பாடல் 8
எஜமானரின் இரவு விருந்து
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. எம் நே-சத் தந்-தை யெ-கோ-வா-வே,
தூ-ய இ-ர-வு இ-து-வே!
நி-சான் ப-தி-னா-லின் நி-ல-வொ-ளி-யி-லே
நின் பா-சம் தெ-ரி-கி-ற-தே!
ஆட்-டுக்-குட்-டி-யின் ரத்-தம் ஒன்-றே
காத்-த-து உ-யி-ரை அன்-றே.
எ-ஜ-மா-ன-ரின் மா-சற்-ற ரத்-தம் ஒன்-றே
நித்-ய வாழ்-வுக்-கு வ-ழி இன்-றே!
2. உம் பா-ச செம்-ம-றி-யா-க-வே
உம் சன்-னி-தி வந்-துள்-ளோ-மே!
உம் அன்-பு, வல்-ல-மை, நீ-தி, ஞா-ன-மு-மே
இந்-நா-ளில் ப-ளிச்-சி-டு-தே!
ஆ-ச-ரிப்-போம் இந்-நி-கழ்-வை-யே,
ஆ-ழப் ப-திப்-போம் நெஞ்-சி-லே;
ந-டப்-போம் ஏ-சு-வின் த-டத்-தில் நா-ளு-மே,
வாழ்-வோம் பூஞ்-சோ-லை-யில் என்-று-மே!
(காண்க: லூக். 22:14-20; 1 கொ. 11:23-26.)