பாட்டு 152
கடவுளுடைய கருணையைப் பாராட்டுதல்
1. கர்த்தாவின் ஐஸ்வரியமும்
ஆழம் அவர் ஞானமும்!
அவர் தீர்ப்புகள், வழிகள்,
மனிதர் அறியார்கள்!
நமக்கவர் கடன்பட,
நாம் கைமாறு பெற்றிட,
நாம் ஆலோசனை சொன்னோமா?
அன்றி உதவினோமா?
2. தேவகருணை பெறுவோம்,
நாம் நன்றி செலுத்துவோம்.
ஜீவபலியாய்க் கொடுப்போம்,
சரீரம் அற்பணிப்போம்.
அதற்கேற்ப நாம் நடப்போம்.
உண்மையாக சேவிப்போம்.
அறிவை உபயோகிப்போம்.
கூடியதெல்லாம்செய்வோம்.
3. உலகபாதை தவிர்ப்போம்.
மனதைப் புதுப்பிப்போம்.
மாற்றவல்ல சத்தியம் காப்போம்.
விசுவாசத்தைக் காப்போம்.
தேவ ஆசிக்கு ஜெபிப்போம்.
தாழ்மையுடன் சேவிப்போம்.
அன்பைப் பரிமாறிக்கொள்வோம்,
அமைதி, இன்பம் காண்போம்.