-
அறிவிப்புகள்ராஜ்ய ஊழியம்—1990 | நவம்பர்
-
-
அறிவிப்புகள்
● பிரசுர அளிப்புகள்: நவம்பர்: ஓராண்டு சந்தா விழித்தெழு! அல்லது காவற்கோபுரம் அல்லது இரண்டு பத்திரிகைகளுக்கும். ஒவ்வொன்றும் ரூ50. ஆறு மாத சந்தாவும் மாதாந்தர பத்திரிகைகளுக்கும் ஓராண்டு சந்தா ரூ25. (மாதாந்தர இதழ்களுக்கு ஆறுமாத சந்தா கிடையாது.) டிசம்பர்: புதிய உலக மொழிப்பெயர்ப்பு பைபிள், திரித்துவம் அல்லது இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் புரோஷுருடன் சேர்த்து ரூ48. ஜனவரி: “இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள்” புத்தகத்தை ரூ15-க்கு அளிக்கவும். (இந்தப் பிரசுரம் இல்லாத இடங்களில் இரண்டு பழைய 192 பக்க புத்தகங்களை ரூ12-க்கும் அல்லது ஒன்றை ரூ6-க்கும் அளிக்கவும்.) பிப்ரவரி, மார்ச்: இரண்டு பழைய 192 பக்க புத்தகங்களின் விசேஷ அளிப்பு, இரண்டுக்கு ரூ12 அல்லது ஒன்றுக்கு ரூ6. ஏப்ரல்: என்றும் வாழலாம் புத்தகத்தை ரூ35-க்கு அளிக்கவும், சிறிய அளவு புத்தகம் ரூ20. கையிருப்பில் இந்தப் பிரசுரங்கள் இல்லாவிடில், இரண்டு பழைய 192-பக்க விசேஷ அளிப்பு புத்தகங்களை ஒரு புத்தகத்தின் விலைக்கு அளிக்கலாம். பிராந்திய மொழிகளில் விசேஷ அளிப்பு புத்தகங்களில் ஒன்று பாதி விலைக்கு அளிக்கப்படலாம்.
● நடத்தும் கண்காணியோ அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவரோ டிசம்பர் 1-ம் தேதியன்று அல்லது அதற்கு பின்பு கூடிய மட்டும் விரைவிலேயே சபையின் கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டும்.
● மாநாட்டு வாரத்தின் போது சபை புத்தகப் படிப்பு நடத்தப்படவில்லையென்றால், அந்த வாரத்திற்காக நியமிக்கப்பட்ட பகுதியின் பாதி மாநாட்டின் ஒரு வாரத்திற்கு முன்பும், அடுத்த பாதி மாநாட்டை தொடர்ந்தும் படிக்கலாம். இந்த விதத்தில் மதிப்புவாய்ந்த தகவல்கள் எதையும் தவறவிடமாட்டோம்.
● வெளிப்படுத்துதல் உச்சக்கட்டம் புத்தகத்தை முடித்த பிறகு, அடுத்த மாதத்தில் திரித்துவம் புரோஷுரில் நம் படிப்பு ஆரம்பமாகும்.
● கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:
யெகோவாவின் சாட்சிகள் நம்புவது என்ன?(T-14) —பஞ்சாபி, பெங்காலி
சமாதானமான புதிய உலகில் வாழ்க்கை (T-15) —பஞ்சாபி, பெங்காலி
மரித்துப்போன அன்பார்ந்தவர்களுக்கு என்ன நம்பிக்கை? (T-16) —பஞ்சாபி, பெங்காலி
சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருள் —தெலுங்கு, பெங்காலி
-
-
ஜூலை மாத ஊழிய அறிக்கைராஜ்ய ஊழியம்—1990 | நவம்பர்
-
-
ஜூலை மாத ஊழிய அறிக்கை
சரா. சரா. சரா. சரா.
மணி.நே. பத்திரி. மறு.சந். வே.படி.
விசேஷ பயனியர்கள் 235 137.9 44.8 45.9 6.5
பயனியர்கள் 464 86.2 35.7 26.2 4.1
துணைப் பயனியர்கள் 427 63.7 34.5 13.9 1.8
பிரஸ்தாபிகள் 8,722 9.1 4.6 2.5 0.4
மொத்தம் 9,848
புதிதாக ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்டவர்கள்: 13
அறிக்கை முழுவதுமாகப் பார்த்தால் உற்சாகமூட்டும் ஒன்றாக இருந்தது. விசேஷமாக இது புதிய உச்சநிலையான 7,769 பைபிள் படிப்புகளில் இருந்தது.
-
-
நெருக்கமான குடும்ப உறவுகளை கட்டுதல்ராஜ்ய ஊழியம்—1990 | நவம்பர்
-
-
நெருக்கமான குடும்ப உறவுகளை கட்டுதல்
1 தங்களுடைய நேரத்தில் அநேக தேவைகள் இருப்பதனால், உண்மை வணக்கத்தில் நிலையான குடும்பத்தைக் கட்டுவதில் ஒரு சவாலை பெற்றோர்கள் எதிர்ப்படுகின்றனர். கிறிஸ்தவ குடும்பங்களுக்கு தற்போதைய கடினமான காலங்களில் ஆதரவளிக்கும் ஒரு நெருக்கமான பிணைப்பு தேவைப்படுகிறது. (பிர. 4:9–12; 2 தீமோ. 3:15) ஆவிக்குரியத்தன்மை வளருகையில் குடும்பம் அதிக ஐக்கியமாகிறது, மேலும் சாத்தானும் அவனுடைய ஒழுங்கும் கொடுக்கும் கடுந்தாக்குதல்களைத் தாங்க பலப்படுத்தப்படுகிறது.
ஆவிக்குரிய குணாதிசயங்களைக் கட்டுதல்
2 குடும்பத்தின் வாராந்தர அட்டவணையில் சபை கூட்டங்களும், குடும்ப பைபிள் படிப்பும் இன்றியமையாதது. (உபா. 6:6, 7; எபி.10:23–25; w86 11/1 பக். 23–5) இருந்தபோதிலும், அதிகம் தேவைப்படுகிறது. பிள்ளைகளுக்கு கிடைக்கும் எல்லா ஆவிக்குரிய பயிற்சியும் இது மட்டுமே என்றால் இன்னும் ஒரு வெறுமை இருக்கிறது.
3 பிள்ளைகளின் ஆவிக்குரிய நலனில் பெற்றோர்கள் உண்மையான அக்கறையை எடுக்கும்போது நற்பயன் விளைவிக்கிற ஒரு குடும்ப உறவு வளருகிறது. இஸ்ரவேலில் பெற்றோர்கள் அவர்களுடைய பிள்ளைகளின் கல்விக்கும் பயிற்சிக்கும் உத்தரவாதமுள்ளவர்களாயிருந்தனர், வார்த்தையின் மூலமும் முன்மாதிரியின் மூலமும் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தனர். இஸ்ரவேலின் கல்வித் திட்டம் வயது வந்தவர்களின் வாழ்க்கைக்கான நடைமுறையான பயிற்சி, வாசிக்கும் மற்றும் எழுதும் அடிப்படை திறமைகளைக் கற்பித்தல், ஆவிக்குரிய குணாதிசயங்களை வளர்ப்பதற்கு போதனைகள் இவையெல்லாவற்றையும் உள்ளடக்கியது. பிள்ளைகளுக்குக் கல்வி அளிப்பதில் யெகோவாவுக்குப் பயம், நியாயப்பிரமாணம், பெற்றோர்களுக்கும் வயதானவர்களுக்கும் மரியாதை, கீழ்ப்படிதலின் முக்கியத்துவம் ஆகியவற்றின் பேரில் அழுத்தம் வைக்கப்பட்டது.
4 ஒவ்வொரு நாளும் உங்கள் குடும்பத்தோடு நல்ல தரமான நேரத்தைச் செலவிட முயலுங்கள். உணவு வேளைகள் போன்ற முறைப்படியல்லாத சூழமைவில் ஆவிக்குரிய விஷயங்கள் கலந்தாலோசிக்கப்படலாம். பெற்றோர் ஒருவர் ஞானமாக குறிப்பிட்டார்: “ஆவிக்குரிய குணாதிசயங்களை வளர்ப்பதிலோ அல்லது ஒரு பிரச்னையை அடுத்து மற்றொரு பிரச்னையிலிருந்து வெளியேற அவர்களுக்கு உதவி செய்வதிலோ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளோடு நேரத்தை செலவிடுவார்கள்.” உலகத்தின் இடறுகுழிகளை அவர்கள் தவிர்ப்பதற்கு பிள்ளைகளில் தேவையான ஆவிக்குரிய குணாதிசயங்களைக் கட்டுவது எவ்வளவு மேலானது!—1 கொரி. 3:10–15.
வெளி ஊழிய வேலையை அனுபவிப்பது
5 மகிழ்ச்சி என்பது நல்லதைப் பெற்றுக்கொண்டதால் அல்லது எதிர்ப்பார்ப்பதால் எழுப்பப்பட்ட ஓர் உணர்ச்சியாகும். வெளி ஊழியத்திற்காக ஒரு நபர் தயாரித்திருக்கும்போது அவர் சரியாகவே நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். ஆக, மகிழ்ச்சியான வெளி ஊழியத்திற்கு தயாரிப்பு திறவுகோலாக இருக்கிறது. வெளி ஊழியத்திற்குச் செல்வதற்கு முன்பு என்ன சொல்வது என்பதை ஒரு குடும்பமாக ஒழுங்காக பயிற்சி செய்வது நம்பிக்கையை வளர்க்கிறது. (தீத்து 3:1பி ஒப்பிடுங்கள்.) ஒவ்வொருவரும் ஓர் இலக்கை மனதில் வைக்கலாம். இளம் பிள்ளைகளோடு அல்லது வெளி ஊழியத்திற்கு இப்பொழுதுதான் வர ஆரம்பித்தவர்களோடு ஓர் எளிய அளிப்பு ஒத்திகை செய்யப்படலாம்.
6 தங்கள் பிள்ளைகளோடு கிறிஸ்தவ ஊழியத்தில் வேலைசெய்வதன் மூலம் யெகோவாவும் இயேசுவும் ஆட்களில் காட்டும் தனிப்பட்ட அக்கறையை வளர்க்க பெற்றோர்கள் அவர்களுக்கு உதவலாம். யெகோவாவுடன் ஒரு நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்ளவும் ஊழியம் நமக்கு உதவும். (w81 11/1 பக். 14–20) சில குடும்பங்கள் முழு நாட்களுக்கு ஒன்றாக அட்டவணை போடுகின்றனர், வெளி ஊழியத்தைத் தொடர்ந்து பொழுதுபோக்கை திட்டமிடுகின்றனர். இது ஓய்வான சூழ்நிலையில் சம்பாஷிப்பதற்காக நேரத்தை அனுமதிக்கிறது, மேலும் பெற்றோர்களையும் பிள்ளைகளையும் ஒன்றாக இணைக்கிறது.
7 உங்கள் பிள்ளைகளோடு ஒரு நெருங்கிய உறவை வைப்பதற்கு தேவையான பேச்சுத் தொடர்பு திறமைகளை வளர்த்துக்கொள்ள தீர்மானமாயிருங்கள். உங்கள் குடும்பத்தை ஆவிக்குரிய விதத்தில் பலப்படுத்த தேவையான நேரத்தை எடுப்பதற்கு எந்தக் காரியமும் தடைசெய்ய அனுமதியாதீர்கள். உங்கள் கட்டும் முயற்சிகளை வெற்றியோடு யெகோவா முடிசூட்டுவார் என்ற அறிவோடு பிள்ளைகளுக்காகவும் பிள்ளைகளுடனும் ஜெபியுங்கள்.—சங். 127:1; நீதி. 24:3.
-
-
கேள்விப் பெட்டிராஜ்ய ஊழியம்—1990 | நவம்பர்
-
-
கேள்விப் பெட்டி
● இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிபேசும் சபைகள் ஒரே பிராந்தியத்தில் வேலை செய்கையில் என்ன விவரங்களை மனதில் வைக்க வேண்டும்?
ஏப்ரல் 1984 நம் ராஜ்ய ஊழியம் “நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்” கட்டுரையின் கீழ் குறிப்பிட்டது: “ஒவ்வொரு சபையின் பிரஸ்தாபிகளும் தங்கள் குறிப்பிட்ட மொழி தொகுதிகளின் பேரில் தங்கள் முயற்சிகளை ஒருமுகப்படுத்த வேண்டும்.” பலமொழி பிராந்தியங்களில் வேலைசெய்யும் சபைகள், தங்கள் பிரஸ்தாபிகள் செல்லக்கூடாத வீடுகள் மற்றும் அடுக்ககங்களின் பட்டியலை தயாரிப்பது ஒருவேளை உதவியாக இருப்பதாக காணக்கூடும். பிராந்தியத்தை முழுமையாக வேலை செய்வதற்கும், அக்கறை காட்டும் ஆட்களை பொருத்தமான சபைகளுக்கு வழிகாட்டவும், ஒருவருக்கொருவர் பரிமாற்றமான ஏற்றுக்கொள்ளத்தக்க ஓர் ஒழுங்குமுறையை ஏற்படுத்தலாம். சம்பந்தப்பட்ட சபைகளின் ஊழிய கண்காணிகளின் உத்தரவாதமாய் இது இருக்கிறது. ஒருவேளை ஒரே நாள் காலையிலோ அல்லது பிற்பகலிலோ வித்தியாச–மொழி சபைகளின் பிரஸ்தாபிகள் வீட்டுக்காரர்களுக்கு தேவையில்லா தொந்தரவு கொடுப்பதைத் தவிர்க்க இது செய்யப்பட வேண்டும். நாம் “கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு யாதொரு தடையும் உண்டாகாதபடி” இருக்க விரும்புகிறோம்.—1 கொரி. 9:12.
ஆட்கள் இடம் மாறிச்செல்வதன் காரணமாக மாற்றங்கள் செய்யத் தேவை இருக்குமேயானால், அக்கறை காட்டும் ஆட்களின் பெயர்களையும் விலாசங்களையும் பொருத்தமான சபைகளுக்கு சீக்கிரமாய் அனுப்புங்கள். இது பிராந்திய பதிவுகளை நவீனப்படுத்தி வைப்பதற்கு உதவிசெய்யும். அன்பு, பரஸ்பர அக்கறை, புரிந்துகொள்ளுதல், நியாயமாக இருத்தல், ஒத்துழைப்பு ஆகியவை முக்கியம்.—பிலி. 4:5.
தெரு ஊழியம், சந்தர்ப்ப சாட்சி போன்றவற்றில் பங்குகொள்கையில் பிரஸ்தாபிகள் பல மொழிகளில் பிரசுரங்களை எடுத்துச் செல்லலாம். இருந்தபோதிலும், வீட்டுக்கு வீடு செல்கையில் இரண்டு அல்லது அதற்கும் அதிகமான சபைகள் பங்குகொள்ளும் பிராந்தியத்தில் நாம் பொதுவாக நம் சொந்த சபையின் மொழியில் அதிகமாக அக்கறை செலுத்துவோம். இந்தப் பிரச்னை இருக்கையில், பிராந்தியங்கள் மொழிக்கு ஏற்றபடியும், பிரசுரங்களை அளிக்கும் பிரஸ்தாபிகள் அக்கறை காட்டும் வீட்டுக்காரரை அவர் நன்றாகப் புரிந்துகொள்ளும் அல்லது விரும்பும் மொழியில் நடக்கும் சபை கூட்டங்களுக்கு வழிநடத்தும்படியும் தயாரிக்கப்படும் என்பதை மனதில் வையுங்கள்.
தெளிவாகவே சில சமயங்களில் ஒரு மொழியினர் செய்யும் பிராந்தியத்தை மற்றொரு மொழியினரும் ஒரே சமயத்தில் செய்யக்கூடிய சாத்தியம் சிறிது இருக்கிறது. ஆனால் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் கட்டுரையில் கூறியுள்ளபடி, “நாம் பிரசங்கிக்கையில் நம் நோக்கம்—சீஷர்களை உண்டுபண்ணுவது, சத்தியத்தைக் கற்பிப்பது என்பதை நம் மனதில் அதிமுக்கியமாக வைப்பது நல்லது. (மத். 28:19, 20) ஆட்கள் நன்றாகப் புரிந்துகொள்ளும் மொழியில் கற்பித்தல் செய்யப்பட வேண்டும். (1 கொரி. 14:9)” நாம் ஆஜராகும் சபையின் மொழியை விரும்பும் அல்லது நன்றாகப் புரிந்துகொள்ளும் ஆட்களின் பேரில் நம் ஊழியத்தை ஒருமுகப்படுத்துவதன் மூலம் இன்னும் அநேகர் இரட்சிப்படைவதற்கு உதவி செய்து அதிக நன்மை சாதிக்கப்படலாம்.
-
-
நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—ஜனங்களோடு சம்பாஷிப்பதன் மூலம்ராஜ்ய ஊழியம்—1990 | நவம்பர்
-
-
நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—ஜனங்களோடு சம்பாஷிப்பதன் மூலம்
1 ஓர் அகராதியின்படி, சம்பாஷணை என்பது “உணர்ச்சிக் கனிவுகள், கூர்ந்து கவனித்தல்கள், அபிப்பிராயங்கள் அல்லது கருத்துக்கள் ஆகியவற்றை வாய்மொழியாக பரிமாற்றம் செய்தல்.” நீங்கள் சந்திக்கும் ஆட்கள் மதப்பிரகாரமாக எதிர்ப்பவர்களாகவும் அல்லது அவர்களுடைய சொந்த அலுவல்களில் ஈடுபட்டவர்களாகவும் இருக்கும்போது, பைபிளை அடிப்படையாகக் கொண்ட ஒரு சம்பாஷணையை நீங்கள் எவ்வாறு ஆரம்பிக்கலாம்? கேட்பவர்களை உட்படுத்துவதற்கு இயேசு கேள்விகள் கேட்டார்.—யோ. 4:9–15, 41, 42.
2 நேர்மையான இருதயமுள்ள ஆட்களை கண்டுபிடிப்பதற்கும், அவர்களோடு நாம் சம்பாஷிப்பதற்கு வழியைத் திறக்க உதவி செய்யும்படியும் நாம் கடவுளிடம் ஊக்கமாக ஜெபிக்க வேண்டும். நாம் ஒவ்வொரு வீட்டுக்காரரையும் யெகோவாவின் ஊழியராக ஆகப்போகிறவராக நோக்கினால் சாட்சி கொடுத்தல் சுலபமாகிறது. அக்கறை காட்டும் ஆட்களை கவர்ந்திழுக்கும் வகையில் நாம் சத்தியத்தை அனலான, உண்மையான விதத்தில் தெரிவிக்க இந்த மனநிலை நமக்கு உதவிசெய்யும்.
நம்மிடம் இருப்பவற்றை உபயோகியுங்கள்
3 நியாயங்கள் புத்தகம் மிகச் சிறந்த அநேக முன்னுரைகளை பக்கங்கள் 9–15 வரை அளிக்கிறது. இதில் அநேகம் கேள்விகளை திறம்பட்ட விதத்தில் உபயோகிக்கின்றன. வீட்டுக்காரர் ஒரு கேள்விக்கு பிரதிபலிக்கும் போது, மரியாதையோடு செவிகொடுங்கள். பிறகு அவர் கூறியதை நாம் சிந்தித்திருக்கிறோம் என்பதை வீட்டுக்காரருக்கு காட்டும் விதத்தில் பதிலளியுங்கள்.—கொலோ. 4:6.
4 இருந்தபோதிலும், நீங்கள் ஒரு கேள்வி கேட்கும்போது வீட்டுக்காரர் எவ்வாறு பதிலளிப்பார் என்பது உங்களுக்குத் தெரியாது. அதற்கேற்றவிதமாய் உங்கள் கலந்தாலோசிப்பை மாற்றியமைக்க தயாராயிருங்கள். அவருடைய அக்கறைகளுக்கு ஏற்றாற்போல் பைபிளிலிருந்து இன்னுமதிக தகவலை அறிமுகப்படுத்துவதன் மூலமும், மேலுமதிக சிந்தனையைத் தூண்டும் கேள்விகள் கேட்பதன் மூலமும் சம்பாஷணை தொடர்ந்திருக்க முயற்சி செய்யுங்கள்.
முன்னதாகவே தயாரியுங்கள்
5 உங்கள் பிராந்தியத்தில் இருக்கும் ஆட்களின் பொதுவான எண்ணத்தோடு நீங்கள் ஏற்கெனவே அறிமுகமாகியிருப்பீர்கள். அப்படியானால், உங்கள் குறிப்பிட்ட பிராந்தியத்திற்கு அதிக திறம்பட்டதாக இருக்கும் முன்னுரைகளை நியாயங்கள் புத்தகத்திலிருந்து தேர்ந்தெடுங்கள். முன்னுரைகளில் ஒன்றை தற்போதைய சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளுக்கு மாற்றியமைப்பது தான் உங்களுக்குத் தேவைப்படுவதாக இருக்கும். வீட்டுக்காரருக்கு அக்கறையாயிருக்கும் என்று நீங்கள் நம்பும் காரியங்களோடு உங்கள் சம்பாஷணையை ஆரம்பியுங்கள். சுருக்கமாகப் பிரச்னையை கூறுங்கள், பிறகு பைபிள் தீர்வுக்கு வழிநடத்துங்கள். அவர் ஒரு கருத்து தெரிவித்தால், அவர் சொல்லும் காரியத்தின் பேரில் குற்றங்காண்கிறபடி இல்லாமல் நேர்மறையான குறிப்பு சொல்லுங்கள். அவருடைய எண்ணங்களிலும், உணர்ச்சிகளிலும் நீங்கள் காட்டும் அக்கறை உங்களோடு அவர் தொடர்ந்து சம்பாஷிக்க அவரை உற்சாகப்படுத்த வேண்டும். ஒத்துக்கொள்ளும் குறிப்புகளை கண்டுபிடிக்க முயற்சி செய்து அதன்பேரில் குறிப்பு சொல்லுங்கள். மனிதனின் பிரச்னைகளுக்கு பைபிளின் தீர்வு ராஜ்ய ஆசீர்வாதங்கள் என்பதை அழுத்திக் காட்டுவதன் மூலம் சம்பாஷணையை நேர்தன்மையுள்ளதாய் வைத்துக் கொள்ளுங்கள்.
6 வித்தியாசமான நோக்குநிலைகளை தொடர்ச்சியான சம்பாஷணைக்கு திறவுகோல்களாக கருதுங்கள். வீட்டுக்காரர் நியாயமான முறையில் பேச முன்வந்தால், ஒருவேளை நீங்கள் கேட்கலாம், “இந்த நோக்குநிலையிலிருந்து நீங்கள் இதை எப்பொழுதாவது யோசித்ததுண்டா?” பிறகு அந்தப் பொருளின் பேரில் கடவுளுடைய வார்த்தை என்ன சொல்லுகிறது என்பதை குறிப்பிட்டுக் காட்டுங்கள். அவர் நியாயமற்றவராக இருப்பதை நீங்கள் கண்டால், நீங்கள் கூறியதை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள். மாறாக, சிநேகப்பான்மையான குறிப்போடு முடியுங்கள், அவருக்கு நற்செய்தியை அளிப்பதில் ஓர் எதிர்கால வாய்ப்பிற்காக வழியை அது திறந்து வைக்கும்.—நீதி. 12:8, 18.
7 சில ஆட்கள் முறைபடியல்லாத சூழமையில் நீங்கள் சந்திக்கும்போது சம்பாஷிக்க அதிக மனசாய்வுள்ளவர்களாக இருக்கின்றனர். தெருவில் நீங்கள் சந்திக்கும் ஆட்களோடு அல்லது வேலைசெய்து கொண்டிருப்பவர்களோடு அல்லது முற்றத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பவர்களோடு சம்பாஷணைகளை ஆரம்பிப்பதற்கு தயங்காதீர்கள். அவர்களுடைய வேலையில் உங்கள் உண்மையான அக்கறையை அவர்கள் வரவேற்கலாம், பூமி சீக்கிரத்தில் பரதீஸாகும் என்ற பைபிள் வாக்கிற்கு சம்பாஷணையை ஒரு கலந்தாலோசிப்பாக நீங்கள் வழிநடத்தலாம். ஒரு சம்பாஷணையை நீங்கள் ஆரம்பிக்கும்போது, வீட்டுக்காரருக்கு அதை ஓர் இனிமையான அனுபவமாக ஆக்க முயற்சி செய்யுங்கள். உங்களால் முடிந்தவரை கடவுள், அவருடைய வார்த்தை, அவருடைய ஊழியர்கள் ஆகியவற்றைப் பற்றி அதிக ஆதரவான மனநிலையோடு அந்த நபரை விட்டுவாருங்கள். இந்த விதத்தில், அவருடைய இருதயத்தை எட்டுவதில் ஆரம்பத்தில் நீங்கள் வெற்றிகரமாக இல்லையென்றாலும், அடுத்தமுறை ஒரு சாட்சி செல்லும்போது அவர் ஒருவேளை அதிகமாக ஏற்றுக்கொள்ளும் தன்மையுடையவராய் இருப்பார்.
-
-
தேவராஜ்ய செய்திகள்ராஜ்ய ஊழியம்—1990 | நவம்பர்
-
-
தேவராஜ்ய செய்திகள்
◆ பார்படாஸ் மே மாதத்தின்போது 1,783 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலையை எட்டியது, இது இந்த ஊழிய வருடத்திற்கான அவர்களுடைய மூன்றாவது உச்சநிலை.
◆ மே மாதம் ஹெய்த்தியில் புதிய உச்சநிலையாகிய 6,427 பிரஸ்தாபிகள் அறிக்கை செய்ததுடன் 14 சதவிகித அதிகரிப்பு இருந்தது. மணிநேரங்களிலும், மறுசந்திப்புகளிலும்கூட அவர்களுக்கு புதிய உச்சநிலைகள் இருந்தன.
◆ மே மாதத்தில் லெசோத்தோ புதிய உச்சநிலையாகிய 1,270 பிரஸ்தாபிகளைக் கொண்டிருந்தது, இது சென்ற வருட சராசரியைவிட 18 சதவிகித அதிகரிப்பு. புதிய உச்சநிலையாகிய 2,223 பைபிள் படிப்புகள் அவர்களுக்கு இருந்தது. ஞாபகார்த்த நாளின்போது 4,979 பேர் ஆஜராயிருந்தனர்.
◆ 3,00,316 பேர் அறிக்கை செய்ததோடு மே மாதத்தில் மெக்ஸிக்கோ 3,00,000 பிரஸ்தாபிகள் என்ற மிக மேம்பட்ட குறியை எட்டியது. இது கடந்த வருட சராசரியைவிட 14.5 சதவிகித அதிகரிப்பு. வீட்டு பைபிள் படிப்புகளிலும் புதிய உச்சநிலையாகிய 4,64,378 படிப்புகள் எட்டப்பட்டது.
-
-
சபை புத்தகப் படிப்புராஜ்ய ஊழியம்—1990 | நவம்பர்
-
-
சபை புத்தகப் படிப்பு
வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம்சமீபித்துவிட்டது! என்ற ஆங்கில புத்தகத்திலிருந்து நடைபெறும் சபை புத்தகப்படிப்பு அட்டவணை:
நவம்பர் 12: பக்.295—பக்.300
நவம்பர் 19: பக்.301—பக்.305
நவம்பர் 26: பக்.305—பக்.309
டிசம்பர் 3: பக்.310—பக்.313
டிசம்பர் 10: பக்.314—பக்.319
-