-
பைபிள் புத்தக எண் 54—1 தீமோத்தேயு‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
-
-
பாத்திரனாயிருக்கிறான் என்றும் வேதவாக்கியம் சொல்லுகிறதே.”—1 தீ. 5:1-3, 9, 10, 19-21, 17, 18; உபா. 25:4; லேவி. 19:13.
19. ராஜ்ய நம்பிக்கை எவ்வாறு வலியுறுத்தப்படுகிறது, இதன் அடிப்படையில் என்ன அறிவுரை கொடுக்கப்படுகிறது?
19 இப்படிப்பட்ட அறிவுரைகளை அளித்ததற்கு பிறகு, ‘அரசர்களாக ஆளுவோரின் அரசராகவும் கர்த்தாக்களாக ஆளுவோரின் கர்த்தராகவும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படும் வரையில்’ மாசில்லாமலும் குற்றமில்லாமலும் இந்தக் கட்டளையைக் கைக்கொள்ள வேண்டுமென்று பவுல் கூறுகிறார். இந்த ராஜ்ய நம்பிக்கையின் அடிப்படையில், கிறிஸ்தவர்களுக்குப் பின்வரும் சக்திவாய்ந்த அறிவுரை கொடுப்பதோடு இந்த நிருபம் முடிகிறது: “நன்மைசெய்யவும் நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும் தாராளமாய்க் கொடுக்கிறவர்களும் உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும், உண்மையில் ஜீவனாயிருப்பதைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் வேண்டும்.” (1 தீ. 6:14, 15, 18, 19, தி.மொ.) தீமோத்தேயுவுக்கு எழுதிய முதலாம் நிருபத்தின் அறிவுரைகள் நிச்சயமாகவே நன்மையளிக்கின்றன!
-
-
பைபிள் புத்தக எண் 55—2 தீமோத்தேயு‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
-
-
பைபிள் புத்தக எண் 55—2 தீமோத்தேயு
எழுத்தாளர்: பவுல்
எழுதப்பட்ட இடம்: ரோம்
எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச. 65
1. ஏறக்குறைய பொ.ச. 64-ல் ரோமில் என்ன துன்புறுத்துதல் எழும்பியது, என்ன காரணத்திற்காக?
பவுல் மறுபடியும் ரோமில் கைதியாக இருந்தார். எனினும், இந்த இரண்டாவது சிறையிருப்பின் சூழ்நிலைமைகள் முதலில் இருந்ததைப் பார்க்கிலும் கடுமையாக இருந்தன. இது பொ.ச. 65 ஆக இருக்கலாம். பொ.ச. 64 ஜூலையில் ரோம் நகரமே தீப்பற்றி எரிந்து பெரிய நாசத்தை ஏற்படுத்தியது. அந்த நகரத்தின் 14 பிராந்தியங்களில் 10-ல் மிகுதியான சேதம் ஏற்பட்டிருந்தது. பேரரசன் நீரோவின், “கட்டளையால்தான் அந்தப் பெருந் தீ ஏற்பட்டது என்று பரவியிருந்த கெட்ட எண்ணத்தை அகற்ற முடியவில்லை. இந்த எண்ணத்தை மாற்றுவதற்கு, பொது ஜனங்களால் அப்போது அருவருப்பாக கருதப்பட்ட கிறிஸ்தவர்கள் மீது குற்றப்பழியை நீரோ சுமத்தி கடுமையாக சித்திரவதை செய்தான். . . . நகரத்துக்குத் தீ வைத்த குற்றவாளிகளாக மட்டுமல்ல மனிதகுலத்தையே வெறுக்கும் ஆட்கள் என்பதாகவும் அநேகர் தீர்ப்பளிக்கப்பட்டனர். அவர்களுடைய மரண தண்டனையின்போது எல்லா வகையிலும் ஏளனம் செய்யப்பட்டனர். மிருகங்களின் தோல்கள் போர்த்தப்பட்டு, நாய்களால் கடித்திழுக்கப்பட்டு கொல்லப்பட்டனர். சிலுவைகளில் அறையப்பட்டனர், அல்லது தீயில் எரிக்கப்பட்டனர். இரவில் வெளிச்சத்திற்காக எரிக்கப்பட்டனர். இந்தக் கொடுமைகளை நிறைவேற்ற நீரோ தன்னுடைய தோட்டங்களை கொடுத்தான் . . . ஓர் இரக்க உணர்ச்சி எழும்பிற்று. பொது ஜனங்களின் நன்மைக்காக அல்ல ஒரு மனிதனின் கொடூரத்தால்தான் அவர்கள் அழிக்கப்பட்டனர்” என்று ரோம சரித்திராசிரியனாகிய டாஸிட்டஸ் குறிப்பிடுகிறார்.”a
2. இரண்டு தீமோத்தேயுவை எந்த சூழ்நிலையில் பவுல் எழுதினார், ஏன் ஒநேசிப்போருவைப் பற்றி நன்றியுணர்வோடு பேசுகிறார்?
2 ரோமில் வன்முறையான இந்த துன்புறுத்துதல் நடந்துகொண்டிருந்த சமயத்தில்தான் பவுல் இரண்டாவது முறை கைதியாக இருந்திருக்க வேண்டும். இந்தச் சமயம் சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தார். விடுதலை செய்வார்கள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை, முடிவான தீர்ப்புக்காகவும் மரண தண்டனைக்காகவும் காத்திருந்தார். மிகச் சிலரே பார்க்க வந்தனர். ஒருவன் தன்னை கிறிஸ்தவனாக வெளிப்படையாய் காட்டிக்கொண்டால் அப்போதே கைதுசெய்யப்பட்டு வதைத்துக் கொல்லப்படும் வாய்ப்பு இருந்தது. இதனால்தான், எபேசுவிலிருந்து பார்க்க வந்தவரைக் குறித்து நன்றியுணர்வோடு பவுல் எழுதினார்: “ஒநேசிப்போருவின் வீட்டாருக்குக் கர்த்தர் இரக்கங் கட்டளையிடுவாராக; அவன் அநேகந்தரம் என்னை இளைப்பாற்றினான்; என் விலங்கைக்குறித்து அவன் வெட்கப்படவுமில்லை; அவன் ரோமாவில் வந்திருந்தபோது அதிக ஜாக்கிரதையாய் என்னைத் தேடிக் கண்டுபிடித்தான்.” (2 தீ. 1:16, 17) மரணம் நெருங்கும் நிலைமையிலும் ‘கிறிஸ்து இயேசுவுக்குள்ளிருக்கிற ஜீவனைப் பற்றிய வாக்குத்தத்தத்திற்கிசையக் கடவுளின் சித்தத்தினாலே கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலன்’ என்று தன்னை குறிப்பிடுகிறார். (1:1, தி.மொ.) கிறிஸ்துவோடு வாழ்வதற்கான வாய்ப்பு தனக்கு காத்திருப்பதை பவுல் அறிந்திருந்தார். அக்காலத்தில் அறியப்பட்ட உலகத்தின் முக்கிய நகரங்கள் பலவற்றிலும், எருசலேமிலிருந்து ரோம் வரையாகவும், ஒருவேளை ஸ்பானியா வரையாகவுங்கூட அவர் பிரசங்கித்தார். (ரோ. 15:24, 28) இறுதி வரை உண்மையுடன் தன் ஓட்டத்தை ஓடி முடித்தார்.—2 தீ. 4:6-8.
3. இரண்டு தீமோத்தேயு எப்போது எழுதப்பட்டது, அதுமுதல் எல்லா கிறிஸ்தவர்களுக்கும் அது எவ்வாறு பயனளித்திருக்கிறது?
3 பவுல் இரத்த சாட்சியாய் மரிப்பதற்கு சற்றுமுன்பு, சுமார் பொ.ச. 65-ல் இந்த நிருபம் எழுதப்பட்டிருக்கலாம். தீமோத்தேயு இன்னும் எபேசுவில்தான் இருந்திருக்க வேண்டும், ஏனெனில் அங்கிருக்கும்படி பவுல் அவரை ஊக்கப்படுத்தியிருந்தார். (1 தீ. 1:4) சீக்கிரமாய் வரும்படி பவுல் தீமோத்தேயுவை இருமுறை அவசரப்படுத்துகிறார்; அவரோடு மாற்குவை அழைத்துவரும்படியும், துரோவாவில் தான் விட்டுவந்திருந்த மேலங்கியையும் புத்தக சுருள்களையும் கொண்டுவரும்படியும் கேட்கிறார். (2 தீ. 4:9, 11, 13, 21) மிகவும் நெருக்கடியான சமயத்தில் எழுதப்பட்ட இந்த நிருபம் தீமோத்தேயுவை மிகச் சிறந்த முறையில் உற்சாகப்படுத்தியது. அது முதற்கொண்டு வாழ்ந்த எல்லா உண்மை கிறிஸ்தவர்களுக்கும் பயனுள்ள உற்சாகத்தை தொடர்ந்து அளித்துவந்திருக்கிறது.
4. இரண்டு தீமோத்தேயு நம்பத்தக்கது, பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலைச் சேர்ந்தது என்பதை எது நிரூபிக்கிறது?
4 இரண்டு தீமோத்தேயு நம்பத்தக்கது மற்றும் பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலைச் சேர்ந்தது. இதற்கு ஒன்று தீமோத்தேயு புத்தகத்திற்காக கொடுக்கப்பட்ட காரணங்களே போதுமானது.
-