பாட்டு 155
“ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்”!
1. கிறிஸ்து உன்னை ஏற்றதுபோல் பிறரை ஏற்பாயே!
உன்சகோதரனுக்காகவும் கிறிஸ்து மாண்டாரே.
பலமுள்ளோரே பலவீனருக்குதவுங்கள்,
நீதி நாடிட, நம்பிக்கைகாக்க உதவுங்கள்.
தீர்க்கதரிசிகளால் முன் எழுதப்பட்டவை,
சகிப்புத்தன்மை பெருக்கும் ஆறுதல் நம்பிக்கை.
நமக்கே பிரியமாய் நடவாமலிருப்போம்,
சகோதரர் நலன்களை நம்நலம்போல் பார்ப்போம்.
2. போர் கற்காத மனிதரை யெகோவா சேர்க்கிறார்.
தம்மைந்தன் பூமியில் அமைதி நிலைநாட்டுவார்.
எல்லாத்தேசம், இனம், மொழிமக்களைச் சேர்க்கின்றார்,
தம்சட்டங்களை உள்ளத்தில் நேசிக்கச் செய்கின்றார்.
தேவனுக்கு மகிமையாய் நாம்வரவேற்கிறோம்,
எந்த வேறுபாடுமின்றி நண்பர்களாகின்றோம்.
தேவ இரக்கம் பின்பற்றுதல் பெரும்சிலாக்கியமே,
தம்மைந்தனைப் பின்பற்றி நம்உள்ளம் திறப்போமே.
3. எல்லாரும் ராஜா‘யா’வைத் துதிக் கஊக்குவிப்போம்,
அவர் ஜனத்தோடே ஒன்றாய்ப்பாடி மகிழுவோம்.
யெகோவாவின் புகழைச் சந்திக்கும் யாவருக்கும்,
வீடுகளில், வீதிகளில் அறிவிக்க வேண்டும்.
தேவனைத் துதிக்கும் இக்கணம் மீண்டும் வராது,
ஆம், அநீதிமக்களுக்குக் கடைசி நாளிது.
சகோதரரை நேசிப்போம், தேவன்மெய்யர் என்போம்,
தேவ வார்த்தைப்படி யாவரையும் ஏற்றுக்கொள்வோம்.