பாடல் 45
முன்னேறுவீரே!
1. மு-திர்ச்-சி நோக்-கி-யே முன்-னே-று-வீ-ரே!
தி-ற-மை வ-ளர்த்-தே தே-வ சித்-தம் செய்-வீ-ரே,
ஊ-ழி-ய வே-லை-யில் மின்-னி-டு-வீ-ரே,
ஆ-சி பெற்-றி-டு-வீ-ரே.
எல்-லோர்க்-கும் பங்-குண்-டு அ-தி-லே,
ஏ-சு செய்-தார் மு-ழு வீச்-சி-லே;
இ-ட-றி வி-ழா-மல் செய்-வீர் சே-வை-யே,
கேட்-பீர் தே-வன் து-ணை-யே!
2. மு-திர்ச்-சி நோக்-கி-யே முன்-னே-று-வீ-ரே!
எ-திர்ப்-பு வந்-தா-லும் எ-ரி-ம-லை-யா-க-வே!
ப-யந்-து ந-டுங்-கி பின்-வாங்-கா-தீ-ரே,
வீ-டு வீ-டாய் செல்-வீ-ரே.
யா-வர்க்-கும் சாட்-சி சொல்-லு-வீ-ரே;
விண்-ணில் தே-வாட்-சி ம-லர்ந்-த-தே;
ஆ-னந்-த-மா-க நற்-செய்-தி சொல்-வீ-ரே,
யெ-கோ-வா-வைப் பு-கழ்ந்-தே!
3. மு-திர்ச்-சி நோக்-கி-யே முன்-னே-று-வீ-ரே!
உம் தி-றன் வை-ர-மா-கப் பட்-டை தீட்-டு-வீ-ரே;
சே-வை ஏ-ரா-ளம் செய்-து ஜொ-லிப்-பீ-ரே,
தே-வ-னின் சக்-தி-யா-லே!
தொ-டு-வீர் நெஞ்-சத்-தை அன்-பா-லே,
வி-தைப்-பீர் சத்-யம் உள்-ளத்-தி-லே;
மீண்-டும் மீண்-டும் தண்-ணீர் பாய்ச்-சி-டு-வீ-ரே,
நற்-க-னி-கள் காண்-பீ-ரே!
(காண்க: பிலி. 1:27; 3:16; எபி. 10:39.)