-
மூதாதையர் வணக்கம்வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
-
-
மரித்தவர்கள் உட்பட, குடும்ப உறுப்பினர்கள் எதிர்காலத்தில் ஒன்றாக இணைக்கப்படுவதற்கு என்ன நம்பிக்கை இருக்கிறது?
யோவான் 5:28, 29, NW: “இதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம். ஏனென்றால், அந்த மணிநேரம் வருகிறது, அதில் ஞாபகார்த்தக் கல்லறைகளிலுள்ள அனைவரும் அவருடைய குரலைக் கேட்டு வெளிவருவார்கள், நல்ல காரியங்களைச் செய்தவர்கள் ஜீவனுக்குரிய உயிர்த்தெழுதலுக்கும், தீயக் காரியங்களைப் பழக்கமாய்ச் செய்தவர்கள் நியாயத்தீர்ப்புக்குரிய உயிர்த்தெழுதலுக்கும் வருவார்கள்.”
-
-
அந்திக்கிறிஸ்துவேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
-
-
அந்திக்கிறிஸ்து
சொற்பொருள் விளக்கம்: அந்திக்கிறிஸ்து என்பதற்கு கிறிஸ்துவுக்கு எதிராக அல்லது பதிலாக என்பது பொருள். இயேசு கிறிஸ்துவைப்பற்றி பைபிள் சொல்வதை மறுதலிக்கும் எல்லாருக்கும், அவருடைய ராஜ்யத்தை எதிர்க்கும் எல்லாருக்கும், அவரைப் பின்பற்றுவோரைத் தவறாக நடத்தும் எல்லாருக்கும் இந்தப் பெயர் பொருந்துகிறது. அது கிறிஸ்துவைப் பிரதிநிதித்துவம் செய்வதாகப் பொய் உரிமைப்பாராட்டுகிற அல்லது தங்களுக்கு மேசியாவின் பாகத்தைத் தவறாகப் பொருத்திக்கொள்ளும் தனிப்பட்ட நபர்களையும் அமைப்புகளையும் மற்றும் தேசங்களையும் உள்ளடக்குகிறது.
பைபிள் ஒரேயொரு அந்திக்கிறிஸ்துவையே குறிப்பிடுகிறதா?
1 யோவான் 2:18: “பிள்ளைகளே, இது கடைசிக் காலமாயிருக்கிறது. அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக் காலமென்று அறிகிறோம்.”
2 யோவான் 7: “மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தேறியிருக்கிறார்கள், இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.” (“அநேக அந்திக்கிறிஸ்துகள்” என்று 1 யோவான் 2:18-ல் குறிப்பிடப்பட்டது இங்கு மொத்தமாக “அந்திக்கிறிஸ்து” என்று குறிப்பிடப்படுவதைக் கவனியுங்கள்.)
அந்திக்கிறிஸ்து வருவது ஏதோ எதிர்காலத்துக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டதா?
1 யோவான் 4:3: “மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவின் ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில்
-