-
பைபிள் புத்தக எண் 56—தீத்து‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
-
-
ஏன் பயனுள்ளது
8. தீத்துவுக்கு எழுதிய நிருபத்திலுள்ள பவுலின் அறிவுரையில் எது இன்று நமக்கு ‘நன்மையும் பிரயோஜனமுமாயிருக்கிறது,’ ஏன்?
8 பொய் சொல்லுதல், ஒழுக்கக்கேடு, பேராசை நிரம்பிய ஒரு சூழலில் கிரேத்தா தீவு கிறிஸ்தவர்கள் வாழ்ந்தனர். கூட்டத்தோடு கூட்டமாக அவர்களும் அப்படியே ஆக வேண்டுமா? அல்லது யெகோவா தேவனுக்கென்று பரிசுத்தமாக்கப்பட்ட ஜனமாக சேவிப்பதற்கு தங்களை முழுவதுமாக பிரித்துவைக்க திட்டவட்டமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமா? கிரேத்தா தீவிலிருப்பவர்கள் “நற்கிரியைகளைச் செய்வதில் கருத்தாயிருக்கும்படி” தீத்துவின் மூலம் பவுல் தெரிவிக்கையில், “இவைகளே மனுஷருக்கு நன்மையும் பிரயோஜனமானவைகள்” என்று சொன்னார். இன்றும்கூட, உண்மையற்ற தன்மை, நேர்மையற்ற பழக்கம் எனும் சேற்றுக்குள் அமிழ்ந்திருக்கிற உலகத்தில், மெய் கிறிஸ்தவர்கள் ‘நல்ல செயல்களை செய்யப் பழகி,’ கடவுளுடைய சேவையில் கனிதருவது ‘நன்மையும் பிரயோஜனமுமாய்’ இருக்கிறது. (3:8, 14, தி.மொ.) கிரேத்தாவிலிருந்த சபைகளை அச்சுறுத்திய ஒழுக்கக்கேட்டையும் பொல்லாங்கையும் பவுல் கண்டனம் செய்தது இப்போது நமக்கு எச்சரிக்கையாக இருக்கிறது. ‘அவபக்தியையும் உலக இச்சைகளையும் வெறுத்தொதுக்கி, இந்தக் காரிய ஒழுங்குமுறையின் மத்தியில் தெளிந்த மனதோடும் நீதியிலும் தேவபக்தியிலும் வாழும்படி கடவுளுடைய தகுதியற்ற தயவு நமக்கு போதிக்கிறது.’ கிறிஸ்தவர்கள் நல்மனச்சாட்சியை காத்து, அரசாங்கத்திற்கு கீழ்ப்படிதலை காண்பித்து, “சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்க” வேண்டும்.—2:11, 12, NW; 3:1.
9. கண்காணியின் பொறுப்பாகிய சரியான போதகத்தின் முக்கியத்துவம் எவ்வாறு வலியுறுத்தப்படுகிறது?
9 பரிசுத்த ஆவி கண்காணிகளிடம் எதை எதிர்பார்க்கிறது என்பதைக் குறித்து 1 தீமோத்தேயு 3:2-7 சொல்வதை தீத்து 1:5-9 நிறைவாக்குகிறது. கண்காணி “உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவ”ராயிருந்து சபையில் போதிக்கிறவராக இருக்க வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது. எல்லாரையும் முதிர்ச்சிக்கு வழிநடத்துவதற்கு இது எவ்வளவு அவசியம்! சொல்லப்போனால், சரியான போதகத்துக்கான இந்தத் தேவையை தீத்துவுக்கு எழுதப்பட்ட இந்த நிருபம் பல தடவை அறிவுறுத்துகிறது. ‘ஆரோக்கியமான உபதேசத்துக்கேற்றவைகளைப் பேசும்படி’ பவுல் தீத்துவுக்கு அறிவுரை கூறுகிறார். முதிர்வயதுள்ள பெண்கள் “நற்காரியங்களைப் போதிக்கிறவர்க”ளாக இருக்க வேண்டும், அடிமைகள் தங்கள் “இரட்சகராகிய கடவுளின் உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்க வேண்டும்.” (தீத். 1:9; 2:1, 3, 10, தி.மொ.) கண்காணியாகிய தீத்து, தன் போதகத்தில் உறுதியாகவும் பயமற்றவராகவும் இருப்பதன் அவசியத்தை பவுல் அறிவுறுத்துகிறார். மேலும், “இவைகளை நீ பேசி, போதித்து, சகல அதிகாரத்தோடும் கடிந்துகொ”ண்டிரு என்று அவர் சொல்கிறார். கீழ்ப்படியாதவர்களுடைய விஷயத்தில், ‘விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாக இருக்கும்படி, நீ அவர்களை கண்டிப்பாக கடிந்துகொள்’ என்பதாகவும் சொல்கிறார். இவ்வாறு தீத்துவுக்கு பவுல் எழுதிய நிருபம் “உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும்” முக்கியமாக பயனுள்ளது.—தீத். 2:15; 1:14; 2 தீ. 3:17.
10. தீத்துவுக்கு எழுதிய நிருபம் எதை செய்யும்படி நம்மை உற்சாகப்படுத்துகிறது, என்ன மகிழ்ச்சியான நம்பிக்கையை அளிக்கிறது?
10 தீத்துவுக்கு எழுதிய இந்த நிருபம் கடவுளின் தகுதியற்ற தயவை நாம் போற்றுவதற்கு நம்மை தூண்டுகிறது. மேலும் ‘மகிழ்ச்சிக்குரிய நம்பிக்கைக்கும் மகா தேவனின் மற்றும் நம்முடைய இரட்சகராகிய கிறிஸ்து இயேசுவின் மகிமையான வெளிப்படுத்தலுக்கும் நாம் காத்திருக்கையில்’ உலகத்தின் அவபக்தியிலிருந்து திரும்பும்படி நம்மை உற்சாகப்படுத்துகிறது. இவ்வாறு செய்தால், கிறிஸ்து இயேசுவின் மூலம் நீதிமான்களாக அறிவிக்கப்படுவோர் கடவுளுடைய ராஜ்யத்தில் ‘நித்திய ஜீவ நம்பிக்கைக்கு சுதந்தரராகலாம்.’—தீத். 2:13, NW; 3:7, தி.மொ.
-
-
பைபிள் புத்தக எண் 57—பிலேமோன்‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
-
-
பைபிள் புத்தக எண் 57—பிலேமோன்
எழுத்தாளர்: பவுல்
எழுதப்பட்ட இடம்: ரோம்
எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச. 60-61
1. பிலேமோனுக்கு எழுதிய நிருபத்தின் தனிச் சிறப்புகள் யாவை?
பவுல் எழுதிய மிகச் சாதுரியமான, அன்பு ததும்பும் இந்த நிருபம் இன்று கிறிஸ்தவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இது ‘புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாகிய’ பவுலால் எழுதப்பட்ட மிகச் சிறிய நிருபம். முழு பைபிளிலும், இதைவிட குறைந்த தகவல் யோவானின் இரண்டாம் மூன்றாம் நிருபங்களில் மட்டுமே காணப்படுகின்றன. மேலும், இது மட்டுமே ‘தனிப்பட்ட ஒரு நபருக்கு’ பவுல் எழுதிய ஒரே கடிதம். ஏனெனில், இது ஒரு சபைக்கோ பொறுப்புள்ள கண்காணிக்கோ முறைப்படி எழுதப்படவில்லை, ஒரு தனிப்பட்ட நபருக்கே எழுதப்பட்டது. அவருடைய பெயர் பிலேமோன்; இவர் ஆசியா மைனரின் மத்தியில் பிரிகியா பகுதியில் கொலோசெ பட்டணத்தில் பணக்காரராக வாழ்ந்திருக்க வேண்டும். இந்தக் கிறிஸ்தவ சகோதரனோடு பவுல் கலந்துபேச விரும்பிய ஒரு தனிப்பட்ட பிரச்சினை மாத்திரமே இந்தக் கடிதத்தில் கையாளப்பட்டது.—ரோ. 11:13.
2. இந்த நிருபம் எந்த சந்தர்ப்பத்தில் என்ன நோக்கத்துக்காக எழுதப்பட்டது?
2 இந்த நிருபத்தின் நோக்கம் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது: ரோமில் முதல் சிறையிருப்பின்போது (பொ.ச. 59-61) கடவுளுடைய ராஜ்யத்தைப் பிரசங்கிக்க பவுலுக்கு அதிக சுதந்திரம் இருந்தது. அப்போதுதான் அவர் ஒநேசிமுவோடு கலந்துரையாடியிருக்க வேண்டும்; பவுலின் நண்பராகிய பிலேமோனின் வீட்டில் அடிமையாக இருந்த ஒநேசிமு ஓடிவந்துவிட்டார். பவுலின் பிரசங்கத்துக்குச் செவிசாய்த்தவர்களுக்குள் ஒநேசிமுவும்
-