பாட்டு 19
நாள் முழுதும் மகிழ்ச்சி
1. பூரிப்போம்! மகிழ்வோம்!
தேவதயைதிளைப்போம்.
ஆனந்தம் நாளெல்லாம்
எவ்வேலையிலும் காண்போம்.
குறைவேதுமில்லை,
ஆதரிப்பாரே.
நாம் இன்னும் கேட்க வேண்டியதென்ன?
மனசாந்தி, திருப்தி, தன்னிறைவு உண்டு,
தேவனுக்கு நெருங்கியிருக்க முயன்று.
களிகூருகிறோம்,
விலகமாட்டோம்,
மகிழ்ந்து கனிகள் அறுக்கிறோம்.
2. ராஜ்யத்தின் சத்தியம்
மீட்டதால் மகிழ்வோமே,
தேவனின் குமாரன் கட்டளைகள் கேட்போமே.
தம் இரத்தத்தால் மீட்டார்,
தாமும்கற்பித்தார்,
இவர்மூலம் தேவன் நம்மைத்தேர்ந்தார்.
இவர்ராஜ்யம் இதோ,
ஒப்பில்லா மகிழ்ச்சியே.
“விசாரணைக்காரன்” கவனிப்பில்வைத்தாரே.
ஒளியூட்டப்பட்டோம்,
நம்பிக்கைபெற்றோம்,
இதையாவர்க்கும் பகிர்ந்திடுவோம்.
3. பிரசங்கம்செய்வது
பேரானந்தத்தின் ஊற்றே.
செம்மறி ஆட்களைக்
காண்பதில் மகிழ்ச்சியே.
சகோதரர் நேசித்து வரவேற்போம்,
ஏகசிந்தையின் அமைதி காண்போம்.
நாள் முழுதும் ராஜ்யம்
அறிவித்தல் மகிழ்ச்சி.
திரள்கூட்டம் தோன்ற,
பாரும் அதன் வளர்ச்சி!
யெகோவா போஷிப்பார் வழிநடத்தி,
ஏறெடுப்போம் அவருக்கே துதி.