பாட்டு 151
ராஜ்யத்தின் இந்த நற்செய்தியைப் பிரசங்கிப்போம்
1. இயேசு முன் கூறின ராஜ்ய செய்தியைப் பிரசங்கிப்போம்.
ராஜ்ய செய்தியை நாம் பிரசங்கிப்போம்!
செய்தியைப் பிரசங்கிக்கையில் தைரியமாயிருப்போமே.
ராஜ்ய செய்தியைப் பிரசங்கிப்போமே!
தெருக்களிலும் வீடுகளிலும் செய்தி பிரசங்கி.
அச்சுத்தாளின் மூலம் பூமியெங்கும் பிரசங்கி.
திறமை, கனிவு, ஆர்வத்துடன் பிரசங்கிப்போமே.
ராஜ்ய நற்செய்தி பிரசங்கிப்போமே!
2. தேவன் அளிக்கும் விருந்தின் செய்தியைப் பிரசங்கிப்போம்,
ராஜ்ய செய்தியை நாம் பிரசங்கிப்போம்!
விரைவில் தாழ்மையுள்ளோர்க்கும் மாபந்தி இருக்குமே.
ராஜ்ய செய்தியைப் பிரசங்கிப்போமே!
சிறந்த திராட்சரசம் மேசையில் ஏராளமுண்டு,
பசியுள்ளோரெல்லாருக்கும் ஆகாரம் உண்டு.
இரட்சிப்பு முகங்களை எல்லாம் பிரகாசிப்பிக்குமே.
ராஜ்யசெய்தியைப் பிரசங்கிப்போமே!
3. நிலவும்ராஜ்யசந்தோஷசெய்தியைப்பிரசங்கிப்போம்.ராஜ்ய
செய்தியை நாம் பிரசங்கிப்போம்!
தேவனின் வார்த்தையை நேசிப்போர் துக்கிக்க வேண்டாமே.
ராஜ்ய செய்தியைப் பிரசங்கிப்போமே!
நன்மை செய்ய விரும்புவோருக்கு உதவியுண்டு.
தேவனை நம்புவோர்க்கு சமாதானம் உண்டு.
தேவ சேவையில் இன்பம் உண்டென்று பிரசங்கிப்போமே.
ராஜ்யசெய்தியைப் பிரசங்கிப்போமே!