பாடல் 58
என் அர்ப்பண ஜெபம்
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. யெ-கோ-வா என் தே-வ-னே,
எந்-தன் நெஞ்-சம் தந்-தே-னே;
எந்-தன் சிந்-தை-யும் தந்-தேன்;
என்-னை-யே அ-ளிக்-கின்-றேன்!
2. என் கு-ரல் உம் கீர்த்-திக்-கே,
என் க-ரம் உம் வே-லைக்-கே,
என் பா-தம் உம் சே-வைக்-கே,
என் உ-யிர் உம் மாண்-புக்-கே!
3. உம் சித்-தம் நான் செய்-வே-னே,
உம் வ-ழி ந-டப்-பே-னே;
என்-னை அர்ப்-ப-ணித்-தே-னே,
ஏற்-றுக்-கொள்-வீர், தே-வ-னே!
(காண்க: சங். 40:8; யோவா. 8:29; 2 கொ. 10:5.)