பாட்டு 65
ஒற்றுமையாய்க் கூடிவருதல்
1. ஒன்றாகக் கூடுவோமே,
எத்துணை இன்பமே.
மெய்யன்புடன் நேசிப்போம்;
இசைந்து சேவிப்போம்!
அப்பொழுது யெகோவாவே
ஆசீர்வதிப்பாரே;
எர்மோன் பனிபோல் இருக்கும்;
புத்துயிரளிக்கும்.
2. ஒன்றாகக் கூடிடுவோம்,
நற் செயற்கேவுவோம்.
மெய்நம்பிக்கை சொல்வோமே,
பகிர்ந்து கொள்வோமே.
நாம் கூட்டங்களுக்குச் செல்வோம்,
தயாரித்திடுவோம்.
இவ்வாறு ஆயத்தமாவோம்,
சத்தியங்களைச் சொல்வோம்.
3. தேவன் உண்மையுள்ளவர்,
சொல் தவறாதவர்.
நம் நம்பிக்கையைக் காப்போம்,
நாம் சேர்ந்து படிப்போம்.
தேவநாள் நெருங்குவது,
நன்றாக அறிந்து
கூடுவதை விட்டுவிடோம்;
அதிகம் கூடுவோம்.