பாட்டு 44
யெகோவா உண்மையிலேயே அக்கறையுள்ளவர்
1. தேவ அக்கறை இதமாய்
ஆறுதலளிக்கிறது.
‘தலைமுடியும் எண்ணினாரே.’
கவலைகளும் எதற்கு?
2. சோதனைகள் ஏற்பட்டாலும்
இழக்கவேண்டாம் நம்பிக்கை.
வீழ்ந்தசிட்டையும் கவனிக்க,
கைவிடமாட்டாரே நம்மை.
3. உலகெங்கும் கிறிஸ்தவர்கள்
சந்திக்கின்றனர் துன்பங்கள்.
இவற்றால் புடமிடுகிறார்;
உதவியும் பெறுவார்கள்.
4. தேவன் உண்மையுள்ளவராய்
அன்பு, அக்கறைகாண்பிப்பார்.
பரிசுத்தசேவை தொடர்ந்தால்,
நிச்சயம் பலனளிப்பார்.