உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்
    ராஜ்ய ஊழியம்—1989 | நவம்பர்
    • வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்

      நவம்பர் 6 -12

      சந்தாக்களை அளிக்கும்போது

      1. எந்தக் கட்டுரைகளை நீங்கள் எடுத்துக் காட்டுவீர்கள்?

      2. சம்பாணைக்குப் பேச்சுப்பொருளை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துவீர்கள்?

      நவம்பர் 13 -19

      நாம் நம்பிக்கையான மனநிலையோடு இருப்பது எப்படி

      1. சந்தாக்களை அளிக்கும்போது?

      2. ஒரே பிராந்தியத்தில் மறுபடியும் மறுபடியும் ஊழியம் செய்யும்போது?

      3. எதிர்ப்புகளைச் சந்திக்கும்போது?

      நவம்பர் 20 -26

      நாம் ஏன்

      1. வீட்டுக்காரரைப் பேசும்படி அனுமதிக்கவேண்டும்?

      2. பேசிக்கொண்டிருக்கும் நமது ஊழியத்துணைவரைக் குறுக்கிடக்கூடாது?

      நவம்பர் 27 -டிசம்பர் 3

      மறுசந்திப்புகள் செய்கையில்

      1. வீட்டுக்கு வீடு பதிவுச் சீட்டில் நீங்கள் எதைக் குறித்து வைக்கவேண்டும்?

      2. நீங்கள் எப்படி ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்கலாம்?

  • சம்பாஷணைக்குப் பேச்சுப்பொருள்
    ராஜ்ய ஊழியம்—1989 | நவம்பர்
    • சம்பாஷணைக்குப் பேச்சுப்பொருள்

      கொடிய காலங்களுக்கு முடிவு வரும்.

      2 தீமோ. 3:1—கடைசிநாட்கள் கொடியவையாக இருக்கின்றன.

      லூக். 21:28—மீட்பு சமீபமாயிருக்கிறது.

  • சந்தாக்களைப் பெறுவதன் மூலம் யாவைத் துதியுங்கள்
    ராஜ்ய ஊழியம்—1989 | நவம்பர்
    • சந்தாக்களைப் பெறுவதன் மூலம் யாவைத் துதியுங்கள்

      1 ஒவ்வொரு புதிய விழித்தெழு! இதழையும் பெறுவது ஆ என்னே ஒரு மகிழ்ச்சி! இந்தச் சிறப்பான இதழ்கள் உலக நிகழ்ச்சிகளை பைபிள் தீர்க்கதரிசனங்களுடன் சம்பந்தப்படுத்திக் காட்டுகையில் நாம் சமீப நிகழ்ச்சிகளை அறிந்தவர்களாய் இருக்கும்படி உதவுகிறது. ஆகவே யெகோவாவைத் துதிப்பதற்கான நமது வாய்ப்புகளை நாம் மேம்பட்ட விதத்தில் மதித்துணரக்கூடும்.—ஆமோஸ் 3:7; எபி. 13:15.

      2 இதுவரையில் 1989-ம் ஆண்டு ஆங்கில விழித்தெழு! பத்திரிகைகள் “இந்தப் பூமியைச் சுதந்தரிப்பவர்கள் யார்?” “மதிப்பீடுகளுக்கு என்ன ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது?” மற்றும் “வன்முறை—நீங்கள் என்ன செய்யக்கூடும்?” போன்ற வாசகரை உட்படுத்தும் தலைப்புகளைக் கொண்டிருந்தன. இப்படிப்பட்ட தகவல்கள் காவற்கோபுரம் பத்திரிகைக்கான நமது மதித்துணர்வை விரிவாக்குகிறது. ஏனெனில் இது, நூற்றுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக கடவுளுடைய ராஜ்யமே மனிதவர்க்கத்தின் பிரச்னைகளுக்கு மெய்யான பரிகாரம் என்பதை ஆதரித்து வந்திருக்கிறது. இந்த ஒழுங்குமுறையின் தற்கால நிகழ்ச்சிகள் “கடைசி நாட்களை” எவ்வாறு குறித்துக்காட்டுகின்றன என்பதைக் காண்பதற்கு இவ்விரண்டு இதழ்களும் வாசகர்களை விழிப்பூட்டி வந்திருக்கின்றன. (2 தீமோ. 3:1-5) மெய்யாகவே இந்த ஆண்டின் ஏப்ரல் மற்றும் மே (தமிழில்: ஏப்ரல் முதல் ஜூலை வரை) மாதங்கள், துன்மார்க்க மகா பாபிலோனை தைரியமாக வெளிப்படுத்திக் காட்டிய வரலாற்று புகழ்பெற்ற காவற்கோபுரம் இதழ்களைக் கண்டது.

      சந்தாக்கள் ஆவிக்குரிய உணவை அளிக்கின்றன

      3 நவம்பர் மாதத்தின்போது நாம் விழித்தெழு! அல்லது காவற்கோபுரம் பத்திரிகைக்கு அல்லது இரண்டிற்குமே சந்தாவை அளிக்கும் சிலாக்கியத்தைக் கொண்டிருப்போம். உங்கள் குடும்ப அங்கத்தினர் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட சந்தா இருக்கிறதா? அப்படியானால் மற்றவர்களும் சந்தா செய்யும்படி சிபாரிசு செய்வதற்குரிய மேம்பட்ட நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள். காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகையின் தொடர்ச்சியான வாசகராக பத்திரிகை ஊழிய நாளில் தனிப்பட்ட பத்திரிகைகளை அளிப்பதில் காட்டும் அதே உற்சாகத்தை சந்தாக்களை அளிப்பதிலும் நீங்கள் காட்டலாம்.

      4 ஒருவர் சந்தா எடுக்க விரும்புவாரா என்பதைக் குறித்து நீங்கள் முன்கூட்டியே தீர்மானித்துவிடாதீர்கள். அதற்கு மாறாக, அந்த நபர் உங்களுடைய மனமார்ந்த உற்சாகமான அளிப்பிற்கு பிரதிபலிக்கட்டும். “ஒரு புத்தகத்தை அதன் மேல் அட்டையைப் பார்த்து நியாயந்தீர்க்க முடியாது” என்ற ஒரு கூற்றை சிந்தித்துப் பார்ப்பதன் மூலம் அதிக நம்பிக்கையான ஒரு மனநிலையை வளர்ப்பதற்கு ஒரு சகோதரிக்கு உதவி அளிக்கப்பட்டது. பட்சபாதமில்லாத யெகோவா தேவனைப் போன்றிருக்க அவள் கற்றுக்கொண்டாள். (அப். 10:34) உங்களுடைய வீட்டுக்கு வீடு ஊழியத்தோடுகூட நீங்கள் உங்கள் பைபிள் படிப்பு மாணாக்கரிடம், பத்திரிகை மார்க்கம் கொண்டிருப்பவரிடம், உடன் வேலையாட்களிடம் அயலகத்தாரிடம், உறவினர்களிடம் மேலும் தெரு ஊழியம் செய்கையில் சந்தாக்களை அளித்திருக்கிறீர்களா?

      5 சந்தா எடுக்க எங்களிடம் பணம் இல்லை என்று அந்தச் சமயத்தில் சொல்லும் வீட்டுக்காரர்களை அநேகர் கண்டிருக்கின்றனர். வேறு ஏதோ சில காரணங்களுக்காக சந்தா செய்வதற்கு தங்களுக்கு வசதியில்லை என்று அவர்கள் சொல்லக்கூடும். காரியம் அப்படியிருக்குமானால் அந்த நபர் மனமுள்ளவராக இருப்பாரானால் ஆரம்ப சந்திப்பில் அப்போதே சந்தா சீட்டைப் பூர்த்தி செய்துகொள்ளுங்கள். பிறகு நன்கொடைக்காக திரும்ப போய் சந்தியுங்கள். எப்பொழுது வரும்படி ஒத்துக்கொண்டீர்களோ அந்தச் சமயத்தில் திரும்பப் போய் சந்திக்க நிச்சயமாயிருங்கள். இது திருத்தமான வீட்டுக்கு வீடு பதிவுச் சீட்டு வைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

      சந்தர்ப்ப சாட்சி கொடுத்தல்

      6 நமது சாட்சி கொடுக்கும் வேலைக்கு முக்கியமான வழிமுறை வீட்டுக்கு வீடு ஊழியமாக இருக்கிறபோதிலும் இந்த நாட்களில் சந்தர்ப்ப சாட்சி கூடுதலான முக்கியத்துவத்தை பெற்று வருகிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். வீட்டுக்கு வீடு ஊழியம் செய்கையில் வீட்டில் இல்லாத அநேகரை சந்திப்பதற்கு அது ஒரு தலைச்சிறந்த வழிவகையாக இருக்கிறது. மேலும் உங்கள் உலகப்பிரகாரமான வேலையிலிருக்கும் உடன் வேலையாட்களைப் பற்றியதென்ன? ஒரு சந்தா அளிப்பு மாதத்தின்போது தன் உடன் வேலையாட்களிடம் விவேகமாக சாட்சி கொடுக்க ஒரு சகோதரர் தீர்மானித்தார். அவர் ஆரம்பத்தில் அந்த மாதத்தில் பத்து சந்தா எடுக்க இலக்கு வைத்தார். என்றபோதிலும் அவர் அந்த இலக்கை இரண்டே நாட்களில் அடைந்துவிட்டதைக் குறித்து ஆச்சரியமடைந்தார். அந்த மாதத்தின்போது அவர் 68 சந்தாக்களை அறிக்கை செய்தார், அவருடைய மகிழ்ச்சியைக் கற்பனை செய்துபாருங்கள்!

      7 நவம்பர் மாதத்தின்போது வீட்டுக்கு வீடு வேலையிலும் மறுசந்திப்புகளிலும் சந்தர்ப்ப சாட்சி கொடுக்கையிலும் நாம் சந்தாவை அளிக்கக்கூடும். சந்தா மறுக்கப்படுகையில், நாம் ஒருவேளை பின்வருமாறு சொல்லலாம்: “இந்த முறை சந்தா செய்வதற்கு நீங்கள் விரும்பாத போதிலும், நாம் இப்பொழுது கலந்தாலோசித்த இந்த இதழை நீங்கள் வாசித்து மகிழ்வீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்தத் துணைப்பத்திரிகையோடு நாங்கள் இதை ரூ4 நன்கொடைக்கு உங்களிடம் விட்டுச் செல்கிறோம்.” இந்த முறையில் அநேக பத்திரிகைகள் விநியோகிக்கப்படுகின்றன.

      8 சங்கீதக்காரன் நம்மை ஊக்குவிப்பதாவது: “யெகோவாவை துதியுங்கள்.” (சங். 147:11) காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளுக்குச் சந்தாக்களை அளிப்பதன் மூலம் நவம்பர் மாதத்தில் நாம் யாவைத் துதிப்பது ஆ, எவ்வளவு பொருத்தமாக இருக்கும்.

  • முழுநேர ஊழியத்தை உங்கள் வாழ்க்கைப் பணியாக ஆக்கிக்கொள்ளுங்கள்
    ராஜ்ய ஊழியம்—1989 | நவம்பர்
    • முழுநேர ஊழியத்தை உங்கள் வாழ்க்கைப் பணியாக ஆக்கிக்கொள்ளுங்கள்

      1 நம்முடைய ஒப்புக்கொடுத்தலை நிறைவேற்றுவதன் பேரிலும் நித்திய ஜீவனை அடைவதன் பேரிலும் நேரடி தொடர்புள்ள ஒரு வேலையானது கிறிஸ்தவ ஊழியமே. (ரோ. 10:10; 1 தீமோ. 4:16) தம்மை பின்பற்றும்படி இயேசு மற்றவர்களை அழைத்தபோது, இதில் தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து பிரசங்கிப்பது உட்பட்டிருக்கிறது என்பதை அவர் தெளிவுப்படுத்தினார். (லூக்கா 9:57-62) இந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதானது ஒருவேளை நம்முடைய தொழிலை மாற்றிக்கொள்வதை கேட்காதபோதிலும், முதலிடம் கொடுக்கும் விஷயத்தில் மாற்றம் செய்ய வேண்டியதை இது நிச்சயமாகவே கேட்கிறது. ஒரு மிக முக்கியமான வேலையானது யெகோவாவின் “மகத்துவங்களை அறிவிப்பதாகும்.” இது சீஷராக்குவதையும் உட்படுத்துகிறது. (1 பேதுரு 2:9; மத். 24:14; மத். 28:19, 20) ஆகையால் யெகோவாவுக்கு முழுமையாக ஒப்புக்கொடுத்திருக்கும் அனைவரும் ஊழியத்தை மையமாக கொண்டே தங்கள் வாழ்க்கையை அமைக்க வேண்டும். தங்களுடைய தனிப்பட்ட சூழ்நிலை அனுமதிக்கக்கூடிய அநேகர் முழுநேர ஊழியத்தை தங்கள் வாழ்க்கைப் பணியாக ஆக்கிக்கொள்ள முடிந்திருக்கிறது.—2 கொரி 4:1, 7.

      பலன் மிகுந்த ஒரு வாழ்க்கைமுறை

      2 ஒரு பயனியர் தனது 54 ஆண்டுகால முழுநேர ஊழியத்தை பின்னோக்கிப் பார்க்கையில் பின்வருமாறு எழுதும்படி தூண்டப்பட்டார்: “யெகோவா தந்திருக்கும் அந்த மகிழ்ச்சி இந்த உபத்திரவங்களைக் காட்டிலும் வெகுவாய் உயர்ந்துவிடுகிறது. என்னுடைய வாழ்க்கையை திரும்பவும் வாழ்வதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுமானால் மகா கடவுளாகிய யெகோவாவைத் துதிப்பதில் என்னுடைய எல்லா நேரத்தையும் செலவழிக்க நான் மனமுள்ளவனாயிருப்பேன்.” இப்படிப்பட்ட ஒரு செயலிலிருந்து கிடைக்கும் அந்த வகையான எல்லையற்ற உள்ளார்ந்த திருப்தியையும் மகிழ்ச்சியையும் எந்த ஓர் உலகப்பிரகாரமான தொழில் அல்லது வேலையிலிருந்து பெறமுடியாது. முழுநேர சேவைக்குரிய ஒரு வாழ்க்கைப் போக்கை நாடிசெல்வது தெய்வபக்தியின் வெளிக்காட்டாக இருக்கிறது. இது விலையிடமுடியாத மதிப்புள்ள பலன்களை இக்காலத்திலும் வரவிருக்கும் நிச்சயமான ஆசீர்வாதங்களை எதிர்காலத்திலும் உடையதாக இருக்கிறது.—1 தீமோ. 4:8.

      3 முழுநேர ஊழியத்தின் ஒரு வாழ்க்கைப்பணி மிகுதியான மகிழ்ச்சியைக் கொண்டுவரக்கூடும். ஏனெனில் மிகுதியாக கொடுத்தல் அதில் உட்பட்டிருக்கிறது. (அப். 20:35) யெகோவா தேவனோடும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் அதிக மதிப்பு வாய்ந்த நட்புறவு பேணி வளர்க்கப்படுகிறது. மேலும் ராஜ்ய அக்கறைகளில் அதிக முழுமையாய் ஈடுபடுவதன் மூலம் அது பலப்படுத்தப்படுகிறது. (லூக். 169; 1 கொரி. 15:58) உங்களுடைய சந்தர்ப்ப சூழ்நிலைமைகளுக்கேற்ப முழு ஆத்துமாவோடுகூடிய முறையில் நீங்கள் செயல்படுவதன் காரணமாக மனநிறைவையும் குற்றமற்ற மனச்சாட்சியையும் அனுபவிக்க முடிகிறது. உங்களுடைய அதிக கட்டுப்பாடு மிகுந்த வாழ்க்கை முறையானது “ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் முதலாவது தேடுங்கள்” என்ற கிறிஸ்துவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தவர்களாய் நீங்கள் அதிகத்தை நிறைவேற்றுவதற்கு உதவுகிறது.—மத். 6:33.

      உங்களுடைய ஊழியத்தில் படிப்படியாய் முன்னேறுங்கள்

      4 ஏதோ ஒரு துறையிலோ அல்லது பெருமுயற்சியிலோ படிப்படியான சாதனைகளைக் கொண்ட ஒரு போக்கை பின்தொடருவதே ஒரு வாழ்க்கைப் பணியில் உட்பட்டிருக்கிறது. ஒரு பயனியராக நீடித்து நிலைத்திருப்பதற்கும் மகிழ்ச்சியையும் வைராக்கியத்தையும் தொடர்ந்து காத்துக்கொள்வதற்கும் படிப்படியான சாதனைகள் மிகவும் முக்கியம். தம்முடைய அமைப்பின் மூலமாக யெகோவா ஆவிக்குரிய கல்வியை சபைக்கூட்டங்கள் மற்றும் மாநாடுகளின் மூலம் கொடுக்கிறார். அதோடுகூட டிசம்பர் மாதத்தில் மூப்பர்கள் நடத்தும் கூட்டங்களும் மற்றும் வட்டார கண்காணி சந்திப்பின்போது கூட்டங்களும் இருக்கின்றன. வட்டார மாநாட்டு வாரங்களில் பயனியர்களுக்காக ஒரு விசேஷித்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது. இப்படிப்பட்ட கூட்டங்களில் கொடுக்கப்படும் சிறந்த ஆலோசனைகளின்பேரில் குறிப்புகள் எடுத்து, அவற்றை உள்ளான அக்கறையுடன் உங்கள் வாழ்க்கையில் பொருத்துகிறீர்களா?

      5 நீங்கள் முன்னேறக்கூடிய ஒரு வேதப்படிப்பை நடத்தவில்லையென்றால் நீங்கள் இதை ஓர் இலக்காக கொண்டிருக்கிறீர்களா? வீட்டுக்கு வீடு வேலையில் உங்களுடைய முன்னுரைகளில் அல்லது உங்கள் பிராந்தியத்தில் பொதுவாக சந்திக்கும் எதிர்ப்புகளை கையாளும் முறைகளில் நீங்கள் முன்னேற்றம் செய்யக்கூடுமா? நியமிக்கப்படாத பிராந்தியங்களுக்குச் சென்று ஊழியம் செய்வதை அல்லது உதவி தேவைப்படும் சபைகளுக்குத் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ சென்று உதவி செய்வதை சிலாக்கியமாக கருதியிருக்கிறீர்களா? இவைகளிலும் இன்னும் பல வழிகளிலும் நீங்கள் உங்களுடைய வாழ்க்கைப் பணியில் முன்னேற்றம் செய்யலாம். கடவுளுடைய வேலையை நிறைவேற்றுவதில் உங்களுடைய திறமைகளை மேம்பட்டதாக்கலாம்.

      6 இந்த இலையுதிர் பருவத்தில் பயனியர் சேவை செய்யவிருக்கும் அநேகரோடு நீங்களும் சேர்ந்துகொள்ள உண்மையிலேயே சிந்தித்துக் கொண்டிருப்பீர்களேயாகில் இந்தக் காரியத்தைக் குறித்து யெகோவாவிடம் விடாப்பிடியாக ஜெபத்தில் தரித்திருங்கள். (மத். 7:7, 8) முதலில் துணைப்பயனியர்களாக சேவை செய்வதன் மூலம் அநேகர் யெகோவாவின் பேரிலுள்ள தங்கள் நம்பிக்கையை பலப்படுத்தியிருக்கின்றனர்.

      7 ஒருவர் பயனியர் செய்வதற்கு உதவக்கூடிய அந்தக் காரியம் ஏதோ வழக்கத்துக்கு மாறான ஒரு திறமையோ அல்லது வரமோ அல்ல. யெகோவாவின் பேரிலும் அயலகத்தார் பேரிலுமுள்ள உண்மையான அன்பும் அதோடு தனிப்பட்ட தியாகங்களைச் செய்வதற்கு மனமுள்ளவர்களாக இருப்பதுமே தேவைப்படுகிறது. (மத். 22:37-39; பிலி. 4:13) அர்மகெதோனைத் தப்பிப்பிழைக்கக்கூடியவர்களுக்கு வெளிப்படையாக இருக்க வேண்டிய பண்புகளை விருத்தி செய்வதற்கு இந்தக் கிறிஸ்தவ ஊழியம் உங்களுக்கு உதவிசெய்யும். முழுநேரமாக அதைத் தொடருவது உங்களுடைய அன்பையும் விசுவாசத்தையும் மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் விரிவுப்படுத்தும். (கலா. 5:22, 23) ஆகவே பயனியர் ஊழியத்தை நெஞ்சார நேசித்திடும் வாழ்க்கைப் பணியாக ஆக்கிக்கொள்ள முயன்று, அதை உறுதியாய் பற்றிக்கொள்ளுங்கள்!

  • சீஷராக்குவதற்கு நமக்கு உதவும் கூட்டங்கள்
    ராஜ்ய ஊழியம்—1989 | நவம்பர்
    • சீஷராக்குவதற்கு நமக்கு உதவும் கூட்டங்கள்

      நவம்பர் 6-ல் துவங்கும் வாரம்

      பாட்டு 1 (42)

      10 நிமி: சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகளும். இந்த வார கடைசியில் வெளி ஊழியத்தில் கலந்துகொள்ள எல்லாப் பிரஸ்தாபிகளையும் உற்சாகப்படுத்தவும். சந்தாவை அல்லது விழித்தெழு! அல்லது காவற்கோபுரம் தனிப்பட்ட பிரதிகளை அளிக்க பத்திரிகைகளிலிருந்து பயன்படுத்தக்கூடிய பேச்சுக் குறிப்புகளை சிபாரிசு செய்யுங்கள்.

      20 நிமி: “சந்தாக்களைப் பெறுவதன் மூலம் யாவைத் துதியுங்கள்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளைப் பயன்படுத்துவதை நடித்துக் காட்டுங்கள். பாரா 5-ல் கொடுக்கப்பட்டிருக்கும் ஆலோசனையை சேர்த்துக்கொள்ளுங்கள்.

      15 நிமி: நாம் சந்தாவை எவ்வாறு அளிக்கலாம். சந்தா அளிப்பு செய்வதில் முழு பங்கை கொண்டிருப்பதற்காக அவரவர் புத்தகப்படிப்பு தொகுதிகளில் உள்ள பிரஸ்தாபிகளை தாங்கள் எப்படி உற்சாகப்படுத்துவார்கள் என்பதைப் பற்றி இரண்டு புத்தகப்படிப்பு நடத்துபவர்கள் கலந்தாலோசிக்கிறார்கள். வாழ்க்கையின் பல்வேறு சூழ்நிலைகளில் உள்ள தனிப்பட்ட வாய்ப்புகளைக் குறித்து கலந்தாலோசியுங்கள். உள்ளூர் பிராந்தியங்களில் எவ்வாறு சந்தாக்கள் பெற்றார்கள் என்பதைக் குறித்து சுருக்கமான ஓரிரண்டு அனுபவங்களைச் சொல்லுங்கள்.

      பாட்டு 5 (81), முடிவு ஜெபம்.

      நவம்பர் 13-ல் துவங்கும் வாரம்

      பாட்டு 9 (82)

      10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. சங்கம் பெற்றுக்கொண்டதாக தெரிவித்திருக்கும் நன்கொடை பற்றி அறிவிக்கவும். உள்ளூர் சபைக்குச் செய்யப்படும் பண ஆதரவுக்காக போற்றுதலை வெளிக்காட்டுங்கள்.

      25 நிமி: “முழு நேர ஊழியத்தை உங்கள் வாழ்க்கை பணியாக ஆக்கிக்கொள்ளுங்கள்.” கட்டுரையின் கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. அதைத் தொடர்ந்து முழுநேர ஊழியத்தைத் தங்கள் வாழ்க்கைப் பணியாக ஆக்கிக்கொள்வதற்கு தாங்கள் எப்படி உற்சாகப்படுத்தப்பட்டார்கள் என்பதைத் தெரிவிக்க முழுநேர ஊழியர்களைப் பேட்டி காணவும். என்ன ஆசீர்வதங்களை அனுபவித்து மகிழ்ந்தார்கள்? முழுநேர ஊழியத்தை ஒரு வாழ்க்கை பணியாக மேற்கொள்ள தாங்கள் ஏன் மற்றவர்களை உற்சாகப்படுத்துவார்கள்?

      10 நிமி: இதுவரையில் பெற்ற சந்தாக்களின் எண்ணிக்கையையும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனுபவங்களையும் அறிவிக்கவும்.

      பாட்டு 17 (2), முடிவு ஜெபம்.

      நவம்பர் 20-ல் துவங்கும் வாரம்

      பாட்டு 40 (31)

      10 நிமி: சபை அறிவிப்புகளும் தேவராஜ்ய செய்திகளும்.

      20 நிமி: “நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—பத்திரிகைகளைக் கொண்டு.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. பாரா 5-ஐ கலந்தாலோசித்தப் பின்பு நன்கு தயாரித்த ஒரு பிரஸ்தாபி 30-60 வினாடி பத்திரிகை அளிப்பை செய்யட்டும். ஒவ்வொரு நடிப்பும் வித்தியாசப்பட்ட சூழ்நிலைமைகளை கொண்ட வித்தியாசப்பட்ட வீட்டுக்காரருடன் செய்யப்பட வேண்டும். பிரஸ்தாபி பத்திரிகையிலுள்ளவற்றை நன்றாக அறிந்திருக்கிறார் என்பதையும் வீட்டுக்காரருடைய சூழ்நிலைமைக்குப் பொருந்தக்கூடிய பொருத்தமான குறிப்புகளைத் தக்கவாறு மாற்றி பயன்படுத்துகிறார் என்பதையும் நடித்துக் காட்டவேண்டும்.

      15 நிமி: “ஒரே மந்தையாக உறுதியாய் நின்றுகொண்டிருத்தல்” மற்றும் “விசேஷ நடவடிக்கைக்காக பத்திரிகைகளை ஆர்டர் செய்யுங்கள்” ஆகியவற்றை கலந்தாலோசியுங்கள். ஊழியக் கண்காணி இதைக் கையாள வேண்டும்.

      பாட்டு 51 (24), முடிவு ஜெபம்.

      நவம்பர் 27-ல் துவங்கும் வாரம்

      பாட்டு 69 (75)

      10 நிமி: சபை அறிவிப்புகள். இந்த வாரக்கடைசியில் ஊழியத்தில் கலந்துகொள்ள எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.

      20 நிமி: “குடும்ப ஒத்துழைப்பு நன்மைகளைக் கொண்டுவருகிறது.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. குடும்பத்தலைவராக இருக்கக்கூடிய ஒரு மூப்பரால் கையாளப்பட வேண்டும்.

      15 நிமி: “நீர் எப்பொழுதுமே காலத்தாமதமானவரா?” ஜூன் 8, 1989 ஆங்கில விழித்தெழு! பக். 21-3-ன் பேரில் சார்ந்த பேச்சு. (இந்திய மொழிகளில்: “‘பேச ஒரு காலமுண்டு,’—எப்பொழுது?”, நவம்பர் 1988 காவற்கோபுரம்.)

      பாட்டு 73 (71), முடிவு ஜெபம்.

      டிசம்பர் 4-ல் துவங்கும் வாரம்

      பாட்டு 52 (59)

      10 நிமி: சபை அறிவிப்புகள்.

      20 நிமி: டிசம்பர் மாதத்தின்போது வார்த்தையைப் பிரசங்கியுங்கள். டிசம்பர் மாதத்தின்போது வெளி ஊழியத்தில் முழுமையான பங்கைக் கொண்டிருப்பதற்கு உற்சாகமூட்டும் பேச்சு. பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பின் மூலமாக யெகோவாவின் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்ட வேத வார்த்தையானது நாம் அனைவரும் படிப்பதற்கும் வாசிப்பதற்கும் மிகத் தெளிவான முறையில் அளிக்கப்பட்டிருக்கிறது. பைபிளோடுகூட நாம் ஒரு பத்திரிகை அளவான புரோஷூரை அளிப்போம். ஒரே கடவுளும் பிதாவுமான யெகோவாவின் சத்தியத்தை உண்மை மனமுள்ள ஆட்கள் கற்றுக்கொள்ளும்படி உதவி செய்வதன் மூலம் நாம் அவர்களை நித்திய ஜீவனுக்குரிய பாதையில் வழிநடத்துகிறவர்களாயிருப்போம். (யோவான் 17:3; 1 கொரி. 8:6) புதிய சம்பாஷணைக்குப் பேச்சுப்பொருளை பயன்படுத்தி உங்களுடைய சபை பிராந்தியத்தில் இந்தப் பிரசுர அளிப்பு எப்படிச் செய்யப்படலாம் என்பதைக் காட்டும் ஓரிரண்டு சுருக்கமான நடிப்புகளை செய்துமுடிக்கவும்.

      15 நிமி: சபையின் தேவைகள் அல்லது “ஏன் மனிதருக்கல்ல, ஆனால் கடவுளுக்கே பயப்பட வேண்டும்?” ஆங்கில காவற்கோபுரம் ஜூன் 1, 1989 பக். 4-7-லிருந்து உற்சாகமூட்டும் பேச்சு. (இந்திய மொழிகளில்: “வெற்றிகரமான பெற்றோராயிருப்பது எவ்வாறு?” ஆகஸ்ட் 1989 காவற்கோபுரம்.) கட்டுரையைச் சபையின் தேவைகளுக்கேற்றவாறு பொருத்திக் கொள்ளவும்.

      பாட்டு 57 (29), முடிவு ஜெபம்.

  • சபை புத்தகப் படிப்பு
    ராஜ்ய ஊழியம்—1989 | நவம்பர்
    • சபை புத்தகப் படிப்பு

      வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! என்ற ஆங்கில புத்தகத்திலிருந்து நடைபெறும் சபை புத்தகப்படிப்பு அட்டவணை:

      நவம்பர் 13: பக்.18—பக்.21

      நவம்பர் 20: பக்.22—பக்.27

      நவம்பர் 27: பக்.27—பக்.32

      டிசம்பர் 4: பக்.33—பக்.37

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்