பாட்டு 77
“யெகோவா என் மேய்ப்பராயிருக்கிறார்”
1. மேய்ப்பர் யெகோவா தேவனே;
நானும் பயப்படேனே.
ஆடுகளில் மிக அக்கறை;
மறவாறே அவற்றை
அமர்ந்த நீரண்டை சேர்ப்பார்.
என் ஆத்துமா இரட்சிப்பார்.
தம்பேருக்கே நடத்துகிறார்
நீதியின் பாதைகளில்.
தம்பேருக்கே நடத்துகிறார்
நீதியின் பாதைகளில்.
2. பள்ளத்தாக்கில் நடப்பேனே.
தீங்குக்கு அஞ்சிடேனே.
வல்லமேய்ப்பர் சமீபம்என்றும்.
அவர் கோல் என்னைத் தேற்றும்.
பாத்திரம்நிரம்பச் செய்தார்.
தைலத்தால் புதுப்பித்தார்.
அவர் கிருபை பின்தொடரும்;
அவர் வீட்டில் நிலைப்பேன்.
அவர் கிருபை பின்தொடரும்;
அவர் வீட்டில் நிலைப்பேன்.
3. என் மேய்ப்பர் ஞானி என்பேனே!
பூரித்துத் துதிப்பேனே.
அவர் கனிவன்பைப் போற்றுவேன்;
ஆடுகட்கெல்லாம் சொல்வேன்.
அவர் வார்த்தையைக் கைக்கொள்வேன்;
அவர் பாதை நடப்பேன்.
ஊழியத்தைப் பொக்கிஷமாய்க் காப்பேன்;
பயன்படுத்திக் கொள்வேன்.
ஊழியத்தைப் பொக்கிஷமாய்க் காப்பேன்;
பயன்படுத்திக் கொள்வேன்.