பாட்டு 209
வீர ராஜனுக்கு பின்செல்லுங்கள்!
1. யெகோவாதேவனைப் பாடும்பாட்டுண்டு.
ஆட்சி, மாட்சிமைக்கு ஒருபாட்டு.
எல்லாருக்கும்சொல்லசெய்தி ஒன்றுண்டு.
அதை விவரிக்கும் வேலையுண்டு.
(பல்லவி)
2. தேவவீரரே, அணிவகுப்பீரே.
தேவதளபதி கீழ்சேர்வீரே.
விசுவாசக்கேடயம் பிடிப்பீரே.
பட்டயம், தலைச்சீரா ஏற்பீரே.
(பல்லவி)
3. நம்வெற்றி சுயபலத்தில் இல்லையே
சொந்த முயற்சியில்கிடைக்காதே.
தேவ பலத்தில் வெற்றி பெறலாமே.
மகிமை யெகோவாவின்பேருக்கே.
(பல்லவி)
முன்னேசெல்! (ஆம்,செல்!)
அஞ்சாமல்செல்! (அஞ்சாமல்செல்!)
சேனையாக நாம் செல்வோம்,
சத்துருவை எதிர்ப்போம்.
தோல்விகாணா வீரராஜன் பின்செல்வோம்.
பின் சென்றுநாம் வெற்றிகொள்வோம்!