பாட்டு 16
ராஜ்ய நம்பிக்கைக்காக மகிழ்வோம்!
1. மகிழ்வோம்! மகிழ்வோம்!
ராஜ்ய நம்பிக்கை ஏற்போமே!
மகிழ்வோம்! மகிழ்வோம்!
ராஜ்யம் சமீபமே!
அவர் ஆட்சி ஆதரித்து,
வைராக்கியம் காட்டுங்கள்.
ஒளிரும் ராஜ்ய நம்பிக்கை,
மக்கள் அறிவார்கள்.
மகிழ்வோம்! மகிழ்வோம்!
ராஜ்ய நம்பிக்கை சொல்வோமே!
மகிழ்வோம்! மகிழ்வோம்!
ராஜ்யம் சமீபமே!
2. பூரிப்போம்! பூரிப்போம்!
நம்பிக்கையாக இருப்போம்!
பூரிப்போம்! பூரிப்போம்!
தேவமைதி காண்போம்!
நம்பிக்கையில் பலப்படு,
அதில் வெட்கிடாதே.
இருளில் இனி இல்லையே,
மரணம் மீண்டாயே.
பூரிப்போம்! பூரிப்போம்!
யெகோவாவையே நம்புவோம்!
பூரிப்போம்! பூரிப்போம்!
கண்ணிக்குத் தப்புவோம்!
3. துதிப்போம்! துதிப்போம்!
ராஜ்யநம்பிக்கை தூண்டவே!
துதிப்போம்! துதிப்போம்!
வைராக்கியமாகவே!
வயலை நீ ஏறிட்டுப்பார்!
அறுப்பு காலமே.
அதன் மிகுந்த கனிகள்,
ஆம், செம்மறிகளே.
துதிப்போம்! துதிப்போம்!
பெலனளிக்கும் தேவனை!
துதிப்போம்! துதிப்போம்!
காப்போம் உத்தமத்தை!