பாட்டு 67
பொக்கிஷங்களைப் பரலோகத்தில் சேர்த்துவையுங்கள்
1. நேசிப்போமே யெகோவாவை,
ஜோதிகளின் பிதாவை!
நன்மைகள் பல செய்கிறார்,
ஈவுகள் அளிக்கிறார்.
உணவும் உடையும் தந்து,
வீடு, விதைகொடுத்து,
நம்மை பராமரிப்பவர்.
நம் துதிக்குரியவர்.
2. தன்னல வாழ்க்கையும் வீணே
அந்த நேரமும் வீணே.
பொக்கிஷம் நிலையற்றது,
ஜீவனை அளிக்காது!
உள்ளவற்றில் மகிழ்வோமே.
திருப்தியைக் காண்போமே.
நற்செயல்கள் செய்திடுவோம்,
ஜீவனைப் பற்றிக்கொள்வோம்.
3. “ஏழைக்கு” உணவளிப்போம்.
நேரம், பலம் கொடுப்போம்.
“பசியுள்ளோருக்கு” ஈவோம்.
ராஜ்யநற்செய்தி சொல்வோம்.
தன்னலமின்றி சேவிப்போம்.
தேவநட்பில் இருப்போம்.
பரலோகத்தில் சேர்ப்போமே
நித்திய பொக்கிஷமே.