கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
எது உண்மையான அன்பு?
ஒரு ஆணையும் பெண்ணையும் இணைக்கும் நிரந்தரமான பந்தமாக யெகோவா திருமணத்தை ஏற்பாடு செய்தார். (ஆதி 2:22-24) பாலியல் முறைகேடு நடந்திருந்தால் மட்டும்தான் விவாகரத்து செய்ய முடியும். (மல் 2:16; மத் 19:9) திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார்; அதனால், மணத்துணையை ஞானமாகத் தேர்ந்தெடுக்கவும் சந்தோஷமான மணவாழ்க்கையை அனுபவிக்கவும் உதவும் நியமங்களை அவர் கொடுத்திருக்கிறார். —பிர 5:4-6.
எது உண்மையான அன்பு? என்ற வீடியோவைப் பார்த்த பிறகு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
எட்வின், கேத்தி தம்பதி தங்கள் மகள் ஜெனிக்கு சொன்ன புத்திமதி ஞானமானது, அன்பானது என்று ஏன் சொல்லலாம்?
நீங்கள் காதலிக்கும் ஒருவருடைய குணங்களை மாற்றிவிடலாம் என்று நினைப்பது ஏன் புத்திசாலித்தனம் அல்ல?
ஜெர்ரியும் பிரிசில்லாவும் ஜெனிக்கு என்ன ஞானமான அறிவுரை கொடுத்தார்கள்?
ஜாக் மற்றும் மேரியின் மணவாழ்வில் ஏன் பிரச்சினைகள் வந்தன?
ஆன்மீக விஷயங்களில் ஜானுக்கும் ஜெனிக்கும் என்ன ஒற்றுமை இருந்தது?
ஒருவரோடு கல்யாண உறுதிமொழி செய்வதற்கு முன்பு, அவருடைய ‘இதயத்தில் மறைந்திருக்கிற குணத்தை’ தெரிந்துகொள்வது ஏன் முக்கியம்? (1பே 3:4)
எது உண்மையான அன்பு? (1கொ 13:4-8)