-
பைபிள் புத்தக எண் 57—பிலேமோன்‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
-
-
கிறிஸ்தவர்கள் இன்று எதிர்பார்க்கப்படுகின்றனர். தனக்கு சொந்தமான அடிமையை பிலேமோன் தன் விருப்பப்படி தண்டிக்கலாம். அதற்கு சட்டப்படி அவருக்கு உரிமையிருந்தது; இருந்தும் அவர் அந்த அடிமையை மன்னிப்பது சாத்தியமென்றால் குற்றம் செய்யும் ஒரு சகோதரனை கிறிஸ்தவர்கள் மன்னிக்க முடியும்; ஏனெனில் இது அதைப் பார்க்கிலும் மிக எளிய காரியமே.
10. யெகோவாவின் ஆவி செயல்படுவது பிலேமோனுக்கு எழுதிய நிருபத்தில் எவ்வாறு வெகு தெளிவாகிறது?
10 யெகோவாவின் ஆவி செயல்படுவது பிலேமோனுக்கு எழுதப்பட்ட இந்த நிருபத்தில் வெகு தெளிவாகிறது. கடினமான ஒரு பிரச்சினையை திறம்பட்ட விதத்தில் பவுல் கையாண்டதை இது வெளிப்படுத்தியிருக்கிறது. மற்றவர்களுடைய உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பது, கனிவான பாசத்தை காட்டுவது, உடன் கிறிஸ்தவனில் நம்பிக்கை வைப்பது ஆகியவற்றை பவுல் வெளிப்படுத்தியதிலிருந்து இது தெளிவாகிறது. மற்ற வேதவாக்கியங்களைப்போல் பிலேமோனுக்கு எழுதிய நிருபம் கிறிஸ்தவ நியமங்களைக் கற்பிக்கிறது. இது கிறிஸ்தவ ஒற்றுமையை ஊக்குவிக்கிறது, ‘பரிசுத்தவான்களுக்குள்’ நிரம்பியிருக்கும் அன்பையும் விசுவாசத்தையும் உயர்த்திக் காட்டுகிறது. கடவுளுடைய ராஜ்யத்தில் நம்பிக்கை வைக்கும் இவர்கள் யெகோவாவின் தயவை தங்கள் நடத்தையில் காட்டுகின்றனர்.—வச. 5.
-
-
பைபிள் புத்தக எண் 58—எபிரெயர்‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
-
-
பைபிள் புத்தக எண் 58—எபிரெயர்
எழுத்தாளர்: பவுல்
எழுதப்பட்ட இடம்: ரோம்
எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச. 61
1. தனக்கு அளிக்கப்பட்ட எந்த பொறுப்புக்கு இசைவாக பவுல் இந்த நிருபத்தை எபிரெயருக்கு எழுதினார்?
“புறஜாதிகளுக்கு” அப்போஸ்தலன் என பவுல் நன்கு அறியப்பட்டிருக்கிறார். அப்படியென்றால் அவர் யூதரல்லாதவர்களிடம் மட்டுமே ஊழியம் செய்தாரா? இல்லவேயில்லை! பவுல் முழுக்காட்டப்பட்டு ஊழியத்திற்காக அனுப்பப்படுவதற்கு முன்பு அவரைக் குறித்து கர்த்தராகிய இயேசு அனனியாவிடம், ‘அவன் [பவுல்] புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்’ என்று சொன்னார். (அப். 9:15; கலா. 2:8, 9) இயேசுவின் பெயரை இஸ்ரவேல் புத்திரருக்கு அறிவிப்பதும் பவுலுடைய ஊழியத்தின் பாகமாக இருந்தது; எனவே எபிரெயர் புத்தகத்தை அவர் எழுதியது பொருத்தம்தான்.
2. எபிரெயரை பவுல் எழுதினார் என்பதை சந்தேகிக்கும் விவாதங்களை எவ்வாறு தவறென நிரூபிக்கலாம்?
2 எனினும், எபிரெயர் புத்தகத்தை பவுல்தான் எழுதினார் என்பதை சில விமர்சகர்கள் சந்தேகிக்கின்றனர். பவுலின் பெயர் இந்த நிருபத்தில் குறிப்பிடப்படவில்லை என்பது ஒரு காரணம். இது உண்மையில் ஒரு பிரச்சினை அல்ல. அதிகாரப்பூர்வ பட்டியலிலுள்ள அநேக புத்தகங்களில் எழுத்தாளருடைய பெயர் காணப்படுவதில்லை. ஆனால் எழுத்தாளரின் எழுத்துநடை போன்ற பைபிள் சார்ந்த அத்தாட்சியால் எழுத்தாளரை அநேக சந்தர்ப்பங்களில் அடையாளம் காண முடிகிறது. பவுலின் பெயரை கேட்டாலே ஜனங்களுக்கு வெறுப்பு ஏற்படும்படி யூதேயாவில் இருந்த சில யூதர்கள் செய்திருந்தனர். எனவே, யூதேயாவிலிருந்த எபிரெய கிறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதும்போது தன் பெயரை வேண்டுமென்றே குறிப்பிடாமல் இருந்திருக்கலாம் என்பது சிலரின் கருத்து. (அப். 21:28) இதைப் போலவே பவுலுடைய எழுத்துநடை மற்ற நிருபங்களின் எழுத்துநடையிலிருந்து மாறியிருந்தாலும் அவர்தான் எழுத்தாளர் என்பதில் சந்தேகமில்லை. புறமதத்தாரிடமோ யூதரிடமோ அல்லது கிறிஸ்தவர்களிடமோ நற்செய்தியை பகிர்ந்து கொள்ளும்போது ‘எல்லாருக்கும் எல்லாமாகும்’ திறமை பவுலுக்கு எப்போதும் இருந்தது. நியாய விவாதங்களை அவர்கள் முழுமையாய்ப் புரிந்துகொண்டு மதிப்பதற்காகவே, ஒரு யூதன் மற்ற யூதர்களுக்கு விளக்குவதாக அவரது விளக்கங்கள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன.—1 கொ. 9:22.
3. எபிரெயரை பவுல் எழுதினார் என்பதை ஆதரித்து, அவர் முக்கியமாய் யூதருக்காக எழுதினார் என்பதை என்ன பைபிள் சார்ந்த அத்தாட்சி காட்டுகிறது?
3 பவுலே இந்தப் புத்தகத்தின் எழுத்தாளர் என்பதற்கு பைபிள் சார்ந்த அத்தாட்சி முழுமையான ஆதரவளிக்கிறது. இதன் எழுத்தாளர் இத்தாலியில் இருந்தார், தீமோத்தேயுவுடன் அவருக்கு கூட்டுறவு இருந்தது. இந்த உண்மைகள் பவுலுக்குப் பொருந்துகிறது. (எபி. 13:23, 24) மேலும், விவாதங்கள் யூத நோக்குநிலையிலிருந்து அளிக்கப்பட்டிருந்தாலும் கோட்பாடுகளை விளக்கும் விதம் பவுலின் பாணியில் இருக்கிறது. எனவே எபிரெய சபைக்காகவே எழுதப்பட்ட இந்தக் கடிதம் அவர்களது அக்கறையை தூண்டும் வகையில் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தில், கிளார்க்கின் கமென்டரி தொ. 6, பக்கம் 681, எபிரெயர் நிருபத்தைக் குறித்து இவ்வாறு சொல்கிறது: “இது யூதருக்குத்தான் எழுதப்பட்டது என்பதை இந்த நிருபத்தின் முழு அமைப்பும் நிரூபிக்கிறது. இது ஒருவேளை புறஜாதியாருக்கு எழுதப்பட்டிருந்தால் அவர்களில் பத்தாயிரத்தில் ஒருவர்கூட அந்த விவாதத்தைப் புரிந்துகொண்டிருக்க முடியாது; ஏனெனில் அவர்களுக்கு யூத ஒழுங்குமுறையைப் பற்றி எதுவும் தெரியாது. அதை வாசிப்பவர்களுக்கு இப்படிப்பட்ட அறிவு இருக்கிறது என்பதன் அடிப்படையில்தான் எழுத்தாளர் முழு நிருபத்தையும் எழுதியிருக்கிறார்.” இதன் மூலம், பவுலின் மற்ற நிருபங்களிலிருந்து எழுத்துநடை ஏன் வேறுபடுகிறது என்பதற்கான காரணத்தை விளங்கிக் கொள்ள முடியும்.
4. எபிரெயரின் எழுத்தாளர் பவுலே என்பதற்கு என்ன கூடுதல் அத்தாட்சி உள்ளது?
4 பவுல்தான் இந்த நிருபத்தின் எழுத்தாளர் என்பதற்கு கூடுதல் அத்தாட்சியை செஸ்டர் பியட்டி பப்பைரஸ் சுவடி எண் 2 (P46) அளித்திருக்கிறது; இந்தச் சுவடி ஏறக்குறைய 1930-ல் கண்டுபிடிக்கப்பட்டது. பவுல் மரணமடைந்து கிட்டத்தட்ட நூற்றைம்பது ஆண்டுகளுக்குப்பின் இந்த பப்பைரஸ் எழுதப்பட்டது. இந்தப் பப்பைரஸ் சுவடியைப் பற்றி, பிரிட்டனைச் சேர்ந்த மூலவாக்கிய
-