பாட்டு 171
ஒரு வெற்றிப் பாட்டு
1. ‘பாடிடுவீரே, யெகோவா தேவன் வெற்றிசிறந்தார்.
குதிரை வீரனைக் கடலிலே தள்ளினார்.
என்பெலனுமானவர், எனக்கு இரட்சிப்பும் இவர்.
இவர் தேவன், நான் உயர்த்திடுவேன்.
பார்வோன் இரதங்களை, சேனைகளை இவர் கடலில் வீழ்த்தினாரே.
யெகோவாவே உம் வலதுகரம் வல்லமைமிகுந்ததே.’
2. இஸ்ரவேல் மக்கள் இவ்வாறு வெற்றியைப் பாடினார்கள்.
நாம் வாழும் காலத்தில் காண்கிறோமே வெற்றிகள்.
கிறிஸ்து ஆளுகிறாரே, சாத்தான் ஒழுங்கிற்காட்டமே.
மகிழ்கிறோம் நம்மீட்பு சமீபம்! வலுசர்ப்பம் சாத்தான்,
பொல்லாத தூதர்கள் இங்கு தள்ளப்பட்டார்கள்.
மாவெற்றிதேவ ஆட்டுக்குட்டிக்கே; இருள்கடந்திடுமே.
3. யெகோவாவுக்கே உரியது வல்லமை, மகிமை.
அவர் ராஜ்யம் தரும், ஆம், கடைசி அடியை.
துதிஏறெடுக்கிறோம், நாம் நன்றியாயிருக்கிறோம்.
மகிழ்கிறோம் இன்று வாழ்வதிலே.
யெகோவாவுக்கும் தம்மேசியாவுக்குமாய் நன்றி செலுத்துகிறோம்.
அவர்களிடமிருந்தே மீட்பு. வெற்றிப்பாட்டு பாடுவோம்!