பாடல் 84
‘எனக்கு மனமுண்டு’
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. பே-ரன்-பு நி-றைந்-த-வ-ரே,
அப்-பா-வைப் பி-ரிந்-த-வ-ரே,
விண்-ணை விட்-ட-வ-ரே,
மண்-ணின் மைந்-த-ரே,
சத்-யம் சொன்-ன போ-த-க-ரே,
வே-த-னை தீர்த்-த வைத்-ய-ரே,
ஆ-று-தல் தந்-த அன்-ப-ரே,
ஆ-ணை-யை ஏற்-ற ஏ-சு மன்-ன-ரே,
‘ஆம், ம-ன-முண்-டு’ என்-றா-ரே!
2. யெ-கோ-வா ந-மக்-கா-க-வே
வி-வே-க-டி-மை தந்-தா-ரே;
நாம் சேர்ந்-து கை கோர்த்-து,
ஆம், கை கொ-டுத்-து,
எ-ளி-யோர்க்-குத் து-ணை நிற்-போம்;
ஆ-று-தல் வார்த்-தை சொல்-லி-யே,
அன்-பு-டன் அ-ர-வ-ணைப்-போம்;
திக்-கற்-றோர் வேண்-டி-யே கேட்-கும்-போ-து,
‘ஆம், ம-ன-முண்-டு’ என்-போ-மே!
(காண்க: யோவா. 18:37; எபே. 3:19; பிலி. 2:7.)