பாட்டு 223
உமது உத்தமர்கள் உம்மைத் துதிப்பார்கள்
1. யெகோவாவே, உத்தமர்கள்
உம்மைத்துதிப் பார்கள்.
உம்மகா செயல்கள் சொல்லி
புகழ் பாடுவார்கள்.
எம்போற்றுதலுக்குப் பாத்திரராய்
உயர்ந்தவர்.
யோசனை, செயல்கள்,
வழிகளில் ஒப்பற்றவர்.
உத்தமர் இதயம் பொங்கி
மகிழ்ந்து பாடவே.
மகத்தானகாரியங்கள்
சொல்ல நாடுவரே.
2. தம்புகழ் சொல்ல தேவன்
ஓர் தலைமுறை தேர்ந்தார்.
அது இன்றுதேவவழி
செல்வதைக் காண்கிறார்.
“வேறாடு” போஷிக்கும்
உண்மையுள்ள வகுப்பார்.
உலகில் நடக்க
இயேசுவழிகாட்டுகிறார்.
உத்தமராய் உம் செயல்கள்,
நாமம் துதிப்பரே.
உம்புகழ்பேச மகிழ்ச்சி
பொங்கி வழியுதே.
3. யெகோவா தேவன் நல்லவர்;
இதில் ஐயமில்லை.
இயேசுவின் மூலம் இரட்சிப்பார்.
காண்பர் நற்குணத்தை.
கோபிக்கத் தாமதம்
உத்தமர் அறிவரே.
நம்மோடிருப்பாரே,
நாம் நன்றியாயிருப்போமே!
விழும்போது தூக்கிடுவார்;
திருப்தியடைவோம்.
தேவனின் நற்குணத்தை
நாம் நாளெல்லாம் துதிப்போம்.