-
தயாரிப்பின் மதிப்புதேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
-
-
ஆதாரமாக திட்டவட்டமான பிரசுரிக்கப்பட்ட பொருள் எதுவும் தனிப்பட குறிப்பிடப்படாதிருக்கையில், நியமிக்கப்பட்ட ஒரு தலைப்புப் பொருளில் ஒரு பேச்சை விரிவாக்கும்போது பயனுள்ள வகையில் என்ன படிகள் எடுக்கப்படலாம்?
-
-
ஒரு குறிப்புத்தாளை உண்டுபண்ணுதல்தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
-
-
படிப்பு 9
ஒரு குறிப்புத்தாளை உண்டுபண்ணுதல்
1 சுவிசேஷ எழுத்தாளன் லூக்கா தன் நண்பன் தேயோப்பிலுவுக்கு எழுதினார்: “ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் . . . அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று.” (லூக். 1:3, 4) ஆக, ஆராய்ச்சி செய்து தன் தலைப்புப் பொருளைப்பற்றி வரிசையாக உண்மைகளைச் சேகரித்தப் பின் அவர் அவற்றை புரிந்துகொள்ளத்தக்க வரிசைமுறையில் ஒழுங்குபடுத்த தொடங்கினார். ஆகவே நம்முடைய பேச்சுக்களை தயாரிப்பதில் இதே பழக்கத்தைப் பின்பற்றுவது நமக்கு நன்மை பயப்பதாயிருக்கும். இது ஒரு குறிப்புத்தாளை உண்டுபண்ணுவதை அர்த்தப்படுத்துகிறது.
2 முக்கிய எண்ணங்களை தேர்ந்தெடுத்தல். பேசுவது, விசேஷமாக கடவுளுடைய வார்த்தையைக் கலந்துபேசுவது, மற்றொருவரின் மனதுக்கு கருத்துக்களை எடுத்துச்செல்லும் நோக்கத்துக்காக இருப்பதால், ஒரு பேச்சில் நாம் எடுத்துச்செல்ல எதிர்பார்க்கும் எண்ணங்கள் முதலாவது நம்முடைய சொந்த மனதில் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும். உங்கள் பொருளை சேகரித்தப் பின்பு, கேட்போர் நீங்கள் பேசிமுடித்தப்பின் சரியாக எதை தங்களோடு எடுத்துச்செல்ல எதிர்பார்க்கிறீர்கள் என்பதை தீர்மானிக்கும் நிலையில் இருக்கிறீர்கள். இதை ஒரே வாக்கியத்தில் அமைக்க முயற்சிசெய்யுங்கள். உங்கள் பேச்சின் சாராம்சம் இதில் அடங்கியிருந்தால், கேட்போர் நினைவில் வைத்துக்கொள்ள நீங்கள் விரும்பும் மையக் கருத்தை அது உள்ளடக்கியிருந்தால், இதுவே உங்கள் பேச்சின் தலைப்பாக இருக்க வேண்டும். இதை எழுதிவைப்பது பிரயோஜனமாயிருப்பதை காண்பீர்கள், அப்பொழுது நீங்கள் தயார்செய்யும்போது அதை எடுத்துப்பார்க்க முடியும்.
3 இப்பொழுது நீங்கள் திரட்டியிருக்கும் பொருளிலிருந்து இந்த ஒரே முக்கிய தலைப்பைப் புரிந்துகொள்வதற்குத் தேவையான முக்கிய கருத்துக்களைத் தேர்ந்தெடுங்கள். இவையே பேச்சின் பிரதான குறிப்புகளாகச் சேவிக்க வேண்டும். உங்கள் பொருளை அட்டைகளில் வகைப்படுத்தியிருப்பீர்களானால், உங்களுக்கு முன்னால் ஒரு மேசையில் இவற்றை வரிசைமுறையில் வைக்கலாம். இப்பொழுது இந்தப் பிரதான குறிப்புகளை நிலைநிறுத்த உதவும் தேவையான மற்ற கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து, அது ஆதரிக்கும் பிரதான குறிப்புக்குப் பின்னால் அதனுடைய சரியான இடத்தில் ஒவ்வொன்றையும் வைக்கவும். திரட்டப்பட்டிருக்கும் பல்வேறு பிரதான குறிப்புகளையும் உபகுறிப்புகளையும் தேர்ந்தெடுத்துக் குறிப்புத்தாளில் சரியான இடத்தில் புகுத்துகையில், இவற்றில் சில உங்கள் தலைப்பின் விளக்கத்துக்கு குறிப்பிடத்தக்கவிதமாக அதிகத்தைச் சேர்க்காதிருப்பது
-