பாட்டு 32
“வீடு வீடாய்”
1. வீடு வீடாய் அறிவிப்போம்,
வார்த்தை பரப்புவோம்.
ஊருராக தெரிவிப்போம்,
‘ஆடுகள்’ போஷிப்போம்.
கிறிஸ்து முன் சொன்ன செய்தியை,
ராஜ்ய ஆளுகையை,
மூத்த, இளம் கிறிஸ்தவர்கள்
பிரசங்கிக்கிறார்கள்.
2. வீடு வீடாய் பேசுவோமே.
இரட்சிப்பை சொல்வோமே.
யெகோவாவை வணங்கிடும்
எல்லாருக்கும் வரும்.
அவர் பெயர் அறியாது
எவ்வாறழைப்பது?
அவர்கள் வீடுகளுக்கும்
அப்பெயர் செல்லட்டும்.
3. வீடு வீடாய் சென்றாலுமே
எல்லாரும் கேளாரே.
சிலசமயம் பழிப்பர்;
கேளாதோர் இருப்பர்.
இயேசுவின் நாட்களைப் போன்று
வார்த்தை கேளாருண்டு.
“செம்மறியாடு” கேட்குமே;
பின்வாங்க மாட்டோமே.
4. வீடு வீடாய் அறிவிப்போம்,
ராஜ்ய செய்தி சொல்வோம்.
தாம் எந்தஸ ‘ஆடு’மாகலாம்,
தெரிந்துகொள்ளலாம்.
யெகோவாவின் பெயர் சொல்வோம்,
சத்தியத்தைக் கூறுவோம்.
வீடு வீடாய் நாம் சந்திப்போம்,
“செம்மறியைக்” காண்போம்.