-
அறிவில் தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருங்கள்காவற்கோபுரம்—1993 | ஆகஸ்ட் 15
-
-
நல்ல தீர்மானங்களை எடுக்க முடிகிறது.—நீதிமொழிகள் 1:7.
6 பின்பு பேதுரு பின்வருமாறு உற்சாகப்படுத்தினார்: “உங்கள் விசுவாசத்தோடே நற்பண்பையும், நற்பண்போடே அறிவையும், அறிவோடே தன்னடக்கத்தையும், தன்னடக்கத்தோடே சகிப்புத்தன்மையையும், சகிப்புத்தன்மையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே சகோதரசிநேகத்தையும், சகோதரசிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள். இப்பண்புகள் உங்களுக்குள் உயிருள்ளதாயிருந்து ததும்புமானால், அவை நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறியும் திருத்தமான அறிவைப் பொருத்தமட்டில் செயலற்றவர்களாக அல்லது கனியற்றவர்களாக உங்களை இருக்கவிடாது.” (2 பேதுரு 1:5-8, NW)b அறிவைப் பெறுவது உலகத்தின் அசுத்தங்களிலிருந்து மக்கள் தப்புவதற்கு உதவிசெய்கிறதாக அடுத்த அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோம். (2 பேதுரு 2:20) எனவே, ஏற்கெனவே யெகோவாவைச் சேவிப்பவர்களுக்கு அறிவு தேவைப்படுவதுபோலவே, கிறிஸ்தவர்களாக ஆவோருக்கும் தேவைப்படுகிறது என்பதை பேதுரு இவ்விதமாகத் தெளிவுபடுத்தினார். அந்த வகையினரில் நீங்களும் ஒருவரா?
கற்றுக்கொள், திரும்பத்திரும்பச்சொல், பயன்படுத்து
7. அடிப்படை பைபிள் சத்தியங்களின் திருத்தமான அறிவை அநேகர் எந்தமுறையில் பெற்றிருக்கின்றனர்?
7 யெகோவாவின் சாட்சிகளின் செய்தியில் சத்தியத் தொனி இருப்பதை உணர்வதால் ஒருவேளை நீங்கள் அவர்களோடு ஒரு பைபிள் படிப்பைக் கொண்டிருக்கலாம். வாரத்திற்கு ஒருமுறை, ஒரு மணி நேரமோ அதற்கு மேலோ ஒரு பைபிள் பொருளை, நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் போன்ற துணைப் புத்தகங்களைப் பயன்படுத்துவதன்மூலம் நீங்கள் கலந்தாலோசியுங்கள். பிரமாதம்! யெகோவாவின் சாட்சிகளோடு அப்படிப்பட்ட படிப்பைக் கொண்டிருந்தவர்கள் திருத்தமான அறிவைப் பெற்றிருக்கின்றனர். ஆனாலும், தனிப்பட்டவிதமாக நீங்கள் கற்றுவரும் அளவையும் அதிகரிப்பதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? இதோ சில ஆலோசனைகள்.c
8. ஒரு படிப்பிற்கு தயாரிக்கும்போது, அதிகத்தைக் கற்றுக்கொள்ள மாணவர் என்ன செய்யலாம்?
8 உங்கள் படிப்பிற்கு நீங்கள் தயாரிப்பதற்குமுன், படிக்கவேண்டிய பாடத்தைப் பொதுவாகப் பார்வையிடுங்கள். இது அதிகாரத்தின் தலைப்பு, உபதலைப்புகள், மற்றும் பாடத்தை விளக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கும் வேறு ஏதேனும் படங்கள் ஆகியவற்றைப் பார்ப்பதைக் குறிக்கிறது. பின்பு, ஒரு பாராவையோ பிரசுரத்தின் ஒரு பாகத்தையோ வாசிக்கையில், முக்கிய குறிப்புகளையும் ஆதாரமளிக்கும் வசனங்களையும் தேடிக்கண்டுபிடித்து அவற்றை அடிக்கோடிடுங்கள் அல்லது எடுப்பாகத் தெரியும்படி வித்தியாசமான வர்ணமிடுங்கள் (ஹைலைட் பண்ணுங்கள்). சொல்லப்பட்ட சத்தியங்களைப் புரிந்துகொண்டீர்களா என்பதைக் காண, வேறுபட்ட பாராக்களில் உள்ள கேள்விகளுக்கு விடையளிக்க முயற்சிசெய்யுங்கள். இப்படிச்செய்யும்போது, பதில்களை உங்களுடைய சொந்த வார்த்தைகளில் அமைக்க முயற்சிசெய்யுங்கள். இறுதியாக, பாடத்தை மறுபார்வையிடுங்கள், முக்கிய குறிப்புகளையும் ஆதரிக்கும் நியாய வாதங்களையும் ஞாபகப்படுத்திப்பாருங்கள்.
9. படிப்பதைப்பற்றிய ஆலோசனைகளைப் பொருத்திப் பிரயோகிப்பது ஒருவர் கற்றுக்கொள்ள எப்படி உதவிசெய்யும்?
9 இந்த ஆலோசனைகளைப் பொருத்திப் பிரயோகித்தால், அறிவில் அதிகரிப்படைய நீங்கள் எதிர்பார்க்கலாம். ஏன் அப்படி? ஒரு காரணம், நிலத்தைத் தயார்செய்வதுபோல, அது அப்படித்தான் இருக்கிறது, கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஓர் ஆர்வமிக்க ஆசையோடு பாடத்தைப் படிப்பீர்கள். மொத்தமான கருத்தை மனதில் கொண்டு, முக்கிய குறிப்புகளையும் காரணவிளக்கங்களையும் கண்டுபிடிப்பதன்மூலம், விவரங்கள் எப்படித் தலைப்போடு அல்லது முடிவோடு சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் காணமுடியும். கடைசியாக மறுபார்வையிடுதல், நீங்கள் என்ன படித்தீர்கள் என்பதை ஞாபகத்தில் வைத்திருப்பதற்கு உதவிசெய்யும். பின்பு, உங்களுடைய பைபிள் படிப்பின் சமயத்தில் என்ன உதவும்?
10. (அ) வெறுமனே உண்மைகளை அல்லது புதிய செய்தியைத் திரும்பத்திரும்பச் சொல்வது ஏன் குறைவான பயனுள்ளதாக இருக்கிறது? (ஆ) “படிப்படியான இடைவெளி ஞாபகப்படுத்துதல்” என்பதில் என்ன உட்பட்டிருக்கிறது? (இ) இஸ்ரவேல மகன்கள் எப்படித் திரும்பத்திரும்பச் சொல்வதிலிருந்து பயனடைந்திருக்கலாம்?
10 கல்வித் துறையில் உள்ள வல்லுநர்கள், நேரத்திற்கேற்ற, குறிக்கோளுடன்கூடிய திரும்பத்திரும்பச் சொல்லுதலின் மதிப்பை அறிந்திருக்கின்றனர். இது கிளிப்பிள்ளையைப் போல சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்வதல்ல; ஒருவேளை நீங்கள் பள்ளியில் இருந்த காலத்தில் இவ்வாறு சில பெயர்களை, உண்மைகளை, அல்லது சிந்தனைகளைக் குருட்டு மனப்பாடம்செய்வதன்மூலம் ஞாபகத்தில் வைக்க முயற்சிசெய்திருக்கலாம். ஆனாலும், நீங்கள் ஒப்பித்த விஷயங்களைச் சீக்கிரத்தில் மறந்துபோய்விட்ட நிலையில், ஞாபத்திலிருந்து அது மறைந்துபோன நிலையில், உங்களைக் கண்டீர்களா? ஏன்? கிளியைப்போல் வெறுமனே ஒரு புதிய வார்த்தையை அல்லது செய்தியை சொல்வது சலிப்பூட்டுவதாக இருக்கலாம்; அதன் பயன்களும் சிறிது காலமே நீடிக்கின்றன. எது அதை மாற்றக்கூடும்? கற்றுக்கொள்ளவேண்டும் என்ற உங்களுடைய உண்மையான விருப்பம் உதவிசெய்யும். மற்றொரு வழிமுறை, குறிக்கோளுடன் திரும்பத்திரும்பச் சொல்லுதல். ஒரு குறிப்பை நீங்கள் கற்ற சில நிமிடங்களுக்குப்பிறகு, அது ஞாபகத்திலிருந்து மறைவதற்குள், நீங்கள் என்ன கற்றீர்கள் என்பதை உங்களுக்குள்ளேயே ஞாபகப்படுத்திப்பாருங்கள். இது, “படிப்படியான இடைவெளி ஞாபகப்படுத்துதல்” என்று சொல்லப்படுகிறது. நீங்கள் மறப்பதற்குமுன் உங்களுடைய ஞாபகச் சக்தியை புதுப்பிப்பதன்மூலம், ஞாபகத்தில் வைத்திருக்கும் காலத்தை அதிகரிக்கிறீர்கள். இஸ்ரவேலில், தந்தைமார்கள் தங்களுடைய மகன்களில் கடவுளுடைய கட்டளைகளைப் பதிய வைக்கவேண்டியதிருந்தது. (உபாகமம் 6:6, 7) ‘பதிய வைத்தல்’ என்பது திரும்பத்திரும்ப கற்பித்தல் என்று அர்த்தப்படுத்துகிறது. சாதகமாகவே, அந்தப் பிதாக்களில் பலர், முதலில் தங்களுடைய மகன்களிடம் கட்டளைகளை வாசித்திருக்கலாம்; பின்பு அவர்கள் திரும்பத்திரும்ப சொல்லியிருக்கலாம்; அதன் பின்பு அவர்கள் தங்களுடைய மகன்களிடம் என்ன கற்றுக்கொண்டனர் என்பதைப்பற்றி கேள்விகள் கேட்டிருக்கலாம்.
11. கற்றுக்கொள்வதை அதிகரிப்பதற்கு ஒரு பைபிள் படிப்பின்போது என்ன செய்யப்படலாம்?
11 ஒரு சாட்சி உங்களோடு பைபிள் படிப்பை நடத்திக்கொண்டிருந்தால், அவரோ அவளோ, படிப்பு நடந்துகொண்டிருக்கும்போது இடைவெளிகளில் படிப்படியான சுருக்கங்களைக் கொண்டிருப்பதன்மூலம் நீங்கள் கற்றுக்கொள்வதற்கு உதவிசெய்யக்கூடும். இது சிறுபிள்ளைத்தனமான காரியமல்ல. இது கற்கும் பழக்கத்தை முன்னேற்றுவிக்கும் ஒரு வழிமுறை. எனவே, இந்தப் படிப்படியான மறுபார்வைகளில் சந்தோஷமாகப் பங்குகொள்ளுங்கள். பின்பு, படிப்பின் முடிவில், இறுதி மறுபார்வையில் பங்குபெறுங்கள், இதற்கு நீங்கள் உங்களுடைய ஞாபகத்திலிருந்து பதிலளிக்கவேண்டும். மற்றொரு நபருக்கு நீங்கள் கற்றுக்கொடுப்பதைப்போல, உங்களுடைய சொந்த வார்த்தைகளிலேயே குறிப்புகளை விளக்கலாம். (1 பேதுரு 3:15) இது நீங்கள் கற்றுக்கொண்ட காரியத்தை உங்களுடைய நீண்ட கால ஞாபகச் சக்தியின் பாகமாக்கிக்கொள்ள உதவிசெய்யும்.—சங்கீதம் 119:1, 2, 125; 2 பேதுரு 3:1-ஐ ஒப்பிட்டுப்பாருங்கள்.
12. ஒரு மாணவர்தாமே தன்னுடைய ஞாபகசக்தியை அதிகரிப்பதற்கு என்ன செய்யலாம்?
12 உதவியாயிருக்கும் மற்றொரு படியானது, நீங்கள் கற்றுக்கொண்டதை மற்றவர்களிடம், ஒருவேளை பள்ளிக் கூட்டாளியிடமோ, உடன் வேலைசெய்கிறவரிடமோ, அயலகத்தாரிடமோ ஓரிரு நாளுக்குள் சொல்வதாகும். பொருளை நீங்கள் குறிப்பிட்டு, பின்பு வெறுமனே முக்கிய காரணவிளக்கங்களை அல்லது பைபிளிலிருந்து ஆதரவளிக்கும் வசனங்களை ஞாபகப்படுத்த முடிகிறதா என்பதைச் சோதிக்க விரும்புவதாகச் சொல்லலாம். இது அந்த நபரின் அக்கறையைத் தூண்டக்கூடும். அது அவ்வாறு அக்கறையைத் தூண்டாவிட்டாலும், ஓரிரு நாளில் புதிய செய்தியைத் திரும்ப ஞாபகப்படுத்திப் பார்க்கும் அந்த முறைதானே, உங்களுடைய ஞாபகத்தில் அதைப் பதிய வைக்கும். பின்பு 2 பேதுரு 3:18 செய்யத்தூண்டுவதைச் செய்தவர்களாக, உண்மையில் நீங்கள் அதைக் கற்றிருப்பீர்கள்.
சுறுசுறுப்பாகக் கற்றுக்கொள்தல்
13, 14. விஷயங்களை வெறுமனே பெற்றுக்கொண்டு, ஞாபகத்தில் வைத்திருப்பதைவிட அதிகத்தைச் செய்ய நாம் ஏன் விரும்பவேண்டும்?
13 கற்றுக்கொள்வது, வெறுமனே உண்மைகளை மனதில் பதியவைப்பதை அல்லது செய்தியை மறுபடியும் ஞாபகப்படுத்த முடிவதைவிட அதிகத்தைக் குறிக்கிறது. இயேசுவின் காலத்தில் மதத்தைச் சார்ந்த மக்கள் தங்களுடைய ஒரேமாதிரியான ஜெபங்களை அவ்வாறே செய்தார்கள். (மத்தேயு 6:5-7) ஆனால், குறிப்பினால் அவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டனர்? அவர்கள் நீதியான கனிகளை பிறப்பித்துக்கொண்டிருந்தார்களா? நிச்சயமாகவே இல்லை. (மத்தேயு 7:15-17; லூக்கா 3:7, 8) பிரச்னையின் பாகம் என்னவென்றால், பயன்தரும் விளைவுகளைத் தரும்வகையில் அந்த அறிவு ஆழமாக அவர்களுடைய இருதயங்களுக்குள் பதியாததாகும்.
14 பேதுருவின் பிரகாரம், இது அப்போதும் இப்போதும் கிறிஸ்தவர்களுக்கு வித்தியாசமானதாக இருக்கவேண்டும். அவர் நம் விசுவாசத்தோடே அறிவைக் கூட்டி வழங்கும்படித் துரிதப்படுத்துகிறார். இது நாம் செயலற்று அல்லது கனிகொடாது இருப்பதைத் தவிர்க்க உதவும். (2 பேதுரு 1:5, 8) இது நம் விஷயத்திலும் உண்மையென்று நிரூபிக்கப்படவேண்டும் என்றால், அறிவில் நாம் வளரவேண்டும் என்ற விருப்பம் கொண்டிருக்கவேண்டும், அது நம்முடைய உள்ளான மனுஷனைத் தொட்டு, நம்மை ஆழமாகப் பாதிக்கும்படி நாம் விரும்புகிறோம். அது எப்போதும் ஒருவேளை நடக்காமல் இருக்கலாம்.
15. ஒருசில எபிரெய கிறிஸ்தவர்களிடம் என்ன பிரச்னை உருவாகியது?
15 பவுலின் நாளில், இந்த விஷயத்தைக்குறித்து எபிரெய கிறிஸ்தவர்கள் ஒரு பிரச்னையைக் கொண்டிருந்தனர். யூதர்களாக இருந்ததால், வேதாகம அறிவை சிறிது பெற்றவர்களாக இருந்தனர். அவர்கள், யெகோவாவையும், அவர் எதிர்பார்க்கும் தராதரங்களில் சிலவற்றையும் அறிந்திருந்தனர். பிறகு, மேசியாவைப் பற்றிய அறிவையும் அடைந்து, விசுவாசித்தனர்; கிறிஸ்தவர்களாக முழுக்காட்டப்பட்டனர். (அப்போஸ்தலர் 2:22, 37-41; 8:26-36) மாதங்களுக்கும் வருடங்களுக்கும் மேலாக, கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு அவர்கள் ஆஜராயிருந்திருக்கவேண்டும்; அங்கு அவர்கள் வேதாகமத்தை வாசிப்பதிலும், குறிப்புகள் சொல்வதிலும் பங்குபெற்றிருக்கக்கூடும். ஆயினும், சிலர் அறிவில் வளரவில்லை. பவுல் எழுதினார்: “காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்குத் தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள்.” (எபிரெயர் 5:12) இது எப்படி அப்படியிருக்கக்கூடும்? இது நமக்கும் நடக்கக்கூடுமோ?
16. நிலைவுறைபனி என்றால் என்ன, இது செடிகளை எவ்வாறு பாதிக்கிறது?
16 எடுத்துக்காட்டாக, ஆர்க்டிக் மற்றும் மற்றப் பகுதிகளிலுள்ள நிரந்தரமாக உறைந்துபோன நிலப்பகுதியாகிய, நிலைவுறைபனியை (permafrost) எடுத்துக்கொள்வோம்; அங்கெல்லாம் சராசரி வெப்பநிலை, உறைநிலைக்குக் குறைவானதாகவே இருக்கிறது. மண், பாறைகள், நிலத்தடி நீர் திடப்பொருளாக உறைந்துவிடுகின்றன; சில சமயங்களில் 900 மீட்டர் ஆழத்திற்கும் உண்டாகின்றன. கோடைகாலத்தில், மேற்பரப்பு மண்ணில் (செயல்படும் அடுக்கு என்றழைக்கப்படுகிறது) உருகுதல் நடைபெறக்கூடும். ஆனாலும், உருகிய மண்ணின் இந்த மெல்லிய அடுக்கு பெரும்பாலும் சகதியாக இருக்கிறது, ஏனென்றால் ஈரப்பதம் நிலைவுறைபனிக்குள் கசிந்தொழுக முடிவதில்லை. இந்த மெல்லிய மேல் அடுக்கில் வளரும் தாவரங்கள் பெரும்பாலும் சிறியதாக அல்லது குட்டையாக இருக்கின்றன; அவற்றின் வேர்கள், நிலைவுறைபனியை ஊடுருவிக்கொண்டுப் போகமுடிவதில்லை. ‘என்ன, நிலைவுறைபனிக்கும், நான் பைபிள் சத்தியத்தின் அறிவில் வளர்வதற்கும் சம்பந்தம் இருக்கிறதோ?’ என்று ஒருவேளை நீங்கள் ஆச்சரியப்படலாம்?
17, 18. ஒருசில எபிரெய கிறிஸ்தவர்களிடம் வளர்ந்த ஒன்றை விளக்குவதற்கு நிலைவுறைபனியும், அதன் செயல்படும் அடுக்கும் எவ்வாறு பயன்படுத்தப்படலாம்?
17 திருத்தமான அறிவைப் பெற்றுக்கொண்டு, ஞாபகத்தில் வைத்து, பயன்படுத்துவதில் சுறுசுறுப்பாக ஈடுபடாத மன சக்திகளை உடையவர்களின் நிலையை மிகச் சரியாகவே விளக்குவதாக நிலைவுறைபனி இருக்கிறது. (மத்தேயு 13:5, 20, 21-ஐ ஒப்பிட்டுப்பாருங்கள்.) ஒரு நபர் பைபிள் சத்தியம் உட்பட வேறுபட்ட பாடங்களைக் கற்றுக்கொள்ளும் மனசக்தியை உடையவராக பெரும்பாலும் இருக்கலாம். அவர் “தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை” படித்து, எபிரெய கிறிஸ்தவர்கள் செய்ததுபோலவே முழுக்காட்டப்பட தகுதியுடையவராக ஆகியிருக்கலாம். ஆனாலும், அவர் ‘கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேசங்களுக்கு’ மேலான காரியங்களில் ‘முதிர்ச்சியை நோக்கி முன்னேறுவதை’ ஒருவேளை செய்யாமல் இருக்கலாம்.—எபிரெயர் 5:12; 6:1, NW.
18 முதல் நூற்றாண்டில் இருந்த இப்படிப்பட்ட கிறிஸ்தவர்களில் சிலரை மனதில் கொண்டுவாருங்கள். அவர்கள் ஆஜராகி, விழித்திருந்தனர்; ஆனால் அவர்களுடைய மனங்கள் கற்றுக்கொள்வதில் உட்பட்டிருந்ததா? அவர்கள் சுறுசுறுப்பாகவும், உள்ளப்பூர்வமான முயற்சியோடும் அறிவில் வளர்ந்துகொண்டிருந்தார்களா? ஒருவேளை அப்படி இருந்திருக்கமாட்டார்கள். ஏனென்றால், முதிர்ச்சியற்றவர்களுக்கு, சொல்லப்போனால், கூட்டங்களில் எந்தவித கலந்துகொள்ளுதலும், ஒரு மெல்லிய செயல்படும் அடுக்கில்தான் நடைபெற்றன; ஆனால் உறைந்த ஆழம் கீழே இருந்தது. மனதின் இந்த நிலைவுறைபனிப் பகுதிக்குள், கெட்டியான அல்லது சிக்கலான சத்தியங்களின் வேர்கள் உட்புக முடியவில்லை.—ஏசாயா 40:24-ஐ ஒப்பிடுங்கள்.
19. எந்த முறையில் இன்றைய ஓர் அனுபவமிக்க கிறிஸ்தவர், எபிரெய கிறிஸ்தவர்களைப்போல் ஆகக்கூடும்?
19 ஒரு கிறிஸ்தவனின் நிலைமை இன்று இவ்வாறே இருக்கலாம். கூட்டங்களில் ஆஜராயிருந்தாலும் அந்தச் சமயங்களை அறிவில் வளர்வதற்காகப் பயன்படுத்தாமல் இருக்கலாம். அவற்றில் சுறுசுறுப்பாகப் பங்குகொள்வதைப்பற்றி என்ன? ஒரு புதிய அல்லது இளம் நபருக்கு, ஒரு வசனத்தை வாசிக்கவோ, பாராவிலுள்ள வார்த்தைகளிலே குறிப்புகளைச் சொல்லவோ முன்வருவது அதிக முயற்சியை உட்படுத்தலாம். அவருடைய திறமையின் ஒரு நல்ல போற்றத்தக்க வெளிப்பாடை அது பிரதிபலிக்கும். ஆனால், மற்றவர்களைப்பற்றி, அவர்கள் அறிவில் தொடர்ந்து வளர விரும்பினார்களென்றால், தாங்கள் கிறிஸ்தவர்களாக இருந்த காலப்பகுதியைக் கருத்தில்கொள்கையில், கூட்டத்தில் வெறுமனே பங்குகொள்ளும் ஆரம்ப நிலையைக் காட்டிலும் அதிக முன்னேற்றத்தை அவர்கள் அடையவேண்டும் என்று பவுல் காண்பித்தார்.—எபிரெயர் 5:14.
20. என்ன சுய-பரிசோதனையை நாம் ஒவ்வொருவரும் செய்யவேண்டும்?
20 ஓர் அனுபவமிக்க கிறிஸ்தவன், வெறும் ஒரு பைபிள் வசனத்தை மட்டும் வாசிப்பதிலிருந்து அல்லது பாராவிலிருந்து நேரடியான ஓர் அடிப்படைக் குறிப்பைச் சொல்வதிலிருந்து என்றுமே மேம்பட்டு வளராதவராக இருந்தால், அவருடைய பங்கெடுத்தல் அவருடைய மனதின் மேலோட்டமான ‘செயல்படும் அடுக்கிலிருந்து’ வந்ததாக பெரும்பாலும் இருக்கும். நம்முடைய நிலைவுறைபனி உதாரணத்தைத் தொடர, அவருடைய மனத் திறமையின் ஆழங்கள் ஒவ்வொரு கூட்டத்திலும் நிலைவுறைபனி நிலையில் தொடர்ந்திருக்கும். நாம் நம்மையே இவ்வாறு கேட்கவேண்டும்: ‘அது என்னைக்குறித்தும் அப்படித்தான் இருக்கிறதா? நான் ஒருவிதமான மன நிலைவுறைபனி உருவாகுவதற்கு அனுமதித்திருக்கிறேனா? நான் கற்றுக்கொள்வதில் எவ்வளவு தூரத்திற்கு மனதில் ஜாக்கிரதையுள்ளவனாகவும் அக்கறையுள்ளவனாகவும் இருக்கிறேன்?’ நம்முடைய நேர்மையான பதில்களினால் நாம் அதிருப்தியாய் உணர்ந்தாலுங்கூட, அறிவைப் பெறுவதற்கான படிகளை நாம் இப்போதே எடுக்க ஆரம்பிக்கலாம்.
21. கூட்டங்களுக்குத் தயாரிக்கவோ ஆஜராகியிருக்கவோ முன்னால் கூறப்பட்ட என்ன படிகளை நீங்கள் பொருத்திப் பிரயோகிப்பீர்கள்?
21 பாரா 8-ல் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளைத் தனிப்பட்டவிதத்தில் நாம் பொருத்திப் பிரயோகிக்கலாம். சபையோடு நாம் எவ்வளவோ காலமாகக் கூட்டுறவுகொண்டிருந்தாலும், முதிர்ச்சியை நோக்கி வளர்வதற்கும் அதிகமான அறிவைப்பெறவும் தீர்மானஞ்செய்ய முடியும். சிலருக்கு, அது கூட்டத்திற்கு அதிக ஊக்கமாக தயார்செய்வதை உட்படுத்தும், ஒருவேளை பல வருடங்களுக்கு முன்பு பின்பற்றப்பட்டு, பின்பு சிறிதுசிறிதாக கைவிடப்பட்ட பழக்கங்களைப் புதுப்பிப்பதாக இருக்கலாம். நீங்கள் தயாரிக்கையில், முக்கிய கருத்துகள் எவை என்பதைக் கண்டுகொள்ளவும், நியாயமான வகையில் குறிப்புகளை விளக்க பயன்படுத்தப்படும் அதிகம் அறியப்படாத வசனங்களைப் புரிந்துகொள்ளவும் முயற்சிசெய்யுங்கள். புதிய கோணத்தை அல்லது கருத்தைப் பெறத் தேடி முயற்சிசெய்யுங்கள். இதைப்போலவே, கூட்டத்தின்போது, பாரா 10, 11-ல் சொல்லப்பட்டுள்ள ஆலோசனைகளை உங்களுக்கு நீங்களே பொருத்திப் பிரயோகிக்க முயற்சிசெய்யுங்கள். உங்கள் மனதின் வெப்பநிலையைச் சூடாக வைத்திருக்க விரும்புவதுபோல, மனதில் விழிப்பாய் இருக்க கடும்முயற்சி எடுங்கள். அது ‘நிலைவுறைபனி’ உண்டாக்கும் எந்த மனச்சாய்விற்கும் எதிராகப் போராடும்; இந்த உள்ளப்பூர்வமான முயற்சி, முன்பு உண்டாக்கப்பட்டிருந்த எந்த “உறை” நிலையையும் உருகச்செய்தும்விடும்.—நீதிமொழிகள் 8:12, 32-34.
அறிவு, கனிதரும் ஓர் உதவி
22. நம்முடைய அறிவை அதிகரிப்பதில் நாம் உழைத்தால், எப்படிப் பயனடைவோம்?
22 நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் அறிவிலும், தகுதியற்ற தயவிலும் வளர்ச்சியடையும் இந்த விஷயத்தில் நாம் உழைத்தால், நாம் தனிப்பட்டவிதமாக எவ்வாறு பயனடைவோம்? நம்முடைய மன சக்திகளை விழிப்பாய் வைப்பதற்கும் அறிவைப் பெற்றுக்கொள்ள தயார்நிலையிலிருக்கவும், நாம் உள்ளப்பூர்வமாக எடுக்கும் முயற்சியின்மூலம் புதிய மற்றும் அதிக சிக்கலான பைபிள் சத்தியங்களின் விதைகள் ஆழமான வேர்களை கீழே அனுப்பும்; இதனால் நம்முடைய புரிந்துகொள்ளுதல் அதிகரித்து, நிரந்தரமானதாக மாறும். இயேசு, இருதயங்களைப் பற்றிய ஒரு வித்தியாசமான உதாரணத்தைச் சொன்னதோடு தொடர்புடையதாக இது இருக்கும். (லூக்கா 8:5-12) நல்ல மண்ணில் விழும் விதைகள், தாவரங்களைத் தாங்கும் பலமிக்க வேர்களை வளரச்செய்கின்றன; அது வளர்ந்து, கனிகொடுக்கிறது.—மத்தேயு 13:8, 23.
23. நாம் 2 பேதுரு 3:18-ல் சொல்லப்பட்டதை இருதயத்தில் எடுத்துக்கொள்ளும்போது, என்ன பலன்கள் கிடைக்கும்? (கொலோசெயர் 1:9-12)
23 இயேசுவின் உதாரணம் கொஞ்சம் வித்தியாசப்பட்டது, ஆனாலும் பேதுரு உறுதியளித்ததுபோல, நல்ல பலன்கள் இருந்தன: “உள்ளப்பூர்வமான எல்லா முயற்சியினால், உங்கள் விசுவாசத்தோடே நற்பண்பையும், நற்பண்போடு அறிவையும், . . . கூட்டி வழங்குங்கள். இப்பண்புகள் உங்களுக்குள் உயிருள்ளதாயிருந்து ததும்புமானால், அவை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறியும் திருத்தமான அறிவைப் பொருத்தமட்டில் செயலற்றவர்களாயும் கனியற்றவர்களாயும் உங்களை இருக்கவிடாது.” (2 பேதுரு 1:5-8, NW) ஆம், நாம் அறிவில் வளர்வது, நாம் கனிகொடுப்பவர்களாக இருக்க உதவிசெய்யும். இன்னுமதிக அறிவைப் பெறுவது, எப்போதும் அதிகச் சந்தோஷத்தைக் கொடுப்பதாக இருக்கும் என்று நாம் கண்டுணர்வோம். (நீதிமொழிகள் 2:2-5) நீங்கள் கற்றுக்கொள்வது மிக சீக்கிரத்தில் உங்களால் ஞாபகத்தில் வைக்கப்படும்; சீஷர்களாகும்படி மற்றவர்களுக்கு நீங்கள் கற்பிக்கும்போது அதிகப் பிரயோஜனமானதாக இருக்கும். எனவே, இந்த வழியிலுங்கூட, நீங்கள் அதிக கனிகொடுப்பவராகவும், கடவுளுக்கும் அவருடைய மகனுக்கும் மகிமையைக் கொண்டுவருகிறவராகவும் இருப்பீர்கள். பேதுரு தன்னுடைய இரண்டாம் கடிதத்தை இவ்வாறு முடித்தார்: “நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக.”—2 பேதுரு 3:18.
-
-
உங்கள் தன்னடக்கம் உயிருள்ளதாயும் ததும்பியும் இருப்பதாககாவற்கோபுரம்—1993 | ஆகஸ்ட் 15
-
-
உங்கள் தன்னடக்கம் உயிருள்ளதாயும் ததும்பியும் இருப்பதாக
‘உங்கள் விசுவாசத்தோடே தன்னடக்கத்தையும் கூட்டி வழங்குங்கள்.’—2 பேதுரு 1:5-7, NW.
1. எந்த ஓர் அசாதாரண சூழ்நிலையில் ஒரு கிறிஸ்தவன் சாட்சிக்கொடுக்கக்கூடும்?
இயேசு சொன்னார்: ‘அவர்களுக்குச் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள்.’ (மத்தேயு 10:18) ஓர் ஆளுநருக்கு, நீதிபதிக்கு, அல்லது ஜனாதிபதிக்கு முன்பாக நீங்கள் அழைக்கப்பட்டால், எதைப்பற்றி நீங்கள் பேசுவீர்கள்? ஒருவேளை, நீங்கள் ஏன் அங்கு வந்திருக்கிறீர்கள் என்பதை, உங்கள்மீது சுமத்தப்பட்ட குற்றத்தைச் சொல்வீர்கள். கடவுளுடைய ஆவி அவ்வாறு செய்வதற்கு உங்களுக்கு உதவிசெய்யும். (லூக்கா 12:11, 12) ஆனால் தன்னடக்கத்தைப்பற்றி பேசுவதை உங்களால் கற்பனை செய்யமுடியுமா? நம்முடைய கிறிஸ்தவச் செய்தியின் முக்கிய பாகமாக நீங்கள் அதைக் கருதுகிறீர்களா?
2, 3. (அ) பவுல், பேலிக்ஸ்-க்கும், துருசில்லாவுக்கும் சாட்சிக்கொடுக்கும் நிலைமை எப்படி ஏற்பட்டது? (ஆ) அந்தச் சூழ்நிலைமையில், பவுல் தன்னடக்கம் என்ற பொருளில் பேசியது ஏன் பொருத்தமானதாக இருந்தது?
2 நிஜ வாழ்க்கை மாதிரியைக் கவனியுங்கள். யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் கைதுசெய்யப்பட்டு, விசாரணைக்குக் கொண்டுவரப்பட்டார். பேசுவதற்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டபோது, ஒரு கிறிஸ்தவராக, ஒரு சாட்சியாக, அவருடைய நம்பிக்கைகளைக்குறித்து விளக்குவதற்கு அவர் விரும்பினார். பதிவை நீங்களே ஆராய்ந்துபார்க்கலாம்; அவர், ‘நீதியையும், இச்சையடக்கத்தையும் (தன்னடக்கத்தையும், NW), இனிவரும் நியாயத்தீர்ப்பையும் குறித்த’ வழக்குமன்ற சாட்சியைக் கொடுத்தார் என்று நீங்கள் காண்பீர்கள். செசரியாவிலுள்ள அப்போஸ்தலர் பவுலின் அனுபவத்தைக்குறித்து நாங்கள் குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். அங்கு
-