-
பைபிள் புத்தக எண் 55—2 தீமோத்தேயு‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
-
-
அவர்கள் தன்னல விருப்பத்திற்காக தங்களுடைய காதுகளுக்கு இதமானவற்றைப் பேசும் போதகர்களை விரும்பி “ஆரோக்கியமான உபதேசத்தை” நிராகரிக்கின்றனர். (2:15, 23; 3:7; NW; 4:3, 4) இப்படிப்பட்ட கறைபடுத்தும் உலக செல்வாக்கைத் தவிர்ப்பதற்கு விசுவாசத்திலும் அன்பிலும் “ஆரோக்கியகரமான வார்த்தைகளின் மாதிரியை” விடாது பற்றியிருப்பது அவசியம். மேலும், ‘கடவுளின் மனிதனாகிய’ தீமோத்தேயுவைப்போல் அநேகர் சபைக்குள்ளும் வெளியிலும் ‘போதிக்க வேண்டிய தகுதிபெறுவதற்கான’ அவசரத் தேவை இருக்கிறது. இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு ‘சாந்தத்தோடு போதிக்கத் தகுதிபெற்று,’ ‘நீடிய பொறுமையோடும் கற்பிக்கும் கலையோடும்’ வார்த்தையைப் பிரசங்கிப்போர் மகிழ்ச்சியுள்ளவர்கள்!—1:13, தி.மொ.; 2:2, 24, 25; 4:2; NW.
11. இளைஞரைக் குறித்து என்ன அறிவுரை அளிக்கப்படுகிறது?
11 தீமோத்தேயு ‘சிசுப் பருவத்திலிருந்து’ பரிசுத்த எழுத்துக்களை அறிந்திருந்தார்; ஏனெனில் லோவிசாளும் ஐனிக்கேயாளும் அன்புடன் அவருக்கு சொல்லிக்கொடுத்தனர் என்று பவுல் குறிப்பிட்டார். ‘சிசுப் பருவம்’ என்று குறிப்பிட்டதிலிருந்து, பிள்ளைகள் பச்சிளம் குழந்தைகளாக இருக்கும்போதே பைபிள் போதனையை ஆரம்பிக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்கிறோம். ஆனால், பிள்ளைகள் வளர்ந்தபின் நெருப்பைப் போன்ற ஆரம்பகால வைராக்கியம் குறைந்துவிட்டால் என்ன செய்வது? மாயமற்ற விசுவாசத்துடன் ‘பலத்தோடும் அன்போடும் தெளிந்த புத்தியோடும்’ அந்தத் தணலை மறுபடியுமாக அனல்மூட்டி எழுப்ப வேண்டுமென்பதே பவுலின் அறிவுரை. “கடைசி நாட்களில்,” கொடிய காலங்கள் வரும்; துன்மார்க்கமும் பொய்ப் போதகங்களும் இருக்கும் என பவுல் சொன்னார். ஆகவே, ‘எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளோராக இருந்து தங்கள் ஊழியத்தை முழுமையாக நிறைவேற்றும்’ பொறுப்பு குறிப்பாக இளைஞர்களுக்கும், ஏன் அனைவருக்குமே இருக்கிறது.—3:15, NW; 1:5-7; 3:1-5; 4:5, தி.மொ.
12. (அ) பவுல் எவ்வாறு ராஜ்ய வித்துக்குக் கவனத்தை திருப்புகிறார், அவர் என்ன நம்பிக்கையை வெளிப்படுத்தினார்? (ஆ) பவுலுக்கிருந்த அதே மனப்பான்மையை கடவுளுடைய ஊழியர்கள் எவ்வாறு காட்டலாம்?
12 பரிசைப் பெற போராடுவது தகுதியானதே. (2:3-7) பவுல் இதன் தொடர்பாக ராஜ்ய வித்திற்கு கவனத்தை திருப்புகிறார்: “இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவர் என்பதை மறக்க வேண்டாம்; சுவிசேஷத்தின்படி அவர் தாவீதின் வித்து.” அந்த வித்துடன் ஐக்கியத்தில் நிலைத்திருப்பதே பவுலின் நம்பிக்கை. அதன் பின்னர் அவருடைய மரணத்தீர்ப்பைக் குறித்து வெற்றி வாகைசூடும் வார்த்தைகளில் இவ்வாறு பேசுகிறார்: “இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.” (2:8, NW; 4:8) பல ஆண்டுகளாக உண்மையுடன் ஊழியம் செய்ததை நினைத்துப் பார்த்து இதேவிதமாக சொல்வோர் எவ்வளவு மகிழ்ச்சியுள்ளவர்கள்! எனினும் உத்தமத்துடன் இப்போது சேவிப்பதையும் இயேசு கிறிஸ்துவின் வெளிப்படுதலை ஆவலுடன் எதிர்பார்ப்பதையும் இது அர்த்தப்படுத்துகிறது; மேலும் பவுல் வைத்திருந்த அதே நம்பிக்கையை நடைமுறையில் செய்து காட்டுவதையும் அவசியப்படுத்துகிறது. அவர் சொன்னார்: “கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.”—4:18.
-
-
பைபிள் புத்தக எண் 56—தீத்து‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
-
-
பைபிள் புத்தக எண் 56—தீத்து
எழுத்தாளர்: பவுல்
எழுதப்பட்ட இடம்: மக்கெதோனியா(?)
எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச. 61-64
1. (அ) தீத்துவிடம் ஒப்படைக்கப்பட்ட வேலை என்ன? (ஆ) கிரேத்தாவில் எப்படிப்பட்ட சூழலில் சபைகள் உருவாகியிருந்தன, கிரேத்தாவிலிருந்த கிறிஸ்தவர்கள் என்ன செய்வது அவசியமாயிருந்தது?
“கடவுளின் அடியானும் . . . இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனுமான பவுல் பொதுவான விசுவாசத்திலே என் உத்தமபிள்ளை தீத்துக்கு எழுதுவது.” (தீத். 1:1, 2, தி.மொ.) உடன் ஊழியனாகவும் நீண்டகாலம் தோழனாகவும் இருந்த தீத்துவுக்கு எழுதின பவுலின் நிருபம் இவ்வாறுதான் தொடங்குகிறது. சபைகளை நன்றாக ஒழுங்குபடுத்துவதற்கு அவரை கிரேத்தா தீவில் பவுல் விட்டுவந்திருந்தார். தீத்துவிடம் பெரிய வேலை ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்தத் தீவு, “தேவர்கள் மற்றும் மனிதர்களின் பிதா”வினுடைய பூர்வீக வாசஸ்தலம் என சொல்லப்படுகிறது. “கிரேத்தனையே ஏமாற்றுபவன்” என்ற வழக்கச் சொல்லுக்கு பிறப்பிடமாக இத்தீவு திகழ்கிறது. இதன் அர்த்தம், “நயவஞ்சகனையே வஞ்சிப்பது.”a அந்த ஜனங்களின் உண்மையற்ற குணமே பழமொழியானது. ஆகவே, “கிரேத்தா தீவார் ஓயாப் பொய்யர், துஷ்டமிருகங்கள், பெருவயிற்றுச் சோம்பேறிகள்” என்று அவர்களுடைய தீர்க்கதரிசி சொன்னதையே பவுல் மேற்கோளாக குறிப்பிட்டார். (1:12) பவுலின் நாளிலிருந்த கிரேத்தா தீவார் இவ்வாறாகவும் விவரிக்கப்பட்டுள்ளனர்: “நிலையற்று, நேர்மையற்று இருப்பது, சண்டையிடுவது ஆகியவையே அந்த ஜனத்தின் குணம். பேராசைக்கும், காமவெறிக்கும், பொய்மைக்கும், குடிவெறிக்கும் பேர்போனவர்கள். அவர்களுடன் வாழ்ந்த யூதர்கள் ஒழுக்கக்கேட்டில் அந்த தீவில் வாழ்ந்தவர்களையும் மிஞ்சிவிட்டதாக தெரிகிறது.”b இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் கிரேத்தா சபைகள் உருவாகியிருந்தன. ஆகவே, “அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் . . . ஜீவனம்பண்”ணும்படி பவுல் புத்திமதி கூறியது அங்குள்ள விசுவாசிகளுக்கு மிகவும் அவசியமாயிருந்தது.—2:12.
-