உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயர் ஏன் வந்தது?
    இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்?
    • பாடம் 2

      யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயர் ஏன் வந்தது?

      நோவா

      நோவா

      ஆபிரகாம், சாராள்

      ஆபிரகாம், சாராள்

      மோசே

      மோசே

      இயேசு கிறிஸ்து

      இயேசு கிறிஸ்து

      யெகோவாவின் சாட்சிகள்—இந்தப் பெயரை கேட்டதும், ஏதோ ஒரு புது மதம் என்று நிறையப் பேர் நினைக்கிறார்கள். ஆனால், 2,700 வருடங்களுக்கு முன்பே யெகோவாவுக்கு சாட்சிகள் இருந்திருக்கிறார்கள். யெகோவாவை வணங்கிய ஜனங்களை அவருடைய ‘சாட்சிகள்’ என்று பைபிள் சொல்கிறது. (ஏசாயா 43:10-12) எங்களுக்கு 1931 வரை பைபிள் மாணாக்கர்கள் என்ற பெயர் இருந்தது. அதற்குப் பிறகு, யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயர் வந்தது. ஏன் தெரியுமா?

      இந்தப் பெயரிலிருந்து எங்களுடைய கடவுள் யார் என்று தெரிந்துகொள்ளலாம். பழங்காலத்து பைபிள் சுருள்களில் யெகோவா என்ற பெயர் ஆயிரக்கணக்கான தடவை இருக்கிறது. ஆனால், பைபிளை மொழிபெயர்த்தவர்கள் அந்தப் பெயரை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக கர்த்தர், ஆண்டவர் என்று போட்டுவிட்டார்கள். மோசேயிடம் கடவுள் பேசியபோது யெகோவா என்ற அவருடைய பெயரைச் சொன்னார். அதோடு, “என்றென்றும் இதுதான் என்னுடைய பெயர்” என்றும் சொன்னார். (யாத்திராகமம் 3:15) இப்படி, அவருக்கும் பொய் தெய்வங்களுக்கும் வித்தியாசம் இருப்பதைக் காண்பித்தார். யெகோவாவின் சாட்சிகள் என்று சொல்லிக்கொள்வதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.

      இந்தப் பெயரிலிருந்து எங்களுடைய முக்கியமான வேலையைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். அந்தக் காலத்தில் இருந்தே நிறையப் பேர் யெகோவாவுக்கு சாட்சிகளாக இருந்திருக்கிறார்கள். ஆபேல்தான் யெகோவாவுக்கு முதல் சாட்சியாக இருந்தார். அதற்குப் பிறகு வந்த நோவா, ஆபிரகாம், சாராள், மோசே, தாவீது என நிறையப் பேர் யெகோவாவுக்கு சாட்சிகளாக இருந்தார்கள். இவர்கள் எல்லாரும் யெகோவாமீது நம்பிக்கை வைத்திருந்தார்கள். அதனால்தான், “திரண்ட மேகம் போன்ற இத்தனை சாட்சிகள்” யெகோவாவுக்கு இருந்திருக்கிறார்கள் என்று பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 11:4–12:1) ஒரு நிரபராதிக்கு ஆதரவாக கோர்ட்டில் சாட்சி சொல்வது போல் நாங்களும் கடவுளுக்கு ஆதரவாக சாட்சி சொல்கிறோம். அதாவது, அவரைப் பற்றிய உண்மைகளை எல்லாருக்கும் சொல்கிறோம்.

      இயேசுவைப் போல் நடந்துகொள்கிறோம். இயேசுவை, “நம்பகமான, உண்மையான சாட்சி” என்று பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 3:14) ‘கடவுளுடைய பெயரை தெரியப்படுத்தினேன்’ என்று இயேசு பூமியில் இருந்தபோது சொன்னார். அதோடு, “சத்தியத்தைப் பற்றிச் சாட்சி” கொடுத்தார். அதாவது, கடவுளைப் பற்றி எல்லாருக்கும் சொன்னார். (யோவான் 17:26; 18:37) இயேசுவைப் போல் நடந்துகொள்ள ஆசைப்படுகிற எல்லாரும் கடவுளுடைய பெயரை மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும். அதைத்தான் யெகோவாவின் சாட்சிகள் செய்கிறார்கள்.

      • பைபிள் மாணாக்கர்களுக்கு ஏன் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயர் வந்தது?

      • எவ்வளவு காலமாக யெகோவாவுக்கு சாட்சிகள் இருந்திருக்கிறார்கள்?

      • யெகோவாவுக்கு முக்கியமான சாட்சி யார்?

      இன்னும் தெரிந்துகொள்ள...

      அடுத்த முறை கூட்டங்களுக்கு வரும்போது, அங்கு வந்திருக்கிறவர்களைப் பற்றி நன்றாக தெரிந்துகொள்ளுங்கள். அவர்கள் யெகோவாவின் சாட்சியானதுக்கு என்ன காரணம் என்று கேளுங்கள்.

  • புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை ஏன் தயாரித்தோம்?
    இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்?
    • பாடம் 4

      புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை ஏன் தயாரித்தோம்?

      பழைய பிரிண்டிங் மெஷின்
      முதல் முதலில் வெளியிடப்பட்ட புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள்
      புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை காங்கோவில் (கின்ஷாசா) மக்கள் பார்க்கின்றனர்

      காங்கோ (கின்ஷாசா)

      ருவாண்டாவில் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை ஒரு சகோதரர் வெளியிடுகிறார்

      ருவாண்டா

      கடவுளுடைய பெயர் இருக்கும் சிம்மாக்கஸ் துண்டு

      சங்கீதம் 69:31-ல் யெகோவாவுடைய பெயர் இருந்ததை சிம்மாக்கஸ் துண்டில் பார்க்கலாம். இது மூன்றாம் அல்லது நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டது

      நாங்கள் பல வருஷங்களாக மற்றவர்கள் மொழிபெயர்த்த பைபிள்களை பயன்படுத்தினோம். அதோடு, அந்த பைபிள்களை நாங்களே அச்சடித்து எல்லா ஜனங்களுக்கும் கொடுத்தோம். எல்லாரும் ‘திருத்தமான அறிவை பெற வேண்டும்’ என்று கடவுள் விரும்புகிறார். அதனால், ஜனங்கள் சுலபமாகப் புரிந்துகொள்கிற விதத்தில் ஒரு பைபிளைத் தயாரிக்க வேண்டும் என்று நினைத்தோம். (1 தீமோத்தேயு 2:3, 4) அதற்காக, சாதாரண மொழிநடையில் பைபிளை மொழிபெயர்த்தோம். 1950-லிருந்து அதை ஒவ்வொரு பாகமாக வெளியிட ஆரம்பித்தோம். அதுதான் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள். இந்த பைபிள் திருத்தமானது, 130-க்கும் அதிகமான மொழிகளில் கிடைக்கிறது.

      புரிந்துகொள்ள சுலபமாக இருக்கிற பைபிள் தேவைப்பட்டது. காலம் மாற மாற மொழியும் மாறிக்கொண்டே வருகிறது. இன்று இருக்கிற நிறைய பைபிளில், ஜனங்களுக்குப் புரியாத வார்த்தைகளும் அவர்கள் பயன்படுத்தாத வார்த்தைகளும்தான் இருக்கின்றன. அதனால்தான், புரிந்துகொள்வதற்கு சுலபமாக இருக்கிற பைபிள் தேவைப்பட்டது. அதோடு, ரொம்ப ரொம்ப பழைய பைபிள் சுருள்கள் (அசலை பார்த்து எழுதப்பட்ட நகல்கள்) இப்போது கிடைத்திருக்கின்றன. அதையெல்லாம் படித்த பிறகு, பைபிள் எழுதப்பட்ட காலத்தில் இருந்த எபிரெயு, அரமேயிக், கிரேக்கு மொழிகளை நன்றாகப் புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. பைபிளை நன்றாக மொழிபெயர்க்க இது உதவியாக இருந்திருக்கிறது.

      அர்த்தம் மாறாமல் இருக்கிற பைபிள் மொழிபெயர்ப்பு தேவைப்பட்டது. கடவுளுடைய வார்த்தையை மொழிபெயர்க்கிறவர்கள் அவர்களுடைய இஷ்டத்துக்கு மொழிபெயர்க்கக் கூடாது. பைபிளில் உள்ளதை உள்ளபடி மொழிபெயர்க்க வேண்டும். ஆனால், பைபிளை மொழிபெயர்த்த நிறையப் பேர் கடவுளுடைய பெயரையே எடுத்துவிட்டார்கள். அதனால், யெகோவா என்ற பெயரே நிறைய பைபிளில் இல்லை.

      கடவுளுக்குப் புகழ் சேர்க்கிற ஒரு பைபிள் தேவைப்பட்டது. கடவுளுடைய உதவியோடுதான் மனிதர்கள் பைபிளை எழுதினார்கள். (2 சாமுவேல் 23:2) பழங்காலத்து பைபிள் சுருள்களில் 7,000 தடவைக்குமேல் யெகோவா என்ற கடவுளுடைய பெயர் இருக்கிறது. அதற்கு ஒரு உதாரணத்தை கீழே இருக்கிற படத்தில் பார்க்கலாம். (சங்கீதம் 83:18) புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் 7,000 தடவைக்குமேல் யெகோவாவுடைய பெயர் இருக்கிறது. ரொம்ப வருஷம் ஆராய்ச்சி செய்து இந்த பைபிளைத் தயாரித்திருக்கிறோம். இந்த பைபிளைப் படிக்கும்போது கடவுள் சொன்னதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது, படிப்பதற்கும் நன்றாக இருக்கிறது. ஒருவேளை, இந்த பைபிள் உங்கள் மொழியில் இல்லை என்றாலும், உங்களிடம் இருக்கிற பைபிளை தினமும் வாசியுங்கள்.—யோசுவா 1:8; சங்கீதம் 1:2, 3.

      • நாங்கள் ஏன் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளைத் தயாரித்தோம்?

      • கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறவர்கள் தினமும் என்ன செய்ய வேண்டும்?

      இன்னும் தெரிந்துகொள்ள...

      புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் இருக்கிற முன்னுரையைப் படித்தால் அதை எவ்வளவு பயபக்தியோடு மொழிபெயர்த்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாம். இங்கே இருக்கிற வசனங்களை புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் படித்துவிட்டு, அதை உங்கள் பைபிளோடு ஒப்பிட்டுப் பாருங்கள்: ஆதியாகமம் 25:29; ஏசாயா 14:23; மத்தேயு 5:3; 11:12; 1 கொரிந்தியர் 10:24, 25; பிலிப்பியர் 1:8.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்