு இரட்சிப்பை ஏற்பாடு செய்கிறார். பொ.ச. 33-ல் இயேசு ஒரு கழுதைக் குட்டியின் மேல் ஏறி, எருசலேமுக்குள் போனபோது, ஜனங்கள், “ஓசன்னா! யெகோவாவின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்” என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். (மாற்கு 11:9; சகரியா 9:9) ‘தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி மாதிரியை நமக்கு வைத்துப் போன’ இயேசுவுக்கு யோசுவா ஒரு உண்மையான மாதிரியாக இருந்தான். (1 பேதுரு 2:21) யோசுவாவைப் போல, இயேசு, யெகோவாவின் நாமத்தை விலையேறப் பெற்றதாக கருதி அவர் அந்த பெயரை உயர்த்தினார்: சீஷர்களோடு செய்த கடைசி ஜெபத்தில் இரண்டு தடவைகள் அவர் கடவுளுடைய பெயருக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அவர் இவ்விதமாகச் சொன்னார்: “நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். . . . நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிடத்திலிருக்கும்படிக்கும் உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன்.” (யோவான் 17:6, 26) மற்றவர்களுக்கு அந்த நாமத்தை வெளிப்படுத்துவது நமக்கு என்ன ஒரு சிலாக்கியமாக இருக்கிறது!

12 யோசுவாவின் உண்மைத் தவறாத தலைமை வகிப்பைப் பற்றி நாம் பைபிள் பதிவில் வாசிக்கையில், பெரிய யோசுவாவாகிய இயேசு கிறிஸ்து இன்று கடவுளுடைய ஜனங்களை வழிநடத்தி வருகிறார் என்பதை நாம் மனதில் வைத்திருக்கலாம். யெகோவாவின் பெயர் நிலைநாட்டப்படப்போகும் நாள் இப்பொழுது அருகாமையில் இருக்கிறது. அந்த நாளை, தொடர்ந்துவர இருக்கும், நீதியுள்ள புதிய ஒழுங்கைப் பற்றிய அவருடைய வாக்குத்தத்தின் நிறைவேற்றத்துக்காக நாம் எவ்வளவு ஆவலாக காத்திருக்கிறோம்! (2 பேதுரு 3:10-13, 17, 18) அப்படியென்றால், யெகோவா யோசுவாவின் மூலமாக செய்து காண்பித்ததைவிடவும்கூட அதிக வல்லமையான அவருடைய செயல்களை காண நாம் நம்பிக்கையோடு எதிர்நோக்கியிருக்கிறோம்.

யோர்தானில் யெகோவாவின் அற்புதம்

13 பொ.ச. மு.1473-ம் வருடத்தில் அது அறுப்புக் காலமாகவும், யோர்தான் கரைபுரண்டு ஓடும் நிலையிலும் இருந்தது. கொந்தளிப்பான அந்த நீரோட்டத்தின் வழியாக வயதானவர்களும், இளைஞர்களும், ஆண்களும் பெண்களும் பிள்ளைகளுமான பல லட்சக்கணக்கான ஆத்துமாக்களை எவ்விதமாக வழிநடத்திச் செல்ல முடியும்? ஆனாலும்கூட யெகோவா யோசுவாவிடம் இவ்விதமாக கட்டளையிட்டிருந்தார்: “இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக் கடந்து போங்கள்.” இதற்கு பிரதியுத்தரமாக, ஜனங்கள் யோசுவாவிடம், “நீர் எங்களுக்குக் கட்டளையிடுகிறதையெல்லாம் செய்வோம்” என்பதாகச் சொன்னார்கள். இஸ்ரவேலர் கூடாரங்களிலிருந்து புறப்பட்டார்கள். அவர்கள் நடுவே யெகோவா இருப்பதை பிரதிநிதித்துவம் செய்த உடன்படிக்கைப் பெட்டியை கவனமாக மூடி, ஆசாரியர்கள் அதைச் சுமந்துகொண்டு முன்னேச் சென்றார்கள். அப்பொழுது யெகோவா ‘அவர்கள் நடுவிலே அற்புதங்களைச்’ செய்ய ஆரம்பித்தார். ஏனென்றால், “பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே, மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்றது.” கீழிருந்த தண்ணீர் சவக்கடலினுள் விழுவதற்காக “தண்ணீர் பிரிந்து ஓடிற்று.” “அப்பொழுது ஜனங்கள் கடந்து போனார்கள்.” (யோசுவா 1:2, 16; 3:5-16) நிச்சயமாகவே இது ஒரு மிகப் பெரிய அற்புதமாகும்!

14 அர்மகெதோனில் அழிவை நோக்கி கண்மூடித்தனமாக இப்பொழுது போய்கொண்டிருக்கும் மனித இன வெள்ளமானது, தத்தளித்துக் கொண்டிருந்த யோர்தானுக்கு இணையாக இருக்கிறது. (ஏசாயா 57:20; வெளிப்படுத்தின விசேஷம் 17:15 ஒப்பிடவும்) இன்று கடைசியாக மூழ்கிப் போவதற்காக கரையோரத்தில் மனிதவர்க்கம் நின்றுக்கொண்டிருக்கும்போது, இபொழுது 30,00,000-ற்கும் அதிகமான எண்ணிக்கையாயிருக்கும் தம்முடைய ஜனங்களை யெகோவா பலப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்த எண்ணிக்கை, யோசுவாவோடு அணி வகுத்துச் சென்ற கடவுளுடைய ஜனங்களின் எண்ணிக்கைக்கு ஒப்பாக இருக்கிறது.—ஆபகூக் 2:3 ஒப்பிடவும்.

15 லட்சக்கணக்கான இஸ்ரவேலர் நதியின் தரையில் கடந்து செல்லும்போது, யெகோவா தேவன் குறுக்கிட்டு தடுத்திருப்பதை பிரதிநிதித்துவம் செய்வதற்காக யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின் நடுவிலே தண்ணீரில்லாத தரையில் காலூன்றி” நின்றார்கள். (யோசுவா 3:17) 1919-ல் தானே, அபிஷேகம் பண்ணப்பட்ட சாட்சிகளின் ஒரு சிறிய தொகுதி மனிதவர்க்கத்தின் “தண்ணீர்”களுக்கு முன்னால் தைரியமாக அடியெடுத்து வைத்தார்கள். 1922-ல் அவர்கள் ‘ராஜாவையும் அவருடைய ராஜ்யத்தையும் விளம்பரம் பண்ணுங்கள், விளம்பரம் பண்ணுங்கள், விளம்பரம் பண்ணுங்கள்!’ என்ற அழைப்புக்கு தைரியமாக பதிலளித்தார்கள். உண்மையில் அவர்கள் இவ்விதமாகச் சொன்னார்கள்: “இதோ, அடியேன் இருக்கிறேன், என்னை அனுப்பும்.” யெகோவா அவர்களுக்கு இவ்விதமாக உறுதியளிக்கிறார்: “நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை.” 1931-ல் அவர்களுக்கு யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை கொடுப்பதன் மூலம் அவர் அவர்களை கனம் பண்ணினார். (ஏசாயா 6:8; 43:2, 12) யோர்தானை கடந்து வந்தவர்களில், லேவியரல்லாத இஸ்ரவேலரும், மோசேவோடு எகிப்தை விட்டுவந்த “பல ஜாதியான ஜனங்களான” இஸ்ரவேலரல்லாதவர்களின் சந்ததியாரும் இடம் பெற்றிருந்தார்கள். அதே விதமாகவே, ஆவிக்குரிய ஆசாரிய வகுப்பின் மீதியானோர், தங்களுடைய விசுவாசத்தில் சிறந்த முன்மாதிரிகளாக, “உறுதிப்பட்டவர்களாயும் அசையாதவர்களாயும்” காலூன்றி நிற்கும்போது, இன்று “திரள் கூட்டமான ஜனங்கள்” கடவுளுடைய புதிய ஒழுங்குக்குள் கடந்து போவதில் பங்குகொள்ளுகிறார்கள்.—யாத்திராகமம் 12:38; வெளிப்படுத்தின விசேஷம் 7:9; 1 கொரிந்தியர் 15:58.

அற்புதத்துக்கு நினைவுச் சின்னம் உண்டாக்குவது

16 இஸ்ரவேலின் கோத்திரங்களை பிரதிநிதித்துவம் செய்யும் 12 மனிதர்கள், நதியின் அடித்தரையிலிருந்து 12 கற்களை சுமந்துவந்து அவற்றை கில்காலின் மேற்கு கரையில் கொண்டுவந்து வைக்கும்படியாக கட்டளையிட்டு இந்த யோர்தான் அற்புதத்துக்கு ஒரு நினைவுச் சின்னத்தை யெகோவா உண்டாக்கினார். அந்த கற்கள், யெகோவாவின் நாமத்துக்கும் அவருடைய வல்லமையான செயல்களுக்கும் நிலையான நினைவுச் சின்னமாக நிற்கும். “பூமியின் சகல ஜனங்களும் யெகோவாவுடைய கரம் பலத்ததென்று அறியும்படிக்கும், நீங்கள் சகல நாளும் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பயப்படும்படிக்கு” இந்த நினைவுச் சின்னம் வைக்கப்பட்டிருக்கிறது என்பதாக இஸ்ரவேல் புத்திரரின் பிள்ளைகள் சொல்லப்பட வேண்டியவர்களாக இருந்தார்க்ள. (யோசுவா 4:1-8, 20-24) நவீன காலங்களில் அரசியல் மற்றும் மதத்தலைவர்கள் நேர்மையற்ற விதமாக தாக்கியபோதிலும் தம்முடைய ஜனங்களை பாதுகாப்பதில் யெகோவாவின் மகத்தான செயல்கள் அவர் தம்முடைய ஜனங்களோடு இருக்கிறார் என்பதற்கு நினைவுச் சின்னமாக இருக்கிறது. அவருடைய பெயரை நிலைநாட்டுவதில் அவர் செய்யும் நவீன நாளைய மகத்தான செயல்கள் அவருடைய புதிய ஒழுங்கு முறையில் நிரந்தரமாக நினைவுக்கூறப்படும் என்பதில் சந்தேகமில்லை.—வெளிப்படுத்தின விசேஷம் 12:15, 16; சங்கீதம் 135:6, 13.

17 இன்னும் அதிகமான நினைவுச் சின்னம் பொருத்தமாக இருந்தது: “யோர்தானின் நடுவிலும் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்த ஆசாரியரின் கால்கள் நின்ற இடத்திலே யோசுவா பன்னிரண்டு கற்களை நாட்டினான்; அவைகள் இந்நாள் மட்டும் அங்கே இருக்கிறது.“ நதியின் நடுவிலிருந்து ஆசாரியர்கள் கரையேறினபோது, யெகோவா தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்ணீர்களை கட்டவிழ்த்துவிட்டார். இவை நினைவு சின்னமாக இருந்த 12 கற்களைச் சுற்றி சுழன்று கரையெங்கும் புரண்டது. (யோசுவா 4:9) இது முதற்கொண்டு இந்த கற்களை வெள்ளப் பெருக்கு தப்பியோட முடிவதில்லை. அதேவிதமாகவே, இன்று மனிதவர்க்கம் முன்னொருபோதும் இல்லாத வகையில் வேகமாக அர்மகெதோனின் “சவக்கடலில்” மூழ்க இருக்கிறது. ஆனால் யெகோவாவின் சாட்சிகள் “ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று, ஒரே ஆத்துமாவினாலே சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காகக்கூடப் போராடிக்” கொண்டிருக்கும்போது அவர்கள் உலகம் முழுவதிலும் குவித்திருக்கும் அத்தாட்சியை தப்பித்துக்கொள்ள முடியாது. (பிலிப்பியர் 1:27, 28) இந்த வருடம் 1986 வரை, 67 வருடங்களாக, சாட்சிகள் உலகம் முழுவதும் விநியோகிப்பதற்காக 57,00,00,000 மேலான புத்தகங்களையும் சிறு புத்தகங்களையும் 640,00,00,000 காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளையும், அநேக இலவச துண்டுபிரதிகளையும் பிரசுரித்திருப்பதை, கிடைக்கக்கூடிய பதிவுகள் காண்பிக்கின்றன.—நிச்சயமாகவே ஒரு சிறப்பான நினைவுச் சின்னத்தின் அத்தாட்சி!

18 இந்த வருடம், 1986 வரையாக சாட்சி கொடுக்கும் வேலை தொடர்ந்து நடைபெற்றிருப்பதைக் குறித்து நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம். 12 மனிதர்கள், ஒவ்வொருவரும் தன்னுடைய நினைவுச் சின்ன கல்லை சுமந்து கில்கால்வரையாக அதை எடுத்துச் சென்றபோது இருந்தது போலவே கடவுளுடைய சித்தத்தைச் செய்வது கடினமான வேலையாக இருந்திருக்கிறது. ஆனால் மகத்தான பயனியர் ஆவி, கடவுளுடைய நவீன கால ஜனங்களை ஐக்கியப்படுத்தி, “பலங்கொண்டு திடமனதாயிருக்க” எப்பொழுதும் அவர்களை தூண்டியிருக்கிறது.—சங்கீதம் 27:14; 31:24; செப்பனியா 3:9.

19 தம்முடைய ஜனங்களின் சார்பாக, யெகோவா மேலுமான அற்புதங்களைச் செய்வார் என்ற நம்பிக்கையோடு யோசுவாவின் நாளில் நடைபெற்ற மற்ற சம்பவங்கள், முன்னோக்கிச் செல்ல நம்மை உற்சாகப்படுத்த வேண்டும். எமது அடுத்த கட்டுரை இவைகளில் சிலவற்றை ஆராய்கிறது. (w86 12/15)

[அடிக்குறிப்புகள்]

a மீட்டர் அண்டு இட்ஸ் சிக்னிஃபிகென்ஸ் இன் தி பைபிள் (எபிரெயு) (Metre and Its Significance in the Bible (Hebrew) என்பதில், அஷர் போல்டன் பெர்க், முதல் ஆலய காலப்பகுதியில், இடுகுறி பெயர்கள் பொதுவாக நீளமாக இருந்தன என்பதாக எழுதுகிறார். யெகோவாவுக்கு உண்மைத்தவறாமையை சுட்டிக்காட்ட திருநான்கெழுத்தின் ஒரு பகுதி அதோடு இணைக்கப்பட்டவையாக இருந்தன. “பைபிளின் முதல் ஐந்து புத்தகங்களில் மோசே வேவு பார்க்க அனுப்புகையில், ஓசேயா பென்நூன் என்ற பெயரை யோசுவா என்பதாக மாற்றிவிடுகிறான்; இவ்விதமாக [யோசுவா யெகோவாவை] காட்டிக்கொடுக்க மாட்டான் என்பதை அவன் முன்னறிந்தான்,” என்பதாக அவர் குறிப்பிடுகிறார்.

[கேள்விகள்]

1. (எ) வனாந்தர பயணத்தின் முடிவில் இஸ்ரவேலின் நிலைமை என்னவாக இருந்தது? (பி) அப்பொழுது மோசே என்ன புத்திமதியைச் சொன்னான்?

2. இன்று நமக்கு போதனையாக இந்த காரியங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்பது நமக்கு எப்படித் தெரியும்?

3, 4. (எ) நாம் ஏன் தைரியத்தை வளர்த்துக் கொள்வது அவசியமாயிருக்கிறது? (பி) இதை நாம் எவ்விதமாகச் செய்யலாம்?

5. (எ) யோசுவாவைப் போல வாலிப ஊழியர்கள் இன்று எவ்விதமாக பெலத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்? (பி) இன்று இளஞ் சாட்சிகள் என்ன சிறந்த இலக்கைக் கொண்டிருக்கலாம்?

6. அமலேக்குக்கு எதிரான தாக்குதலின் சம்பந்தமாக யோசுவா எவ்விதமாக நமக்கு ஒரு முன்மாதிரியாக இருந்தான்?

7, 8. (எ) கானானிலிருந்து திரும்பியபோது யோசுவாவும் காலேபும் என்ன உறுதியான நம்பிக்கையை வெளியிட்டார்கள்? (பி) அந்த சமயத்தில் யெகோவா காரியங்களைக் கையாண்ட முறையில் என்ன எச்சரிப்பையும் ஊக்குவிப்பையும் நாம் காண்கிறோம்?

9. யோசுவா எவ்விதமாக அவனுடைய புதிய பெயருக்கு ஏற்ப வாழ்ந்தான்?

10. (எ) யெகோவாவின் பெயர் உங்களுக்கு எதை அர்த்தப்படுத்துகிறது? (பி) யோசுவாவிடம் யெகோவா சொன் வார்த்தைகளிலிருந்து நாம் எவ்விதமாக பெலத்தைப் பெற்றுக்கொள்ளலாம்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்