உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 செப்டம்பர் பக். 7
  • தொடர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்ய பயிற்சி கொடுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தொடர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்ய பயிற்சி கொடுங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • இதே தகவல்
  • முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்துதல்
    நம் ராஜ்ய ஊழியம்—2005
  • பிரசங்கிப்பதற்காகப் புதியவர்களைப் பயிற்றுவிக்கும் வழிகள்
    நம் ராஜ்ய ஊழியம்—2010
  • ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... புதியவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—2015
  • முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்துதல்
    நம் ராஜ்ய ஊழியம்—2005
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 செப்டம்பர் பக். 7

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

தொடர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்ய பயிற்சி கொடுங்கள்

ஊழியத்தில் தவறாமலும் பக்திவைராக்கியத்தோடும் கலந்துகொள்ள புதிய பிரஸ்தாபிகளுக்கு ஆரம்பத்திலிருந்தே பயிற்சி கொடுக்கும்போது, அவர்கள் பலன்தரும் பிரஸ்தாபிகளாக ஆவதை அனுபவம் காட்டுகிறது. (நீதி 22:6; பிலி 3:16) திறமையாக ஊழியம் செய்ய ஒரு மாணவருக்குப் பயிற்சி கொடுப்பதற்கு உதவும் சில ஆலோசனைகள்:

  • உங்கள் மாணவர் ஒரு பிரஸ்தாபியாக ஆனதுமே, அவருக்குப் பயிற்சி கொடுக்க ஆரம்பியுங்கள். (km 8/15 பக். 1) ஊழியத்தில் ஒவ்வொரு வாரமும் தவறாமல் கலந்துகொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை அவருக்குப் புரியவையுங்கள். (பிலி 1:10) உங்கள் பிராந்தியத்தைப் பற்றி நல்ல விதமாகப் பேசுங்கள். (பிலி 4:8) தொகுதி கண்காணியோடும் மற்ற பிரஸ்தாபிகளோடும் ஊழியம் செய்யும்படியும், அவர்களுடைய அனுபவத்திலிருந்து நன்மை அடையும்படியும் அவரை உற்சாகப்படுத்துங்கள்.—நீதி 1:5; km 10/12 பக். 6 பாரா 3

    ஊழியத்துக்குத் தயாரிக்க ஒரு சகோதரர் ஒரு புதிய பிரஸ்தாபிக்கு உதவி செய்கிறார்
  • உங்கள் மாணவர் ஞானஸ்நானம் எடுத்த பிறகும், ஊழியத்தில் அவருக்குத் தேவைப்படும் உற்சாகத்தையும் பயிற்சியையும் தொடர்ந்து கொடுங்கள். முக்கியமாக, “கடவுளது அன்பு” புத்தகத்தை அவர் இன்னும் படித்து முடித்திருக்கவில்லை என்றால், அவருக்குத் தொடர்ந்து உதவி செய்யுங்கள்.—km 12/13 பக். 7

    ஒரு சகோதரி ஒரு புதிய பிரஸ்தாபியோடு ஊழியம் செய்கிறார்
  • புதிய பிரஸ்தாபியோடு ஊழியம் செய்யும்போது, எளிமையாகப் பேசுங்கள். அவர் பேசுவதைக் கேட்ட பிறகு, தாராளமாகப் பாராட்டுங்கள். இன்னும் திறமையாக ஊழியம் செய்ய அவருக்கு ஆலோசனைகள் கொடுங்கள்.—km 5/10 பக். 7

    ஒரு அப்பாவும் மகனும் ஊழியம் செய்கிறார்கள்
    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்