பாட்டு 180
கடவுளுடைய சொந்த புத்தகம்—ஒரு பொக்கிஷம்
1. ஓர்நூலுண்டு, அதன் ஏடுகள் ஈயும்
அமைதி நம்பிக்கை மகிழ்ச்சியும்.
அதன் அற்புத எண்ணங்கள் வல்லவை,
ஜீவனளித்து கண் திறப்பவை.
அவ்வருமை நூல் பரிசுத்த பைபிள்.
ஆவியால் எழுதப்பட்ட பைபிள்.
ஏவப்பட்டோர் தேவனைநேசித்தனர்.
அவராவியால் தூண்டப்பட்டனர்.
2. தேவவல்லமை பற்றி எழுதினர்,
சிருஷ்டிப்பின் பதிவைக் காண்பித்தனர்.
முதல் மனிதன் பூரணதன்மைகள்,
பரதீசை இழந்த விதங்கள்,
தூதன் ஒருவன் தேவாதிகாரத்தை
எதிர்த்ததைக் குறித்த விவரம்.
இவற்றின் விளைவுதான் பாவம், துன்பம்.
யெகோவாவின் வெற்றியோ சமீபம்.
3. மட்டில்லா மகிழ்ச்சி காலம் வந்தது.
தேவாட்சி கிறிஸ்துவில் பிறந்தது.
அவரைப் பிரியப்படுத்தவேண்டும்,
அப்போதுதேவ இரட்சிப்பு கிட்டும்.
இவ்வானந்த செய்தி இதில் உள்ளது.
பசும் பொன்னிலும் மேன்மையுள்ளது.
மானிடருக்கு நம்பிக்கை அளிக்கும்,
இதுவே சிறந்த கதையாகும்.