பாடல் 87
நாம் ஒரே உடலானோம்!
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. என் எ-லும்-பில் வந்-த-வ-ளே,
ஏற்-ற து-ணை நீ என்-ன-வ-ளே,
யெ-கோ-வா தந்-த நல்-ஜோ-டி,
என் இ-த-ய நா-டி!
ஒன்-றி-ணைந்-தோம் தம்-ப-தி-யாய்,
ஒன்-றாய் வாழ்-வோம், நாம் ஆ-ரு-யி-ராய்;
ஈ-ரு-டல் ஓ-ரு-யிர் ஆ-னோம்,
இல்-ல-றம் பு-குந்-தோம்;
தே-வ-னை நா-ளும் நாம் சே-விப்-போம்,
அ-வர் சொல் கேட்-போம்,
அன்-பு மொ-ழி பே-சு-வோம்.
ஒப்-பந்-த-மே நாம் ம-திப்-போம்,
ஒற்-று-மை-யாய் ம-கிழ்ந்-தி-ருப்-போம்,
அன்-பில் என்-றென்-றும் ம-லர்-வோம்,
தே-வ-னுக்-கே க-னம் சேர்ப்-போம்!
(காண்க: ஆதி. 29:18; பிர. 4:9, 10; 1 கொ. 13:8.)