பாட்டு 24
“இந்த உலகத்தின் பாகமல்ல”
((யோவான் 17;16)
1. தேவன் நம்மைப் பிரித்தாரே,
நம் இதயம் அவருக்கே,
இவ்வுலகின் பாகமில்லை,
பின்பற்றுவோமே கிறிஸ்துவை
2. உலகபோக்கு தவிர்ப்போம்.
கடவுள் வேலை செய்வோம்.
மாம்ச காரியங்கள் ஒழிப்போம்.
அப்போதே என்றென்றும் வாழ்வோம்.
3. தேவநட்பை வளர்ப்பவர்
பொல்லா உலகம் வெறுப்பர்.
துன்புறுத்தல் ஏற்படுமே,
கிறிஸ்துவின் மூலம்காப்பாரே.
4. “இவர்களைநீர்காப்பீரே,”
என்று கர்த்தர் ஜெபித்தாரே.
எனவே நாம் திடன்கொள்வோம்.
மாகவனிப்பு பெறுவோம்.