பாட்டு 160
உத்தமத்தில் நடப்பது
1. யெகோவாவே, என்னை நியாயந்தீரும்.
நான் உத்தமத்திலே நடந்ததைப்பாரும்.
என்னை சோதித்து பரீட்சித்திடும்.
என்மனம், இதயம் புடமிட்டருளும்.
(பல்லவி)
2. பொய்யைப் பேசும் துன்மார்க்கரோடிரேன்.
சத்தியம் வெறுப்போரை நானும் வெறுக்கிறேன்.
தீயோருடன் என் உயிர் நீக்காதீர்.
கறைபட்டோரிடம் ஒப்படைத்திடாதீர்.
(பல்லவி)
3. உம்வீட்டிலே இருக்கவாஞ்சித்தேன்.
தூயவணக்கத்தை நித்தம் ஆதரித்தேன்.
பலிபீடத்தைச் சுற்றி வருவேன்.
நாடெல்லாம் கேட்டிட நன்றி சொல்லிடுவேன்.
(பல்லவி)
ஆனால் நானோ என்உத்தமத்திலே
நித்தியமாய் நடக்க தீர்மானித்துள்ளேனே.