-
பைபிள் புத்தக எண் 47—2 கொரிந்தியர்‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
-
-
பேசுபவர் அல்ல; மனப்பூர்வமாக சேவிக்கிறவர். அவரை சிபாரிசு செய்வது எந்தவொரு கடிதமும் அல்ல, ஊழியத்தில் அவர் பிறப்பிக்கும் கனிகளே. எனினும், அந்த ஊழியம் நிச்சயமாகவே மகிமை பொருந்தியதுதான்; அதற்காக அவர் அகந்தையுள்ளவராக வேண்டியதில்லை. காரணம், அந்த வல்லமை கடவுளுடையது என தெளிவாய் தெரியும்படிக்கு, அபூரணர்களாக கடவுளுடைய ஊழியர்கள், இந்த ஊழிய பொக்கிஷத்தை எளிதில் உடையும் தன்மையுள்ள மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறார்கள். ஆகவே கடவுளுடைய ஊழியர்கள் எனும் பெரும் பாக்கியத்தை ஏற்பதற்கு மனத்தாழ்மை தேவை. ‘கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாய்ச்’ சேவிப்பது, கடவுள் அருளிய எத்தகைய தகுதியற்ற தயவு! அவ்வாறெனில், ‘கடவுளின் தகுதியற்ற தயவை ஏற்று அதன் நோக்கத்தைத் தவறவிடாதிருக்கும்படி’ கூறும் பவுலின் அறிவுரை எவ்வளவு பொருத்தமானது!—2:14-17; 3:1-5; 4:7; 5:18-20; 6:1.
19. என்னென்ன வழிகளில், இன்றுள்ள கிறிஸ்தவ ஊழியர்களுக்கு, முக்கியமாய்க் கண்காணிகளுக்கு பவுல் மிகச் சிறந்த முன்மாதிரி வைத்தார்?
19 நிச்சயமாகவே, கிறிஸ்தவ ஊழியர்கள் பின்பற்றுவதற்கு மிகச் சிறந்த முன்மாதிரி வைக்கிறார் பவுல். ஒரு காரியமானது, அவர் ஏவப்பட்ட எபிரெய வேதாகமத்தை உயர்வாய் மதித்து, ஆழ்ந்து ஆராய்ந்தார், அதிலிருந்து திரும்பத்திரும்ப மேற்கோள்கள் காட்டினார், மறைமுகமாக அதிலிருந்து குறிப்பிட்டு பேசினார், அவற்றைப் பொருத்தினார். (2 கொ. 6:2, 16-18; 7:1; 8:15; 9:9; 13:1; ஏசா. 49:8; லேவி. 26:12; ஏசா. 52:11; எசே. 20:41; 2 சா. 7:14; ஓசி. 1:10) மேலும், ஒரு கண்காணியாக, அவர் பின்வருமாறு கூறுவதன் மூலம் மந்தையிடமாக தனக்குள்ள ஆழ்ந்த கரிசனையை வெளிக்காட்டினார்: “நானோ உங்கள் ஆத்துமாக்களுக்காக மிகவும் சந்தோஷமாய்ச் செலவுபண்ணுவேன், முழுவதும் செலவாவேன்.” பதிவு தெளிவாய்க் காட்டுகிறபடி, சகோதரர்களுக்காக அவர் தன்னையே முழுமையாய் தியாகம் செய்தார். (2 கொ. 12:15, தி.மொ.; 6:3-10) கொரிந்திய சபையில் அவர் போதிக்கையிலும் சரி, அறிவுரை கூறுகையிலும் சரி, பிரச்சினைகளை சரிசெய்கையிலும் சரி அவர் அயராது உழைத்தார். இருளுடன் கூட்டுறவு வைத்துக்கொள்வதற்கு எதிராக தெள்ளத் தெளிவாய் எச்சரிக்கை விடுத்தார்: “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக” என்று கொரிந்தியருக்குக் கூறினார். அவர் அன்பான கரிசனையை அவர்களிடம் காட்டினார். அதன் காரணமாக, “சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல,” அவர்களுடைய மனம் கெடுக்கப்படுவதைக் காண அவர் விரும்பவில்லை. ஆகவே, “நீங்கள் விசுவாசத்தில் நிலைக்கிறீர்களோவென்று உங்களை நீங்களே சோதித்தறியுங்கள், உங்களையே பரீட்சித்துப்பாருங்கள்” என்று இதயப்பூர்வ அறிவுரை கொடுத்தார். “உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” என்பதைக் காண்பித்து, கிறிஸ்தவ தாராள குணத்தை அவர்களில் தட்டியெழுப்பினார். கடவுளின் அளவற்ற ஈவுக்காக அவருக்கு இதயத்தின் ஆழத்திலிருந்து மனமார்ந்த நன்றியை அவரும் தெரிவித்தார். மெய்யாகவே கொரிந்துவிலிருந்த அவருடைய சகோதரர்கள் பவுலின் இதயமெனும் மாம்ச பலகையின்மீது அன்பில் எழுதப்பட்டவர்களாக இருந்தனர். வைராக்கியத்தோடும், எப்போதும் விழிப்போடும் இருக்கும் கண்காணிக்கு, அவரது தளராத சேவையே நல்ல எடுத்துக்காட்டு. இன்று நமக்கு மிகச் சிறந்த முன்மாதிரி அவர்!—6:14; 11:3; 13:5, தி.மொ.; 9:7, 15; 3:2.
20. (அ) எவ்வாறு பவுல் நம் மனதைச் சரியான விதத்தில் சிந்திக்க வைக்கிறார்? (ஆ) என்ன மகிமையான நம்பிக்கையை இரண்டு கொரிந்தியர் குறிப்பிடுகிறது?
20 சோதனை காலத்தில், ‘கனிவான இரக்கங்களின் பிதாவும், எல்லா ஆறுதலின் கடவுளுமானவரே’ பலத்தின் உண்மையான பிறப்பிடம் என்பதை சுட்டிக்காட்டுவதன் மூலம் அப்போஸ்தலன் பவுல் நம் மனதைச் சரியான விதத்தில் சிந்திக்க வைக்கிறார். அவருடைய புதிய உலகில் இரட்சிப்படைவதற்கு நாம் சகித்து நிலைத்திருக்கும்படி ‘நம்முடைய எல்லா உபத்திரவத்திலும் நம்மை ஆறுதல்படுத்துகிறவர்’ அவரே. “கடவுளிடமிருந்து ஒரு கட்டடம், கையாலமைக்கப்படாத நித்திய வீடு, பரலோகத்தில்” இருப்பதன் மகிமையான நம்பிக்கையையும் பவுல் குறிப்பிடுகிறார். “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான்; பழையன ஒழிந்துபோயின, இதோ, புதிதாயின” என்று சொல்கிறார். உண்மையிலேயே, பவுலைப் போல் பரலோக ராஜ்யத்தைச் சுதந்தரிக்கப் போகிறவர்களுக்கு உறுதியளிக்கும் அருமையான வார்த்தைகள் இரண்டு கொரிந்தியரில் அடங்கியுள்ளன.—1:3, 4, NW; 5:1, 17, தி.மொ.
-
-
பைபிள் புத்தக எண் 48—கலாத்தியர்‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
-
-
பைபிள் புத்தக எண் 48—கலாத்தியர்
எழுத்தாளர்: பவுல்
எழுதப்பட்ட இடம்: கொரிந்து அல்லது சீரியா அந்தியோகியா
எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச. 50-52
1. கலாத்தியர் எந்தெந்த சபைகளுக்காக எழுதப்பட்டிருக்கிறது, அவை எவ்வாறு, எப்போது ஸ்தாபிக்கப்பட்டன?
கலாத்திய சபைகளுக்கு என குறிப்பிட்டு கலாத்தியர் 1:2-ல் பவுல் எழுதுகையில் அவை, பிசீதியா நாட்டு அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா, தெர்பை ஆகியவற்றை உட்படுத்துவது தெரிகிறது. இச்சபைகள் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்தாலும் எல்லாம் ரோம மாகாணத்துக்குள் இருந்தன. இந்தப் பிரதேசத்தின் வழியாக பவுலும் பர்னபாவும் மேற்கொண்ட முதல் மிஷனரி பயணத்தைப் பற்றி அப்போஸ்தலர் 13-ம் 14-ம் அதிகாரங்கள் குறிப்பிடுகின்றன; இதுவே கலாத்திய சபைகள் ஸ்தாபிக்கப்படுவதற்கு வழிநடத்தியது. இச்சபைகளில் யூதரும் யூதரல்லாதவர்களும் இருந்தனர்; கெல்ட்டிய இனத்தவர்கள் அல்லது கால் நாட்டினரும் அங்கிருந்தனர் என்பதில் சந்தேகமில்லை. இது ஏறக்குறைய பொ.ச. 46-ல் பவுல் எருசலேமுக்குச் சென்று சிறிது காலத்துக்குப் பின்பாகும்.—அப். 12:25.
2. (அ) கலாத்தியாவில் பவுலின் இரண்டாவது பயணத்தால் கிடைத்த பலன் என்ன, ஆனால் அதைத் தொடர்ந்து என்ன நடந்தது? (ஆ) இதற்கிடையில், பவுல் எவ்வாறு தன் பயணத்தைத் தொடர்ந்தார்?
2 பொ.ச. 49-ல், பவுல் தன் இரண்டாவது மிஷனரி பயணத்தை சீலாவோடு சேர்ந்து கலாத்திய பிராந்தியத்தில் தொடங்கினார்.
-