பாடல் 25
சீடருக்குரிய அடையாளம்
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. நாம் பின்-பற்-ற சட்-டம் ஒன்-றுண்-டு,
ஆம், ந-டப்-போம் பற்-றிக்-கொண்-டு.
ரா-ஜ சட்-டம் அந்-தச் சட்-ட-மே,
ஏ-சு தந்-தார் அ-தைத்-தா-மே.
ஏ-சு-வே அன்-புச் சு-ரங்-க-மே,
த்யா-கம்-தான் செய்-தார் தம்-மை-யே!
நாம் அ-வர் உண்-மைச் சீ-ட-ரா-க-வே,
அன்-புப் பா-தை-யில் செல்-வோ-மே!
2. மெய் அன்-பு-தான் மங்-கிப்-போ-கா-தே,
கை த-ரும் பா-ச-மா-க-வே.
அன்-பு பொ-ழி-வோ-மே நா-ளு-மே,
அன்-புக் க-ட-னைத் தீர்ப்-போ-மே.
நே-ச-முள்-ள நண்-பர்-கள்-தா-மே
இல்-லை-யே வே-று எங்-கு-மே!
பே-ரன்-பில் கோர்த்-த பூக்-க-ளா-க-வே,
அன்-புச் ச-ர-மாய் ஆ-வோ-மே!
(காண்க: ரோ. 13:8; 1 கொ. 13:8; யாக். 2:8; 1 யோ. 4:10, 11.)