உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • பைபிள் புத்தக எண் 49—எபேசியர்
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
    • ஏன் பயனுள்ளது

      16. எபேசியரில் என்ன கேள்விகளுக்கு நடைமுறையான பதில்கள் காணப்படுகின்றன, கடவுளுக்குப் பிரியமான ஆள்தன்மையைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது?

      16 எபேசியருக்கு எழுதப்பட்ட இந்த நிருபம் கிறிஸ்தவனுடைய வாழ்க்கையின் ஏறக்குறைய எல்லா அம்சங்களையும் குறிப்பிடுகிறது. நம் நாளில் பெருகி வரும் கடுந்துயரமிக்க பிரச்சினைகளையும் உலகில் காணப்படும் தீய செயல்களையும் காண்கையில், பவுலின் சிறந்த நடைமுறையான ஆலோசனை, தேவபக்தியுள்ள வாழ்க்கை வாழ விரும்புவோருக்கு உண்மையிலேயே பயனுள்ளது. பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடமாகவும், பெற்றோர் பிள்ளைகளிடமாகவும் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? தன் மனைவியிடமாக கணவனுக்கும், தன் கணவனிடமாக மனைவிக்கும் உள்ள பொறுப்புகள் என்ன? பொல்லாத உலகின் மத்தியிலும் அன்போடு ஒற்றுமையையும் கிறிஸ்தவ தூய்மையையும் காத்துக்கொள்ள சபையிலுள்ள ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும்? பவுலின் அறிவுரை இந்தக் கேள்விகள் எல்லாவற்றிற்கும் பதிலளிக்கிறது. மேலும் புதிய கிறிஸ்தவ ஆள்தன்மையைத் தரித்துக்கொள்வதில் என்ன உட்பட்டிருக்கிறது என்பதையும் பவுல் தொடர்ந்து காட்டுகிறார். எபேசியரைப் படிப்பதன் மூலம், கடவுளுக்குப் பிரியமானதும் “உண்மையான நீதியிலும் பற்றுறுதியிலும் கடவுளுடைய சித்தத்திற்கிசைய உண்டாக்கப்பட்”டிருப்பதுமான இந்த வகையான ஆள்தன்மைக்கு உண்மையான மதித்துணர்வை எல்லோராலும் காட்ட முடியும்.​—⁠4:​24-32, NW; 6:​1-4; 5:​3-5, 15-20, 22-33.

      17. சபையின் ஏற்பாடுகளுடன் ஒத்துழைப்பது சம்பந்தமாக எபேசியர் நிருபம் என்ன காட்டுகிறது?

      17 சபையில் நியமிப்புகளும் பொறுப்புகளும் அளிக்கப்படுவதன் நோக்கத்தையும் இந்த நிருபம் சுட்டிக்காட்டுகிறது. முதிர்ச்சியை மனதில் கொண்டு, “பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்” இவ்வாறு செய்யப்படுகிறது. இந்தச் சபை ஏற்பாடுகளுடன் சேர்ந்து முழுமையாய் ஒத்துழைப்பதன் மூலம், ஒரு கிறிஸ்தவர் ‘தலையாகிய கிறிஸ்துவுக்குள் அன்பினால் எல்லாவற்றிலேயும் வளரலாம்.’​—⁠4:​12, 15.

      18. ‘பரிசுத்த இரகசியத்தையும்,’ ஆவிக்குரிய ஆலயத்தையும் பற்றி எது தெளிவாக்கப்பட்டிருக்கிறது?

      18 ‘கிறிஸ்துவின் பரிசுத்த இரகசியத்தைப்’ பற்றிய ஆரம்ப கால சபையின் புரிந்துகொள்ளுதலை மேலும் தெளிவாக்குவதில் எபேசியருக்கு எழுதின இந்த நிருபம் அதிக பயனுள்ளதாக இருந்தது. விசுவாசிகளான யூதர்களோடுகூட “புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன் சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்”கும்படி அழைக்கப்பட்டிருந்தார்கள் என்று இதில் தெளிவாக்கப்பட்டது. புறஜாதியானை யூதனிலிருந்து தடுத்து வைத்திருந்த “சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாண”மெனும் தடுப்புச்சுவர் முற்றிலும் நீக்கப்பட்டது. இப்போது கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம், எல்லாரும் பரிசுத்தவான்களோடுகூட உடன் பிரஜைகளும் கடவுளுடைய வீட்டாரின் அங்கத்தினர்களுமாகி உள்ளனர். புறமத அர்டிமிஸின் கோவிலுக்கு நேர்மாறாக, இவர்கள் தம்முடைய ஆவியின்மூலம் வாசம் செய்வதற்கு, ‘யெகோவாவுக்கு ஒரு பரிசுத்த ஆலயமாக’ கிறிஸ்து இயேசுவுடன் ஐக்கியத்தில் ஒன்றாய்க் கட்டப்பட்டு வந்தார்கள்.​—⁠3:​3, 6; 2:​15, 21, NW.

      19. எபேசியர் என்ன நம்பிக்கையையும் உற்சாகமூட்டுதலையும் இந்நாள்வரை தொடர்ந்து அளித்து வருகிறது?

      19 ‘இந்தப் பரிசுத்த இரகசியத்தைக்’ குறித்து ‘வானங்களிலுள்ளவையும் [பரலோக ராஜ்யத்திற்காக தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்] பூமியிலுள்ளவையுமான [ராஜ்ய ஆட்சியில் பூமியில் வாழவிருப்போர்] எல்லாக் காரியங்களையும் கிறிஸ்துவில் மறுபடியும் ஒன்றாகக் கூட்டிச் சேர்க்கும் . . . ஒரு நிர்வாகத்தைப்’ பற்றி பவுல் பேசினார். இவ்வாறு சமாதானத்தையும் ஒற்றுமையையும் திரும்ப நிலைநாட்டுவதற்கான கடவுளின் மகத்தான நோக்கம் முக்கியப்படுத்திக் காட்டப்பட்டிருக்கிறது. எபேசியருடைய இதயம் அறிவொளியூட்டப்பட்டிருந்தது. அவர்கள், கடவுள் அழைத்திருந்த அந்த அழைப்பின் நம்பிக்கையை இன்னும் முழுமையாய் புரிந்துகொண்டு, ‘பரிசுத்தவான்களுக்கு ஒரு சுதந்தரமாக அவர் வைத்திருக்கிற அந்த மகிமையான ஐசுவரியங்கள் என்னவென்று’ காண வேண்டுமென பவுல் ஜெபித்தார். இந்த வார்த்தைகள் அவர்களுடைய நம்பிக்கையில் அவர்களை வெகுவாய் உற்சாகமூட்டியிருக்க வேண்டும். ‘கடவுள் கொடுக்கும் எல்லா நிறைவாலும் நாம் நிரப்பப்படும்படி,’ எபேசியருக்கு எழுதின ஏவப்பட்ட இந்த நிருபம் இந்நாளிலும் சபைகளை தொடர்ந்து கட்டியெழுப்பி வருகிறது.​—⁠1:9-11, 18; 3:​19; NW.

  • பைபிள் புத்தக எண் 50—பிலிப்பியர்
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
    • பைபிள் புத்தக எண் 50—பிலிப்பியர்

      எழுத்தாளர்: பவுல்

      எழுதப்பட்ட இடம்: ரோம்

      எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச. 60-61

      1. (அ) நற்செய்தியை பிலிப்பியர் எவ்வாறு கேள்விப்பட்டனர்? (ஆ) பிலிப்பி நகரத்தைப் பற்றிய என்ன சரித்திர சூழமைவு ஆர்வத்திற்குரியது?

      நற்செய்தியை மக்கெதோனியாவில் அறிவிக்கும்படியான அழைப்பை அப்போஸ்தலன் பவுல் தரிசனத்தில் பெற்றார்; அவரும் அவருடைய தோழர்களான லூக்கா, சீலா, இளைஞனான தீமோத்தேயு ஆகியோரும் உடனடியாக அந்த அழைப்பிற்கு கீழ்ப்படிந்தனர். ஆசியா மைனரிலுள்ள துரோவாவிலிருந்து நெயாப்போலிக்கு அவர்கள் கப்பலில் சென்றனர். அங்கிருந்து ஏறக்குறைய 15 கிலோமீட்டர் தொலைவில் உள்நாட்டுக்குள் அமைந்திருந்த பிலிப்பிக்கு மலைப்பாதையில் உடனடியாக பயணப்பட்டனர். அது, ‘மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ஒன்றிற்குத் தலையானது’ என லூக்கா விவரித்திருக்கிறார். (அப். 16:​12) பொ.ச.மு. 356-⁠ல் இந்த நகரத்தை மக்கெதோனியாவின் அரசன் இரண்டாம் பிலிப்பு (மகா அலெக்ஸாந்தரின் தகப்பன்) கைப்பற்றினார்; பின்பு இந்த நகரத்திற்கு பிலிப்பி என பெயரிடப்பட்டது. பின்னால் இதை ரோமர் கைப்பற்றினர். அதிகாரத்தை பலப்படுத்திக் கொள்ள ஆக்டேவியனுக்கு உதவிய மிக முக்கியமான போர்கள் பொ.ச.மு. 42-⁠ல் இந்த இடத்தில் நடந்தன. இவரே பின்னர் அகஸ்து இராயன் என அழைக்கப்பட்டார். தன் வெற்றியின் நினைவாக, பிலிப்பியை இவர் ரோம குடியேற்றத்திற்கு உரியதாக்கினார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்