பாடல் 70
‘அதிமுக்கியமானவற்றை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்’
1. வி-வே-கம் காட்-ட இ-து-வே நே-ரம்,
உண்-மை கா-ண ச-ம-யம்!
அ-தி-முக்-ய கார்-யம் எ-து-வென்-று
அ-றிந்-தி-டு-வோம் இன்-று!
‘வே-தம் வா-சி, நன்-மை நே-சி,
தீ-மை வீ-சி,
மா-ம-னம் ம-கி-ழச் செய்;
ஜெ-பம் செய், த்யா-ன-மே செய்’
என்-ற ஆ-ணைப்-ப-டி நாம் செய்-வோம்!
2. தே-வ சே-வை ஈ-டி-ணை-யற்-ற-து,
இ-து-வே சி-றந்-த-து!
அ-ய-லார்-மீ-து அன்-பு காண்-பிப்-போம்,
ஆ-யன் வ-ழி காட்-டு-வோம்;
ஆ-டு-க-ளைத் தே-டி-டு-வோம்,
தேற்-றி-டு-வோம்;
வீ-டு-தோ-றும் ‘வி-மோ-ச-னம்!’ என்-போம்.
முக்-யம் இ-தே,
முத்-தா-ன நற்-செய்-தி சொல்-வ-தே!
3. அ-தி-முக்-ய க-வ-னம் கொ-டுப்-போம்,
நல்-ல சிந்-தை-யைக் காப்-போம்!
தே-வ ச-மா-தா-னம் பெற்-றி-டு-வோம்,
நல் நம்-பிக்-கை பெ-று-வோம்;
மெய் நட்-பு-தான் கிட்-டி-டு-மே,
வ-ள-ரு-மே;
இன்-றி-ய-மை-யா-த-தைச் செய்-தா-லே,
தே-வ ஆ-சி
இன்-றும் என்-று-மே பொ-ழி-யு-மே!
(காண்க: சங். 97:10; மத். 22:37; யோவா. 21:15-17; அப். 10:42.)