-
பைபிள் புத்தக எண் 3—லேவியராகமம்‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
-
-
அதிகாரியான மகா ஆசாரியர்” கிறிஸ்து இயேசுவின் மூலம் யெகோவா செய்கிற, ஜீவனடைவதற்கான இந்த ஏற்பாட்டால் நன்மையடைவோருக்கு இத்தகைய சரியான புரிந்துகொள்ளுதல் இன்றியமையாதது.—எபி. 10:19-25.
39. யெகோவாவின் ராஜ்ய நோக்கங்களை அறிவிப்பதில் லேவியராகமம் எவ்வாறு ‘வேதாகமம் முழுவதோடும்’ ஒத்திசைகிறது?
39 ஆரோனின் ஆசாரிய வீட்டாரைப்போல், இயேசு கிறிஸ்து பிரதான ஆசாரியராக, துணை ஆசாரியர்களைத் தம்மோடு கொண்டுள்ளார். இவர்கள் “ராஜரீகமான ஆசாரியக்கூட்டம்” என பேசப்பட்டிருக்கின்றனர். (1 பே. 2:9) யெகோவாவின் மகா பிரதான ஆசாரியரும் அரசருமானவரின் பாவப் பிராயச்சித்தம் செய்யும் வேலையை லேவியராகமம் தெளிவாக சுட்டிக்காட்டி விளக்குகிறது. ‘பாக்கியவானும் பரிசுத்தவானும்’ எனவும் ‘கடவுளுக்கும் அவருடைய கிறிஸ்துவுக்கும் ஆசாரியராயிருந்து அவரோடுகூட அந்த ஆயிரம் ஆண்டுகள் ஆளுவதாகவும்’ பேசப்பட்டிருக்கும் அவருடைய வீட்டாரின் உறுப்பினர்கள்மீது வைக்கப்பட்ட பொறுப்புகளையும் அது விளக்குகிறது. கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்தைப் பரிபூரணத்துக்கு உயர்த்துவதில் எத்தகைய ஆசீர்வாதங்களுக்கு இந்த ஆசாரிய ஊழியம் வழிவகுக்கும். மேலும் இந்தப் பூமியில் சமாதானத்தையும் நீதியையும் திரும்ப நிலைநாட்டுவதால் எத்தகைய மகிழ்ச்சியை அந்தப் பரலோக ராஜ்யம் கொண்டுவரவிருக்கிறது! தம்முடைய பெயர் பரிசுத்தப்படும்படி தம்முடைய மகத்துவங்களை எங்கும் அறிவிப்பதற்குப் பிரதான ஆசாரியரும் அரசருமான ஒருவரையும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டம் ஒன்றையும் ஏற்பாடு செய்ததற்காக பரிசுத்த கடவுளாகிய யெகோவாவுக்கு நாம் எல்லாரும் நன்றிசெலுத்த வேண்டும். நிச்சயமாகவே, யெகோவாவின் ராஜ்ய நோக்கங்களை அறிவிப்பதில் ‘வேதாகமம் முழுவதோடும்’ லேவியராகமம் அருமையாய் ஒத்திசைகிறது.—வெளி. 20:6.
-
-
பைபிள் புத்தக எண் 4—எண்ணாகமம்‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
-
-
பைபிள் புத்தக எண் 4—எண்ணாகமம்
எழுத்தாளர்: மோசே
எழுதப்பட்ட இடம்: வனாந்தரமும் மோவாபின் சமவெளிகளும்
எழுதி முடிக்கப்பட்டது: பொ.ச.மு. 1473
காலப்பகுதி: பொ.ச.மு. 1512-1473
1. எண்ணாகமத்தின் சம்பவங்கள் ஏன் பதிவுசெய்யப்பட்டன, அவை நம் மனதில் எதை பதிய வைக்கின்றன?
இஸ்ரவேலரின் வனாந்தர பயணத்தின் சம்பவங்கள் நம்முடைய நன்மைக்காக பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.a அப்போஸ்தலன் பவுல் சொன்னார்: “அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது.” (1 கொ. 10:6) யெகோவாவின் பெயரைப் பரிசுத்தப்படுத்துவது, எல்லா சூழ்நிலைமைகளிலும் அவருக்குக் கீழ்ப்படிவது, அவருடைய பிரதிநிதிகளுக்கு மதிப்புக் காட்டுவது—இவற்றின் பேரிலேயே தப்பிப்பிழைப்பது சார்ந்திருக்கிறது என்பதை எண்ணாகமத்திலுள்ள தெளிவான பதிவு நம் மனதில் ஆழப் பதியவைக்கிறது. கடவுளுடைய தயவு அவருடைய ஜனத்தின் எந்த நற்குணத்தினாலோ தகுதியினாலோ அல்ல, மாறாக அவருடைய மிகுந்த இரக்கத்தினாலும் தகுதியற்றத் தயவினாலுமே கிடைக்கிறது.
2. எண்ணாகமம் என்ற பெயர் எதைக் குறிப்பிடுகிறது, ஆனால், அதிகப் பொருத்தமான என்ன பெயரை யூதர்கள் இந்தப் புத்தகத்துக்குக் கொடுத்தனர்?
2 முதல் நான்கு அதிகாரங்களிலும் 26-ம் அதிகாரத்திலும் பதிவு செய்திருக்கிறபடி, எண்ணாகமம் என்ற இந்தப் பெயர், முதலாவது சீனாய் மலையருகிலும் பின்னால் மோவாபின் சமவெளிகளிலும் ஜனங்கள் எண்ணப்பட்டதைக் குறிப்பிடுகிறது. இந்தப் பெயர் லத்தீன் வல்கேட்டில் உள்ள நூமரி (Numeri) என்ற தலைப்பிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. இது, கிரேக்க செப்டுவஜின்டில் உள்ள அரித்மாய் (A·rith·moiʹ) என்பதன் அடிப்படையில் தோன்றியது. எனினும், யூதர்கள் இந்தப் புத்தகத்தை பெமித்பார் (Bemidh·barʹ) என அதிகப் பொருத்தமாய் அழைக்கின்றனர்; இதன் அர்த்தம், “வனாந்தரத்தில்” என்பதாகும். மித்பார் (midh·barʹ) என்ற எபிரெயச் சொல், நகரங்களும் பட்டணங்களும் இல்லாத ஒரு திறந்த வெளியை குறிப்பிடுகிறது. கானானுக்குத் தெற்கேயும் கிழக்கேயும் இருந்த வனாந்தரத்தில் எண்ணாகமங்களின் சம்பவங்கள் நடைபெற்றன.
3. எண்ணாகமத்தை மோசே எழுதினார் என்பதை எது நிரூபிக்கிறது?
3 ஆதியாகமத்திலிருந்து உபாகமம் வரையான ஐந்து புத்தகங்கள் அடங்கிய ஆரம்பகால தொகுப்பின் பாகமே எண்ணாகமம் என தெரிகிறது. “மேலும்” (NW) என்ற இடைச் சொல்லைக்கொண்டு தொடங்கும் இதன் முதல் வசனம், இது முந்தைய பதிவின் தொடர்ச்சியென காட்டுகிறது. ஆகவே இது, முந்தின பதிவுகளின் எழுத்தாளரான மோசேயால் எழுதப்பட்டிருக்க வேண்டும். மேலும் ‘மோசே எழுதி வைத்தார்’ என்று இந்தப் புத்தகமே சொல்கிறது. “யெகோவா மோசேயைக் கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்கு விதித்த கட்டளைகளும் தீர்ப்புகளும் இவைகளே” என முடிவிலும் சொல்வது தெளிவான அத்தாட்சி.—எண். 33:2; 36:13, தி.மொ.
4. எண்ணாகமம் எவ்வளவு காலப்பகுதி அடங்கியது, இந்தப் புத்தகம் எப்போது எழுதி முடிக்கப்பட்டது?
4 இஸ்ரவேலர் எகிப்திலிருந்து விடுதலையாகி ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. அவர்கள் புறப்பட்ட பின்பு இரண்டாம் வருடத்தின் இரண்டாம் மாதத்திலிருந்து இந்த விவரத்தைத் தொடங்கி, அடுத்த 38 ஆண்டுகளும் ஒன்பது மாதங்களுமான பொ.ச.மு. 1512-லிருந்து 1473 வரையான காலப்பகுதியை எண்ணாகமம் தன்னில் அடக்குகிறது. (எண். 1:1; உபா. 1:4) எண்ணாகமம் 7:1-88-லும் 9:1-15-லும் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் இந்தக் காலப்பகுதிக்குள் பொருந்துவதில்லை. என்றாலும், அவை பின்னணி தகவல்களாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்தப் புத்தகத்தின் ஆரம்பப்பகுதியில் குறிப்பிட்டுள்ளவை சந்தேகமில்லாமல் அந்தச் சம்பவங்கள் நடைபெறுகையில் எழுதப்பட்டவை. ஆனால் வனாந்தரத்தில் 40-வது ஆண்டின் முடிவு வரை, அதாவது பொ.ச.மு. 1473-ம் ஆண்டின் தொடக்கப்பகுதி வரையில் மோசே எண்ணாகமத்தை எழுதி முடித்திருக்க முடியாதென தெரிகிறது.
5. எண்ணாகமத்தின் நம்பகத் தன்மைக்கு என்ன அம்சங்கள் சாட்சி பகருகின்றன?
5 இந்த விவரத்தின் நம்பகத் தன்மையைப் பற்றி எவ்வித சந்தேகமும்
-