-
மரியாள் (இயேசுவின் தாய்)வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
-
-
நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்: ‘இயேசு கிறிஸ்துவின் தாய் கன்னியாயிருந்தாளென பரிசுத்த வேத எழுத்துக்கள் தெளிவாய்க் கூறுகின்றன, நாங்கள் அதை நம்புகிறோம். கடவுளே அவருடைய தகப்பன். பிறந்த பிள்ளை, தேவதூதன் மரியாளுக்குச் சொன்னபடி, உண்மையில் கடவுளுடைய குமாரன். (லூக்கா 1:35)’ பின்பு மேலும் சொல்லலாம்: ‘இயேசு அம்முறையில் பிறக்கவேண்டியது ஏன் அவ்வளவு முக்கியமென நீங்கள் எப்பொழுதாவது வியந்து சிந்தித்திருக்கிறீர்களா? . . . பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மை விடுதலைசெய்யக்கூடிய பொருத்தமான மீட்பின் கிரயத்தை அம்முறையிலேயே அளிக்கமுடியும்.—1 தீமோ. 2:5, 6; தேவைப்பட்டால் யோவன் 3:16.’
அல்லது இவ்வாறு சொல்லலாம்: ‘ஆம், நம்பிக்கையுண்டு. அவளைப் பற்றிப் பரிசுத்த வேத எழுத்துக்கள் சொல்லும் எல்லாவற்றையும் நாங்கள் நம்புகிறோம், கன்னியாயிருக்கையில் அவள் இயேசுவைப் பெற்றாளெனவே அவை திட்டவட்டமாய்ச் சொல்கின்றன. மரியாளைப்பற்றியும் அவளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களைப்பற்றியும் அவை நமக்குச் சொல்லும் இருதயத்தைக் கவரும் மற்றக் காரியங்களையும் நான் காண்கிறேன். (பக்கங்கள் 254, 255-ல் உள்ளக் குறிப்புகளையும் பயன்படுத்துங்கள்.)’
‘நீங்கள் கன்னி மரியாளை நம்புவதில்லை’
நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்: ‘ஒரு கன்னியே கடவுளுடைய குமாரனைப் பெற்றாளென்று நம்பாத ஆட்கள் இருக்கின்றனரென்பதை நான் உணருகிறேன். ஆனால் நாங்கள் அதை உண்மையில் நம்புகிறோம். (நம்முடைய புத்தகங்கள் ஒன்றில் இந்தக் காரியத்தை விவாதிக்கும் பகுதிக்குத் திறந்து வீட்டுக்காரருக்குக் காட்டுங்கள்.)’ பின்பு மேலும் சொல்லலாம்: ‘ஆனால் நாம் இரட்சிப்படைய வேண்டுமெனில் இன்னுமதிகமான ஏதாவது தேவைப்படுகிறதா? . . . இயேசு ஜெபத்தில் தம்முடைய பிதாவிடம் சொன்னதைக் கவனியுங்கள். (யோவான் 17:3)’
-
-
பூசை (மாஸ்)வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
-
-
பூசை (மாஸ்)
சொற்பொருள் விளக்கம்: ரோமன் கத்தோலிக்கச் சர்ச்சின் பரிசுத்த சபை சடங்குகளால் கூறப்பட்டபடி, பூசை (மாஸ்) ஆனது “—ஒரு பலி, அதில் சிலுவையின் பலி நீடித்திருக்கச் செய்யப்படுகிறது;—‘என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்’ என்று சொன்ன கர்த்தரின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் நினைவுகூருதல். (லூக்கா 22:19);—ஒரு பரிசுத்தப் பெருவிருந்து, அதில் கர்த்தரின் உடல் மற்றும் இரத்தத்தின் நற்கருணையின்மூலம், கடவுளின் ஜனங்கள் பஸ்கா பலியின் நன்மைகளில் பங்குகொள்கிறார்கள், கிறிஸ்துவின் இரத்தத்தின்மூலம் எல்லாக் காலத்துக்கும் ஒரே தடவையாகக் கடவுள் மனிதனுடன் செய்திருக்கும் அந்தப் புதிய உடன்படிக்கையைப் புதுப்பிக்கிறார்கள், மேலும் விசுவாசத்திலும் நம்பிக்கையிலும் பிதாவின் ராஜ்யத்தில் மறுமைக்குரிய பெரும்விருந்தை முன்குறிக்கிறார்கள் மற்றும் எதிர்பார்க்கிறார்கள், ‘அவருடைய வருகை வரையில்’ கர்த்தரின் மரணத்தை அறிவிக்கிறார்கள்.” (யூக்கரிஸ்டிக்கம் மிஸ்டீரியம், மே 25, 1967) இது கடைசி இராப்போஜனத்தில் இயேசு கிறிஸ்து செய்ததைத் தாங்கள் விளங்கிக்கொண்டபடி செய்யும் கத்தோலிக்க சர்ச்சின் முறையாகும்.
அப்பமும் திராட்ச மதுவும் கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் உண்மையில் மாற்றப்படுகின்றனவா?
ஜூன் 30, 1968 அன்று “விசுவாசத்தின் பயபக்தியான அறிவிப்பில்” போப் பால் VI பின்வருமாறு அறிவித்தார்: “கடைசி இராப்போஜனத்தின்போது கர்த்தரால் தெய்வப் பண்புள்ளதாக்கப்பட்ட அப்பமும் திராட்ச மதுவும் நமக்காகச் சிலுவையில் பலிசெலுத்தப்படவிருந்த அவருடைய உடலாகவும் அவருடைய இரத்தமாகவும் மாற்றப்பட்டதுபோல், குருவால் தெய்வப்பண்புள்ளதாக்கப்பட்ட அப்பமும் திராட்ச மதுவும் 2பரலோகத்தில் மகிமையாய்ச் சிங்காசனத்தில் வீற்றிருக்கச் செய்யப்பட்டுள்ள கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாற்றப்படுகின்றனவென நாங்கள் நம்புகிறோம், மேலும் தெய்வப்பண்பாக்கப்பட்டதற்கு முன்பிருந்ததுபோல் பின்பும் அதே முறையில் நம்முடைய உணர்வுகளுக்குத் தோன்றும் அந்த மூலப் பொருட்களின் தோற்றத்தின்கீழ், கர்த்தரின் விளங்காப் புதிரான வந்திருக்கை, உண்மையும் மெய்ம்மையும் உள்ளபடியானதுமான வந்திருக்கையென நாங்கள் நம்புகிறோம். . . . இந்த விளங்காப் புதிரான மாற்றத்தைச் சர்ச் வெகு பொருத்தமாகவே வேறு பொருள்மாற்றம் என்றழைக்கிறது.” (அதிகாரப்பூர்வ கத்தோலிக் போதகங்கள்—நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து, உவில்மிங்டன், N.C.; 1978, அமந்தா G. உவாட்லிங்டன், பக். 411) பரிசுத்த வேத எழுத்துக்கள் இந்த நம்பிக்கையோடு ஒத்திருக்கின்றனவா?
-