பாடல் 112
யெகோவாவே தேவாதி தேவன்
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. யெ-கோ-வா ரா-ஜா, தே-வா-தி தே-வா,
விண்-ணை எட்-டும் கீர்த்-திக்-கே
ஏற்-ற-வர் நீர் அல்-ல-வா?
உம் ஆட்-சி-யில்-தாம் நீ-தி மா-றா-தே;
நீ-ரே நித்-ய ரா-ஜா-வே!
2. எங்-கள் குற்-றங்-கள், பா-வம் எல்-லா-மே
மன்-னிப்-பீர் அன்-பா-க-வே;
உம் ம-னம் பொன் அல்-ல-வா?
நீ-தி-யின் தே-வா நீர்-தாம் யெ-கோ-வா;
ஈ-டில்-லா மா-மன்-ன-வா!
3. மாந்-தர், விண்-தூ-தர் உம் பே-ரைத்-தா-னே
போற்-றி-யே பா-டட்-டு-மே.
நிந்-த-னை நீங்-கட்-டு-மே,
விண் ஆட்-சி ஒன்-றே ஈ-டேற்-றும் மண்-ணில்
உம் சித்-தம்-தான் அண்-மை-யில்!
(காண்க: உபா. 32:4; நீதி. 16:12; மத். 6:10; வெளி. 4:11.)