-
வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்ராஜ்ய ஊழியம்—1989 | ஆகஸ்ட்
-
-
வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்
ஆகஸ்ட் 7 -13
புரோஷூர்களை அளிக்கும்போது
1. ஏன் ஒன்றுக்கு மேற்பட்ட புரோஷூர்களை வைத்திருக்கவேண்டும்?
2. என்ன திட்டவட்டமான குறிப்புகளை நீங்கள் சிறப்பித்துக் காட்டுவீர்கள்?
3. ஒரு பைபிள் படிப்பிற்காக எப்படி ஆதாரம் போடப்படலாம்?
ஆகஸ்ட் 14 -20
உங்களுடைய பிள்ளையுடன் சேர்ந்து சாட்சி கொடுக்கும்போது
1. ஏன் அவனை உரையாடலில் உட்படுத்தவேண்டும்?
2. அர்த்தமுள்ள ஒரு பங்கை கொண்டிருப்பதற்கு அவன் என்ன செய்யலாம்?
3. பிறகு அவனுக்கு ஆலோசனை கொடுப்பது ஏன் நல்லது?
ஆகஸ்ட் 21 -27
ஜனங்கள் இவ்வாறு சொல்லும்போது நாம் எப்படி பதிலளிக்கலாம்: (நியாயங்கள் புத்தகம் பக்.16-20 பார்க்கவும்.)
1. ‘எனக்கு என் சொந்த மதம் இருக்கிறது’?
2. ‘நான் வேலையாக இருக்கிறேன்’?
3. ‘எனக்கு அக்கறை இல்லை’?
ஆகஸ்ட் 28 -செப்டம்பர் 3
புதிய சம்பாஷணைக்குப் பேச்சுப்பொருள்
1. முக்கிய குறிப்புகளை விமர்சனம் செய்யுங்கள்.
2. நியாயங்கள் புத்தகத்திலிருந்து எந்த முன்னுரைகளை நீங்கள் பயன்படுத்தலாம்?
3. பிரசுர அளிப்புடன் எவ்வாறு இணைப்பீர்கள்?
-
-
முழு இருதயத்தோடு சேவை செய்தல்ராஜ்ய ஊழியம்—1989 | ஆகஸ்ட்
-
-
முழு இருதயத்தோடு சேவை செய்தல்
1 முழு இருதயத்தோடு யெகோவாவுக்குச் சேவை செய்யும் காரியத்தில் தாவீது சிறந்த முன்மாதிரி வைத்தான். அவனுடைய வழிநடத்துதல் முழு இஸ்ரவேல் தேசத்தார் மீதும் ஆழமான பாதிப்பையுடையதாக இருந்தது. யெகோவாவின் ஆலயத்தைக் கட்டுவதற்காக அவர்களும்கூட மனமுவந்து முழு இருதயத்தோடு காணிக்கை அளித்தார்கள். அவர்களுடைய இந்த மனசிந்தையை “என்றைக்கும்” காத்தருளும்படி தாவீது பிற்பாடு ஜெபித்தான். 1 நாளா. 29:9, 18.
2 பண்டைய இஸ்ரவேலில் இருந்ததைப்போலவே இன்றும் யெகோவாவை முழு இருதயத்தோடு சேவிப்பது ஏன் அவ்வளவு முக்கியமானது? எளிதாக சொல்லவேண்டுமானால், முழு இருதயத்தோடு தம்மை சேவிக்கக்கூடிய ஆட்கள் மீது யெகோவாவின் தயவு இருக்கிறது. சேயீர் அனானி ராஜாவாகிய ஆசாவிடம் சொன்னதாவது: “தம்மைப்பற்றி உத்தம [முழு] இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி கர்த்தருடைய [யெகோவாவுடைய] கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது.”—2 நாளா. 16:9.
ராஜ்ய வேலையை ஆதரியுங்கள்
3 பூமி முழுவதிலும் நடைப்பெற்றுவரும் ராஜ்ய பிரசங்கிப்பு வேலைக்கு ஆதரவு கொடுப்பதன் மூலம் நாம் முழு இருதயத்தோடு சேவை செய்யலாம். (மத். 24:14) இந்த வேலைக்கு நிதி ஆதரவு கொடுப்பது முக்கியமானது, ஆனால் இந்த நற்செய்தியை மற்றவர்களுக்குப் பரப்புவதில் நம்முடைய பலம், நேரம், திறமைகள், பேச்சுத் திறன் ஆகியவற்றைப் பயன்படுத்துவது அதைக் காட்டிலும் அதிக மதிப்புவாய்ந்தது. (2 கொரி. 9:7) யெகோவாவின் மாபெரும் வேலையில் முழு இருதயத்தோடு சேவை செய்வதிலிருந்து வரும் மகிழ்ச்சியை நீங்கள் அனுபவிக்கிறீர்களா?
4 ஆகஸ்ட் மாதத்தின்போது மெய்ச்சமாதானம் பாதுகாப்பு பற்றி பேசுகையிலும் பழைய புத்தகங்களை அல்லது அதற்கு பதிலாக நமது பிரசுர அளிப்பில் உட்பட்டிருக்கும் ஏதாவது ஒரு புரோஷூரை அளிக்கையிலும் நீதியின் மனச்சாய்வுகொண்ட ஆட்களுக்கு இதயப்பூர்வமான அழைப்பைக் கொடுக்க நாம் உற்சாகப்படுத்தப்படுகிறோம். உலக முழுவதிலும் வன்முறை அதிகரிக்கையில் மெய்ச் சமாதானம் பாதுகாப்பு பற்றிய எதிர்பார்ப்பைக் குறித்து ஜனங்கள் அதிகமதிகமாய் அக்கறையுள்ளவர்களாக ஆகின்றனர். வெளி ஊழியத்தில் முழு பங்கை கொண்டிருப்பதன் மூலமும் சாந்தமுள்ள ஆட்களை சமாதானத்தின் மெய்யான ஊற்றுமூலத்திடம் வழிநடத்துவதன் மூலமும் யெகோவாவிடம் நம்முடைய இருதயம் முழுமையாக இருக்கிறது என்பதை காண்பிக்கும் வாய்ப்பு நமக்கு இருக்கிறது.
நீங்கள் சீக்கிரமாக பயனியர் செய்யக்கூடுமா?
5 உங்களுடைய வெளி ஊழிய நேரத்தை அதிகரிப்பதற்கு பகல்வெளிச்சமிருக்கும் சமயத்தில் கூடுதலான மணிநேரத்தை பயன்படுத்திக்கொள்ளக்கூடுமா? பயனியர் சேவைக்காக தகுதிபெறுவதற்காக வெளி ஊழியத்தில் உங்கள் மணிநேரத்தை அதிகரிப்பதற்கு ஆகஸ்ட் மாதம் மிகச் சிறந்த மாதமாக இருக்கக்கூடும்.
6 செப்டம்பரில் துவங்கும் புதிய ஊழிய ஆண்டின் ஆரம்பத்தில் ஒழுங்கான பயனியராக வேண்டும் என்ற குறிகோளுடன் அநேகர் தங்களுடைய வெளி ஊழியத்தை அதிகரிக்கின்றனர். நீங்கள் அதைக் குறித்து யோசித்தீர்களா? ஓர் ஒழுங்கான பயனியராவதற்கு நீங்கள் உங்களுடைய அட்டவணையில் சரிமாற்றங்களைச் செய்யக்கூடுமா? யெகோவாவின் சேவையில் அதிக நேரத்தைச் செலவழிப்பதற்காக, அவசியமானால் உங்கள் வாழ்க்கை முறையை எளிமையான ஒன்றாக ஆக்கிக்கொள்வதற்கு மனமுள்ளவர்களாக இருப்பீர்களா? (மத். 6:22) அதைச் செய்வதற்கு நீங்கள் உண்மையிலே விரும்பினால் மற்றும் பயனியர் சேவை செய்ய முடியும் என்று உணர்ந்தால், யெகோவா தேவனை ஜெபத்தில் அணுகுங்கள். அவருடைய உதவிக்காகவும் வழிநடத்துதலுக்காகவும் கேளுங்கள். (நீதி. 16:3) ஒழுங்கான பயனியர் சேவையில் ஈடுப்படுவதற்காக உங்கள் சாத்தியத்தைக் குறித்து மூப்பர்களிடம் பேசுங்கள். உங்கள் சந்தர்ப்ப சூழ்நிலை ஒழுங்கான பயனியர் செய்ய அனுமதிக்கிறது என்பதைக் காண்பீர்களேயானால் நீங்கள் ஆரம்பிப்பதற்குக் குறைந்தது 30 நாட்களுக்கு முன் உங்கள் விண்ணப்ப நமூனாவை கொடுக்க நிச்சயமாயிருங்கள்.
7 சிறியவரோ பெரியவரோ நாமெல்லாருமே முழு இருதயத்தோடு யெகோவாவை சேவிக்கிறோம் என்பதைக் காண்பிப்போமாக. நம்முடைய இருதயம் பிளவுபட்ட ஒன்றாக இருக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. (மாற்கு 12:30) ராஜ்ய பிரசங்கிப்பு வேலைக்கு நாம் கொடுக்கும் வைராக்கியமுள்ள ஆதரவு யெகோவாவிடம் முழு இருதயத்தைக் காத்துக் கொள்வதற்கு நம்மை வழிநடத்தும்.
-
-
கூட்டங்கள் நமது பிள்ளைகளுக்குப் பயனளிக்கின்றனராஜ்ய ஊழியம்—1989 | ஆகஸ்ட்
-
-
கூட்டங்கள் நமது பிள்ளைகளுக்குப் பயனளிக்கின்றன
1 இஸ்ரவேல் தேசத்தினருக்குப் பின்வரும் கட்டளை கொடுக்கப்பட்டது: “புருஷர்களும் ஸ்திரீகளும் பிள்ளைகளும் . . . கேட்டு கற்றுக்கொள்வதற்கு . . . ஜனத்தைக் கூட்டு.” (உபா. 31:12, 13) ஆம், பிள்ளைகள், சிறுபிள்ளைகளும்கூட வணக்கத்திற்கான இஸ்ரவேலரின் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். அதைப்போலவே இன்றும் யெகோவாவின் சாட்சிகளுடைய சபைக்கூட்டங்களில் பிள்ளைகளும் பயனடைகின்றனர்.—சங். 148:1, 12.
2 பிள்ளைகளின் கவனம் எளிதில் திசைதிரும்புகிறது என்பது மெய்யே. என்ன சொல்லப்படுகிறதோ அதற்கு கூர்ந்து கவனம் செலுத்தும்படி அவர்களுக்குக் கற்பிக்க வேண்டியது அவசியம். பேசப்படும் தகவல்களில் சிலவற்றை புரிந்துகொள்வதற்கும் அவர்களுக்கு உதவி தேவை. கிறிஸ்தவ கூட்டங்களிலிருந்து நம் பிள்ளைகள் அதிகம் பெற்றுக்கொள்வதற்கு உதவிசெய்ய பின்வரும் ஆலோசனைகள் பயனுள்ளதாக இருக்கும்.
கூட்டங்களுக்காக தயார் செய்யுங்கள்
3 வீட்டில் கொடுக்கப்படும் சரியான பயிற்சி யெகோவாவின் வணக்கத்தில் மற்றவர்களோடு கூடிவரவேண்டும் என்ற சிலாக்கியத்தைப் பிள்ளைகள் மதித்துணர்வதற்கு உதவக்கூடும். இது கடவுளுடைய சித்தம் என்பதையும் இவ்விஷயத்தில் கீழ்ப்படிவது நன்மைகளைக் கொண்டுவருகிறது என்பதையும் பிள்ளைகள் புரிந்துகொள்வதற்கு உதவி செய்யவேண்டும். கிறிஸ்தவ கூட்டங்கள் அவர்களுக்குங்கூட என்பதை மிகச்சிறிய வயதுள்ள பிள்ளைகளும் புரிந்துகொள்ள உதவப்படலாம்.—சங். 133:1; ஏசா. 48:17, மத். 19:14.
4 தனிப்பட்ட தயாரிப்பு, பிள்ளை கூட்டங்களை அனுபவித்து மகிழ்வதை அதிகரிக்கும். கூட்டங்களின்போது உபயோகிப்பதற்காக பிள்ளைகள் தங்கள் சொந்த பைபிளையும் பாட்டு புத்தகத்தையும் மற்ற படிப்பு பிரசுரங்களையும் வைத்திருக்கச் செய்வது உதவியாக இருக்கும். ஒவ்வொரு கூட்டத்திற்கும் குறைந்த பட்சம் பாடத்தின் ஒரு பகுதியையாவது இளம் பிள்ளைகள் தயாரிப்பதற்குப் பெற்றோர் உதவ வேண்டும். (எபி. 10:23) பிள்ளையினுடைய புரிந்துகொள்ளக்கூடிய மற்றும் கூட்டங்களில் பங்குகொள்ளக்கூடிய திறமைக்கு ஏற்ப அது செய்யப்படலாம். தெளிவாகவே அனைவரும் பிள்ளைகள் உட்பட கூட்டங்களுக்காக தயார் செய்வதற்கு நேரத்தை ஒதுக்கி வைப்பது விரும்பத்தக்க ஒன்றாகும்.—எபி. 13:15.
5 சில பிள்ளைகள் கூட்டங்களில் விசேஷ பொறுப்புகளைக் கொண்டிருப்பதன் மூலம் நன்மையடைகிறார்கள். மிகச் சிறிய பிள்ளையும்கூட கடவுளுடைய பெயர், ராஜ்யம் அல்லது ஒரு குறிப்பிட்ட பைபிள் பொருள் எத்தனை முறை சொல்லப்பட்டது என்பதையும் மற்றும் அதைப்பற்றி சொல்லப்பட்ட சில காரியங்களையும் குறித்து வைப்பதில் மகிழ்ச்சியைக் காணலாம். வயதில் இவர்களைவிட சற்று பெரிய பிள்ளைகள் சொல்லப்படும் அல்லது வாசிக்கப்படும் வசனங்களை எழுதி வைக்கும்படியான பொறுப்பு கொடுக்கப்படலாம். பொறுப்பு எதுவாக இருப்பினும் அவர்களுடைய முயற்சிக்காக பிள்ளைகளை பாராட்டுவீர்களானால் அதனால் அவர்கள் நன்மையடைவார்கள். பின்னால் தாங்கள் கற்றுக்கொண்ட காரியங்களின் பேரில் அல்லது கூட்டங்களில் பேசப்பட்ட காரியங்களை அவர்கள் எப்படி அனுபவித்து மகிழ்ந்தார்கள் என்பதன் பேரில் குறிப்பு சொல்லும்படியான வாய்ப்பு அவர்களுக்குக் கொடுக்கலாம்.
6 வாசிக்கத் தெரிந்த எல்லாப் பிள்ளைகளும் தனிமையில் சங்கத்தின் பிரசுரங்களை வாசிப்பதற்காக தனிப்பட்ட திட்டத்தைக் கொண்டிருப்பதற்கு உற்சாகமும் உதவியும் கொடுக்கப்படலாம். பிள்ளையின் திறமைக்கு ஏற்ப பைபிள் கதை புத்தகம், பெரிய போதகர் மற்றும் உன் இளமை ஆகிய புத்தகங்களையும் அத்துடன் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளையும் வாசிக்கும் திட்டத்தை இது உட்படுத்தலாம். இப்படிப்பட்ட ஒரு திட்டம் சமீப கால தேவராஜ்ய பிரசுரங்கள் எல்லாவற்றையும் வாசித்தறியும் நிலையில் ஓர் இளைஞனை வைக்க வேண்டும்.
உடையும் சீரொழுங்கும்
7 கிறிஸ்தவ கூட்டங்களில் நமது இளைஞர் மரியாதைக்குரிய முறையில் உடுத்தியிருப்பதைக் கண்டு கூட்டங்களுக்கு வருகை தரும் ஆட்கள் நல்ல அபிப்பிராயத்தைப் பெற்றிருக்கிறார்கள். கூட்டங்களுக்கு வருகையில் ஒரு பிள்ளை உடுத்தியிருக்கும் அந்த முறைதானே, பொதுவாக கூட்டங்களின் பேரில் அதனுடைய மனநிலையையும் நடத்தையையும் பாதிக்கிறதென கவனிக்கப்பட்டிருக்கிறது. புரூக்லினிலுள்ள சங்கத்தின் தலைமை அலுவலகத்தையோ அல்லது எந்த ஒரு கிளை அலுவலகத்தையோ விஜயம் செய்கையிலும் சிறியோரும் பெரியோரும் கூட்டத்திற்குச் செல்லுகையில் உடுத்துவதுபோலவே உடுத்தியிருப்பது பொருத்தமாக இருக்கும்.—நம் ஊழியம் புத்தகம் பக்.131.
8 கூட்டங்களில் நம்முடைய பிள்ளைகளின் சிறந்த நடத்தையும்கூட யெகோவாவின் பெயருக்கு துதியையும் கனத்தையும் கொண்டுவருகிறது. ஆகையால், கூட்டங்களில் பிள்ளைகளை கவனமாய் மேற்பார்வை செய்ய வேண்டிய அவசியத்தைப் பெற்றோர் கண்டுணர வேண்டும். அக்கறையுள்ள பெற்றோர் கூட்டங்களின்போது குடும்பமாக உட்காருவதற்கு ஏற்பாடு செய்வார்கள். மேலும் தங்களுடைய பிள்ளைகள் எல்லாச் சமயங்களிலும் சீரொழுங்கை காத்துக்கொள்ளும்படியும் கவனித்துக்கொள்வார்கள். கூடுதலான உதவிபெறும் ஆலோசனைகளுக்காக, தங்கள் பிள்ளைகள் சம்பந்தமாக நல்ல வெற்றி கண்டிருக்கும் மற்றவர்களிடம் பெற்றோர் பேசலாம்.
9 பிள்ளைகள் நம்முடைய கிறிஸ்தவ கூட்டங்களில் நடைபெறும் வணக்கத்தில் முழுமையாக பங்குகொள்ள வேண்டும் என்பதும் ‘மற்றவர்களை அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஏவ’ வேண்டும் என்பதும் நம்முடைய ஆசையாக இருக்கிறது. (எபி. 10:24) யெகோவா தேவனுடைய ஏற்பாட்டில் கூட்டங்கள் பிள்ளைகளுக்கும்கூட.
-
-
சீஷராக்குவதற்கு நமக்கு உதவும் கூட்டங்கள்ராஜ்ய ஊழியம்—1989 | ஆகஸ்ட்
-
-
சீஷராக்குவதற்கு நமக்கு உதவும் கூட்டங்கள்
ஆகஸ்ட் 7-ல் துவங்கும் வாரம்
பாட்டு 43 (103)
10 நிமி: சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகளும். செப்டம்பரில் ஒழுங்கான பயனியர் சேவை செய்ய சிந்தித்திருப்பவர்கள் விண்ணப்ப நமூனாவை பூர்த்தி செய்து, கூடுமானால் 30 நாட்களுக்கு முன்பே மூப்பர்களிடம் சமர்ப்பிக்கும்படி உற்சாகப்படுத்தவும். புதிய பத்திரிகைகளை உபயோகித்து அளிப்பை சுருக்கமாக நடித்துக் காட்டுங்கள். இரண்டாவது சனிக்கிழமையன்று பத்திரிகை ஊழியத்தில் பங்குபெற எல்லாரையும் உற்சாகப்படுத்தவும்.
20 நிமி: “முழு இருதயத்தோடு சேவை செய்தல்.” பேச்சும், கட்டுரையை கேள்விகளோடு கலந்துரையாடலும். பாரா 4-ஐ சிந்திக்கையில், ஆகஸ்ட் மாத புரோஷூர் அளிப்பின் பேரில் ஒரு நடிப்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
15 நிமி: “உங்களுக்கு நினைவிருக்கிறதா?” என்ற ஏப்ரல் 15, 1989 ஆங்கில காவற்கோபுர கட்டுரையிலுள்ள கேள்விகளை பயன்படுத்தி சபையாருடன் கலந்தாலோசிப்பு. (இந்திய மொழிகளில்: “ஆவியுலக தொடர்பின் நுகத்தை உதறித்தள்ளுதல்,” செப்டம்பர் 1, 1988 காவற்கோபுரம்.)
பாட்டு 128 (10), முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 14-ல் துவங்கும் வாரம்
பாட்டு 151 (25)
10 நிமி: சபை அறிவிப்புகள், கணக்கு அறிக்கை. சங்கம் பெற்றுக்கொண்டதாக தெரிவித்திருக்கும் நன்கொடையைப்பற்றி அறிவிக்கவும்.
20 நிமி: “சாட்சிக்கொடுப்பதற்காக ஒவ்வொரு வாய்ப்பையும் ஆவலுடன் பற்றிக்கொள்ளுங்கள்—பகுதி II” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. பாரா 4-ஐ சிந்திக்கும்போது சந்தர்ப்ப சாட்சியம் பற்றிய உள்ளூர் அனுபவங்களையும் சுருக்கமான நடிப்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
15 நிமி: நியாயங்கள் புத்தகம் பக்கங்கள் 187-91-ல் உள்ள “சுதந்தரம்” என்ற தலைப்பின் அடிப்படையில் பேச்சு. யெகோவாவைச் சார்ந்து செயல்பட வேண்டிய அவசியத்தையும் சுதந்தரமாய் செயல்படுவதனால் வரும் நாசகரமான விளைவுகளையும் உயர்த்திக் காட்டுங்கள். சபையின் தேவைக்கேற்றபடி அமைத்துக்கொள்ளுங்கள்.
பாட்டு 63 (32), முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 21-ல் துவங்கும் வாரம்
பாட்டு 183 (73)
10 நிமி: சபை அறிவிப்புகள், தேவராஜ்ய செய்திகள். ஏப்ரல் மாத ஊழிய அறிக்கையை விமர்சிக்கவும். வெளி ஊழியத்தில் உங்கள் சபையின் சாதனைகளைப் பாராட்டுங்கள். நான்காவது சனிக்கிழமையன்று எல்லாரும் பத்திரிகை ஊழியத்தில் பங்குபெற உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: “கூட்டங்கள் நமது பிள்ளைகளுக்குப் பயனளிக்கின்றன.” கட்டுரையின் பேரில் கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. கட்டுரையில் சிபாரிசு செய்யப்பட்ட ஆலோசனைகளைப் பொருத்தியிருக்கும் முன்மாதிரியுள்ள பெற்றோரையும் பிள்ளைகளையும் பேட்டிக் காண்பதற்கு ஒரு சில நிமிடங்களைப் பயன்படுத்தவும். கூட்டங்களுக்காக தயார் செய்ய பிள்ளைகளுக்கு உதவுவதற்கு தாங்கள் ஆரம்பித்தில் என்ன செய்தார்கள், உதவிசெய்ய தற்போது அவர்கள் என்ன செய்கிறார்கள், இதன் விளைவாக அவர்களுக்குக் கிடைத்திருக்கும் தனிப்பட்ட பயன்கள் என்ன என்பவற்றை பெற்றோரிடமிருந்து கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.
15 நிமி: சபையின் தேவைகள், அல்லது “நமது சகோதரர்களுக்கான மதித்துணர்வு.” அக்டோபர் 1, 1988 ஆங்கில காவற்கோபுரத்தின் பேரில் பேச்சு. (இந்திய மொழிகளில்: “உண்மையான நண்பர்களை அடைய முயற்சி,” அக்டோபர் 1, 1988 காவற்கோபுரம்.)
பாட்டு 65 (36), முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 28-ல் துவங்கும் வாரம்
பாட்டு 130 (58)
5 நிமி: சபை அறிவிப்புகள். முதல் ஞாயிற்றுக் கிழமைக்கான வெளி ஊழிய ஏற்பாடுகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
10 நிமி: ஊழியக் கண்காணி வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள் பகுதியைக் கலந்தாலோசிக்கிறார். இந்தக் கூட்டங்கள் சுருக்கமானதாக இருக்கவேண்டும். தொகுதியை ஒழுங்கமைப்புச் செய்வதே அதன் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும். என்ன தயாரிப்பு அவசியம்? கூட்டங்கள் பலனுள்ளதாக இருப்பதற்கு உதவிசெய்ய பிரஸ்தாபிகள் என்ன செய்யலாம்? மார்ச் 1989 நம் ராஜ்ய ஊழியம் “கேள்விப் பெட்டி”-யும், அத்துடன் “ஊழியத்திற்கான அதிக அர்த்தமுள்ள கூட்டங்கள்” என்ற நம் ராஜ்ய ஊழியம் பிப்ரவரி 1979-ல் வெளிவந்த கட்டுரையையும் சுருக்கமாக விமர்சிக்கவும்.
10 நிமி: “உங்களுடைய தயாள குணத்திற்கு நன்றி.” பேச்சு. பயனியர் ஊழியப் பள்ளிகளை ஆதரிக்க நாம் என்ன செய்யக்கூடும்? கொடுக்கப்படும் இந்த உதவி ஏன் போற்றத்தக்கதாய் இருக்கிறது?
20 நிமி: கிறிஸ்தவ பெண்கள்—மரியாதையைப் பெற்ற மற்றும் மரியாதைக்குரிய சபை அங்கத்தினர். நியாயங்கள் புத்தகம், பக்கங்கள் 431-5 பேரில் மூப்பரின் பேச்சு. பைபிளில் அவர்களுக்கென்று குறிக்கப்பட்டிருக்கும் பாகத்திற்கு இசைய வாழ்வதற்காக சகோதரிகளை பாராட்டவும்.
பாட்டு 82 (90), முடிவு ஜெபம்.
செப்டம்பர் 4-ல் துவங்கும் வாரம்
பாட்டு 192 (76)
8 நிமி: சபை அறிவிப்புகள் சமீப இதழ்களிலிருந்து பேச்சுக் குறிப்புகளைக் கலந்தாலோசியுங்கள். வாரக் கடைசியில் நடைபெறும் ஊழிய ஏற்பாடுகளுக்கு ஆதரவு தரும்படி பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: “நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—வீட்டுக்கு வீடு பதிவுச் சீட்டைப் பயன்படுத்தி.” கேள்வி-பதில். நேரமிருந்தால் பாராக்களை வாசிக்கலாம். வீட்டில் இல்லாதவர்கள் மற்றும் மறுசந்திப்பு செய்யப்பட வேண்டியவர்கள் ஆகிய இரு சாராருக்காகவும் வீட்டுக்கு வீடு பதிவுச் சீட்டைப் பயன்படுத்துவதற்கான முறையை பட்டியலிட்டு காட்டவும். பதிவேடுகளில் பதிவுசெய்து வைக்கப்பட வேண்டிய தகவல்களைப் பற்றி சபையாருடன் விமர்சனம் செய்யுங்கள். மேலும் ஏன் என்று விளக்கவும். அபூர்வமாக வேலை செய்யப்படும் பிராந்தியங்களிலும்கூட வீட்டில் இல்லாதவர்களின் பெயர்களை பதிவுசெய்து வைக்கும்படி வலியுறுத்துங்கள். வெளி ஊழியம் செய்யும்போது எல்லாரும் வீட்டுக்கு வீடு பதிவுச் சீட்டை வைத்திருக்கும்படி நினைப்பூட்டுங்கள்.
12 நிமி: புரோஷூர்களை உபயோகித்து பைபிள் படிப்புகளை ஆரம்பித்தல். கலந்தாலோசிப்பு. புரோஷூர்களை விநியோகிப்பது மட்டும் போதாது. சீஷராக்குவதற்கான நமது குறிகோளை நிறைவேற்றுவதற்குப் பைபிள் படிப்புகள் நடத்தப்பட வேண்டும். புரோஷூர்களைப் பயன்படுத்தி பைபிள் படிப்புகள் எப்படி தொடங்கலாம் என்பதைச் சபையாருக்குக் காட்டுங்கள். (செப்டம்பர் 1986 நம் ராஜ்ய ஊழியம் பக்கம் 8-ஐ பார்க்கவும்.) புரோஷூரிலிருந்து பைபிள் படிப்பு ஆரம்பிப்பதை நடித்துக் காட்டுங்கள். புரோஷூரை உபயோகித்து பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதில் வெற்றி கண்டிருக்கும் பிரஸ்தாபிகளை பேட்டி காணவும். அல்லது 1986 வருடாந்தர புத்தகம் பக்கங்கள் 11-13-ல் மற்றும் 1987 வருடாந்தர புத்தகம் பக்கம் 48-ல் காணப்படும் அனுபவங்களை எடுத்துச் சொல்லலாம். பிரஸ்தாபிகளுடைய நல்நோக்குடன்கூடிய அணுகுமுறைகளையும் அவர்கள் அடைந்திருக்கும் நல்ல பலன்களையும் வலியுறுத்திக் காட்டுங்கள்.
10 நிமி: தேவ ராஜ்ய காலண்டர்களின் படங்களிலிருந்து கற்றுகொள்ளுதல். பேச்சு. ஜூலை 1, 1989 ஆங்கில காவற்கோபுரத்தில் காணப்படும் “கோராசீனே, உனக்கு ஐயோ!—ஏன்?” என்ற கட்டுரையை 1989 காலண்டருடன் சேர்த்துப் பயன்படுத்துங்கள். கட்டுரையை வாசிக்கையில் அதற்கு ஒத்துள்ள காலண்டர் படத்தைப் பயன்படுத்துவதன் பயனை உயர்த்திக் காட்டுங்கள். ஜனவரி 1 (தமிழில் ஜூன் 1, 1989) மார்ச் 1, மற்றும் மே 1, 1989 ஆங்கில காவற்கோபுர இதழ்களில் காணப்படும் ஒத்திசைவான கட்டுரைகளை சகோதரர்களுக்கு நினைப்பூட்டுங்கள். 1990-ம் ஆண்டிற்குரிய காலண்டர்களுக்கான ஆர்டர்கள் வரவேற்கப்படுகின்றன. இவற்றில் பைபிள் தேசங்களிலிருந்து கூடுதலான கல்வி புகட்டும் படங்கள் இருக்கும். (இந்திய மொழிகளில்: “உட்பார்வை” புத்தகத்திலிருந்து அல்லது “ஏய்ட்” புத்தகத்திலிருந்து பொருத்தமான தகவலை பயன்படுத்துங்கள்.)
பாட்டு 32 (10), முடிவு ஜெபம்.
-
-
சபை புத்தகப் படிப்புராஜ்ய ஊழியம்—1989 | ஆகஸ்ட்
-
-
சபை புத்தகப் படிப்பு
உயிர்—அது இங்கு எப்படி வந்தது? பரிணாமத்தின் மூலமா அல்லது படைப்பின் மூலமா? என்ற ஆங்கில புத்தகத்திலிருந்து நடைபெறும் சபை புத்தகப்படிப்பு அட்டவணை:
ஆகஸ்ட் 14: பக். 202 —பக். 207
ஆகஸ்ட் 21: பக். 207 —பக். 214
ஆகஸ்ட் 28: பக். 214 —பக். 220
செப்டம்பர் 4: பக். 220 —பக். 223
உபதலைப்பு வரை அல்லது உபதலைப்பு முதற்கொண்டு.
-
-
சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருள்ராஜ்ய ஊழியம்—1989 | ஆகஸ்ட்
-
-
சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருள்
மெய்ச் சமாதானம், பாதுகாப்பு—இவற்றின் ஊற்றுமூலம்
1 தெச. 5:3—மனிதனால் உண்டுபண்ணப்படும் சமாதானம் நீடித்திராது.
மீகா 4:3, 4—கடவுளுடைய சமாதானம் நிரந்தரமானது.
-