பாட்டு 170
“கடவுள் சத்தியபரராகக் காணப்படுவாராக”
1. சத்தியத்தின் தேவன் யெகோவா
பொய் சொல்லாத தேவா.
நாம் சார்ந்திருக்க அவரே;
மறுக்கமாட்டாரே.
மனிதர் பொய்யராவரே,
தேவன் பொய்சொல்லாரே.
அவர் சத்தியம் நிலை நிற்கும்.
சதாகாலத்திற்கும்.
2. முதற்பேறானவர் வந்தார்
தேவசித்தம் செய்தார்.
வார்த்தை, செயலால் ஸ்தாபித்தார்.
மெய்யராய்க் காண்பித்தார்.
நிறைவேற்றினார் பிரமாணம்,
தீர்க்கதரிசனம்.
அவர் நேர்மையை நேசித்தார்.
உத்தமத்தைக்காத்தார்.
3. தேவசொல்லை இகழ்ந்தார்கள்;
பொய்ஏற்றனர் மக்கள்.
கிறிஸ்துபோல் தேவன் சொல் கேட்போம்,
அவர் மெய்யர் என்போம்.
பிரசங்கிக்கும் நமக்குண்டு,
தீர்ப்பான வாக்குண்டு.
உண்மையைத் தேடுகிறோமே,
கீழ்ப்படிகிறோமே.