பாட்டு 84
கடவுளுடைய மாபெரும் அதிசய செயல்கள்
1. சர்வவல்ல யெகோவாவே,
உம்செயல்கள் வியக்கவே!
சூரியன் சந்திரன் துதிக்கவே;
விண்மீன்கள் உம்மைப்போற்றவே.
2. உம்வழியில் உண்டு நீதி;
நீரே எங்கள் நீதிபதி!
சிருஷ்டிகள் துதிக்கிறது.
மக்கள் ஏன் பாடக்கூடாது?
3. உம்மைப் போற்றாதிருப்பரோ?
அஞ்சாமலும் இருப்பரோ?
உண்மையுள்ளவரும் நீரே,
உன்னத தேவனும் நீரே.
4. உம் தீர்ப்பு ஞானமானதே!
உம் நீதி காட்டுகிறதே!
அனைத்து தேசத்தாருமே
உம் நாமத்தைத் தொழட்டுமே.