உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • பைபிள் புத்தக எண் 2—யாத்திராகமம்
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
    • 31 இவ்வாறு, மோசேயின்கீழ் அமைக்கப்பட்ட அந்த ஜனம் எதிர்காலத்தில் கிறிஸ்துவின்கீழ் ஒரு புதிய ஜனம் அமைக்கப்படுவதை முன்குறிப்பிட்டது. அதுமட்டுமன்றி, ஒருபோதும் அசைக்கப்படமாட்டாத ஒரு ராஜ்யத்தையும் முன்குறிப்பிட்டதென்று வேதாகமத்திலிருந்து நாம் சொல்லலாம். இதனால், நாம் “தேவபயத்தோடும் பக்தியோடும் கடவுளுக்குப் பரிசுத்த சேவை செய்யும்படி” ஊக்குவிக்கப்படுகிறோம். யெகோவாவின் பிரசன்னம் வனாந்தரத்தில் ஆசரிப்புக் கூடாரத்தை மூடினது. அதுபோல், அவர் தமக்குப் பயப்படுவோருடன் நித்தியகாலமாக இருப்பாரென வாக்குக்கொடுக்கிறார்: “இதோ மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இரு[ப்பார்] . . . இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது.” யாத்திராகமம் நிச்சயமாகவே பைபிள் பதிவில் இன்றியமையாத, நன்மைபயக்குகிற ஒரு பாகம்.​—⁠யாத். 19:​16-19​—⁠எபி. 12:​18-29, NW; யாத். 40:34​—⁠வெளி. 21:​3, 5.

  • பைபிள் புத்தக எண் 3—லேவியராகமம்
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
    • பைபிள் புத்தக எண் 3—லேவியராகமம்

      எழுத்தாளர்: மோசே

      எழுதப்பட்ட இடம்: வனாந்தரம்

      எழுதி முடிக்கப்பட்டது: பொ.ச.மு. 1512

      காலப்பகுதி: 1 மாதம் (பொ.ச.மு. 1512)

      1. (அ) லேவியராகமம் என்ற பெயர் ஏன் பொருத்தமாக உள்ளது? (ஆ) லேவியராகமத்துக்கு வேறு என்ன பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன?

      பைபிளின் மூன்றாவது புத்தகத்திற்கு மிகவும் பொதுவான பெயர் லேவியராகமம் (ஆங்கிலத்தில் லெவிட்டிக்கஸ்). இது கிரேக்க செப்டுவஜின்ட் பைபிளில் லெயிட்டிக்கான் (Leu·i·ti·konʹ). லத்தீன் வல்கேட்டில் “லெவிட்டிக்கஸ்” (“Leviticus”). லேவியர்களைப் பற்றி இப்புத்தகம் (25:​32, 33-⁠ல்) மேலோட்டமாகவே குறிப்பிடுகிறபோதிலும் இது பொருத்தமான பெயர். ஏனெனில் இந்தப் புத்தகத்தில் முக்கியமாக லேவி கோத்திரத்திலிருந்து தெரிந்தெடுத்த லேவிய ஆசாரியத்துவத்தைப் பற்றிய விதிமுறைகளும், ஆசாரியர்கள் ஜனங்களுக்குக் கற்பித்த சட்டங்களும் அடங்கியுள்ளன: “ஆசாரியன் உதடுகள் அறிவைக் காக்க வேண்டும், அவன் வாயினின்று உபதேசம் வரத்தேடுவார்கள்.” (மல். 2:​7, தி.மொ.) எபிரெயுவில் இந்தப் புத்தகம் வாய்யிக்ரா (Wai·yiq·raʼʹ) என அதன் முதல் வார்த்தையைக் கொண்டு பெயரிடப்பட்டுள்ளது, சொல்லர்த்தமாக “அவர் கூப்பிட்டார்” என்பதாகும். பிற்கால யூதர்களால் இந்தப் புத்தகம் ஆசாரியர்களின் நியாயப்பிரமாணம் என்றும் பலிகளின் நியாயப்பிரமாணம் என்றும் அழைக்கப்பட்டது.​—⁠லேவி. 1:​1, NW அடிக்குறிப்பு.

      2. மோசே எழுதினார் என்பதை என்ன அத்தாட்சி ஆதரிக்கிறது?

      2 லேவியராகமத்தை மோசே எழுதினார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. “யெகோவா . . . மோசேக்கு விதித்த கட்டளைகள் இவைகளே” என்று அதன் முடிவுரை அல்லது பின்னணியுரை கூறுகிறது. (27:​34, தி.மொ.) இதைப் போன்ற வாக்கியம் லேவியராகமம் 26:​46-⁠ல் காணப்படுகிறது. தொடக்கத்தில் ஐந்தாகம தொகுப்பு (Pentateuch) ஒரே சுருளாக இருந்தது. ஆகவே ஆதியாகமத்தையும் யாத்திராகமத்தையும் மோசே எழுதினார் என்று முன்பு கவனித்த அத்தாட்சி, லேவியராகமத்தையும் அவரே எழுதினார் என்பதை ஆதரிக்கிறது. அதோடு, லேவியராகமம் “மேலும்” (NW) என்ற இணைச் சொல்லால் ஆரம்பித்து, அது முந்தைய புத்தகங்களின் தொடர்ச்சி என காட்டுகிறது. இயேசு கிறிஸ்துவும் தேவாவியால் ஏவப்பட்ட யெகோவாவின் மற்ற ஊழியரும் லேவியராகமத்திலுள்ள சட்டங்களையும் நியமங்களையும் அடிக்கடி மேற்கோள் காண்பிக்கையில் அல்லது குறிப்பிட்டு பேசுகையில் அவற்றை மோசே எழுதியதாக கூறியிருக்கின்றனர். இது எல்லாவற்றையும்விட மிக பலமான அத்தாட்சியாகும்.​—⁠லேவி. 23:​34, 40-43​—⁠நெ. 8:​14, 15; லேவி. 14:​1-32​—⁠மத். 8:​2-4; லேவி. 12:2​—⁠லூக். 2:22; லேவி. 12:3​—⁠யோவா. 7:22; லேவி. 18:5​—⁠ரோ. 10:⁠5.

      3. லேவியராகமத்தில் எவ்வளவு காலப்பகுதி அடங்கியுள்ளது?

      3 லேவியராகமம் எவ்வளவு காலப்பகுதியை உள்ளடக்குகிறது? “இரண்டாம் வருஷம் முதலாம் மாதம் முதல் தேதியில்” ஆசரிப்புக் கூடாரம் கட்டப்பட்ட சம்பவத்தோடு யாத்திராகமம் முடிகிறது. எண்ணாகமம் (லேவியராகமத்தின் விவரத்தை உடனடியாகப் பின்தொடர்ந்து) “இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் முதல் தேதியில்” யெகோவா மோசேயினிடம் பேசுவதாக தொடங்குகிறது. ஆகவே, லேவியராகமத்திலுள்ள சில சம்பவங்கள் நிகழ ஒரு சந்திர மாதத்துக்கும் மேல் ஆகியிருக்காது. இந்தப் புத்தகத்தின் பெரும்பாகம் சட்டங்களும் விதிமுறைகளும் நிறைந்ததாய் இருக்கிறது.​—⁠யாத். 40:17; எண். 1:1; லேவி. 8:​1–10:7; 24:​10-23.

      4. லேவியராகமம் எப்போது எழுதப்பட்டது?

      4 மோசே லேவியராகமத்தை எப்போது எழுதினார்? சம்பவங்கள் நிகழ நிகழ அவர் அவற்றை பதிவு செய்தார். மேலும் கடவுளுடைய கட்டளைகளைப் பெற பெற அவற்றை எழுதி வைத்தார் என்ற முடிவுக்கு வருவது நியாயமானதே. இது, அமலேக்கியரை இஸ்ரவேலர் போரில் தோற்கடித்தப்பின், அவர்களுக்கு எதிரான ஆக்கினைத்தீர்ப்பை உடனடியாக எழுதிவைக்கும்படி கடவுள் மோசேக்குக் கட்டளையிட்டதில் மறைமுகமாக காட்டப்படுகிறது. சொல்லப்பட்ட காலப்பகுதிக்கு முன்னதாகவே இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கலாம் என்பதை இதில் பதிவு செய்யப்பட்டுள்ள சில விஷயங்கள் தெரிவிக்கின்றன. உதாரணமாக, இஸ்ரவேலர் உணவுக்காக பயன்படுத்த விரும்பிய மிருகங்களைக் கொல்வதற்கு அவற்றை ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்குக் கொண்டுவரும்படி கட்டளையிடப்பட்டனர். இந்தக் கட்டளை, ஆசாரியத்துவம் ஏற்படுத்தப்பட்டதற்குச் சற்றுப் பின் கொடுக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இஸ்ரவேலரின் வனாந்தர பயணத்தின்போது வழிநடத்துதலுக்காக பல அறிவுரைகள் கொடுக்கப்படுகின்றன. இவை யாவும் பொ.ச.மு. 1512-⁠ல் மோசே லேவியராகமத்தை எழுதியதை காட்டுகின்றன.​—⁠யாத். 17:14; லேவி. 17:​3, 4; 26:46.

      5. பலிகளையும் ஆசார சுத்திகரிப்பையும் பற்றிய சட்டங்கள் என்ன நோக்கத்தைச் சேவித்தன?

      5 லேவியராகமம் ஏன் எழுதப்பட்டது? யெகோவா ஒரு பரிசுத்த

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்