பாடல் 4
தேவனிடம் நற்பெயர் சம்பாதிப்போம்
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. தே-வ-னி-ட-மே நற்-பெ-யர் வாங்-க-வே,
அ-வர் ஆ-ணை-கள் நாம் கீழ்ப்-ப-டி-வோ-மே.
என்-றும் நா-டு-வோ-மே நீ-தி-யாய் வா-ழ-வே,
அ-வர் ம-னம்-தான் ம-கி-ழு-மே.
2. பேர், பு-க-ழெல்-லாம் உ-ல-கக் கண்-ணி-லே
அ-ழ-கென்-றா-லும், அ-ழி-யும் மண்-ணி-லே!
உ-ல-க நட்-பை நாம் பெ-ற நி-னைத்-தா-லே,
யெ-கோ-வா நட்-பை இ-ழப்-போ-மே.
3. வாழ்-வின் சு-ரு-ளில் நம் பெ-யர் என்-று-மே
ப-தி-ய வேண்-டும்; அ-து நம் ஏக்-க-மே.
தே-வ-னை நம்-பு-வோம், சத்-யம் ஆ-த-ரிப்-போம்,
ஆ-யுள் மு-ழு-தும் நற்-பேர் காப்-போம்.
(காண்க: ஆதி. 11:4; நீதி. 22:1; மல். 3:16; வெளி. 20:15.)