உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 ஆகஸ்ட் பக். 8
  • உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இதே தகவல்
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... எப்படிப் பேசலாம் என்று நீங்களே தயாரியுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 ஆகஸ்ட் பக். 8

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்

கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சி புத்தகத்தில், “உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்” என்ற புதிய பகுதி செப்டம்பர் மாதத்திலிருந்து வெளிவரும். ஒரு கேள்வியை கேட்டு அதற்கான வசனத்தைக் காட்டி, பைபிளிலிருக்கும் அடிப்படை உண்மைகளை சொல்வதுதான் நம்முடைய குறிக்கோள்.

ஒருவருக்கு ஆர்வம் இருப்பது தெரிந்தால், அவருடைய ஆர்வத்தை வளர்ப்பதற்காக ஒரு பிரசுரத்தை கொடுங்கள்; அல்லது, jw.org-ல் உள்ள ஒரு வீடியோவை காட்டுங்கள். இரண்டு அல்லது மூன்று நாட்களிலேயே அவரை மறுபடியும் போய் பாருங்கள்; முன்பு பேசிய விஷயத்தைப் பற்றி கூடுதலாக சொல்லுங்கள்.பைபிள் என்ன கற்பிக்கிறது? (இது தமிழில் இல்லை) என்ற புதிய புத்தகம் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். நாம் பேச வேண்டிய அடிப்படை உண்மைகள் இந்தப் புதிய புத்தகத்தில் இருக்கிற ஒவ்வொரு அதிகாரத்தின் சுருக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இருக்கும். பைபிள் கற்பிக்கிறது புத்தகத்திற்குப் பதிலாக எளிமையான முறையில் தயாரிக்கப்பட்டதுதான் இந்தப் புதிய புத்தகம். பைபிளை மட்டுமே பயன்படுத்தி மறுசந்திப்புகள் செய்வதற்கு அல்லது ஒரு படிப்பு நடத்துவதற்கு  பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தில் இருக்கிற கூடுதலான தகவல்களையும் வசனங்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

முடிவில்லாத வாழ்வை அடைய ஒரே ஒரு பாதைதான் இருக்கிறது. (மத் 7:13, 14) வித்தியாசமான மதத்தையும் பின்னணியையும் சேர்ந்த மக்களை நாம் ஊழியத்தில் பார்ப்பதால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆர்வமுள்ள விஷயத்தைப் பற்றி பேசுங்கள். (1தீ 2:4) பைபிளில் இருக்கும் தகவல்களை நன்றாக விளக்க கற்றுக்கொண்டால்... ‘சத்திய வார்த்தையைச் சரியாகப் பயன்படுத்த’ திறமைகளை வளர்த்துக்கொண்டால்... அது நமக்கு சந்தோஷத்தைத் தரும்; மற்றவர்களுக்கு பைபிள் உண்மைகளை சொல்லிக்கொடுப்பதில் வெற்றியும் பெறுவோம்.—2தீ 2:15.

இளைஞனுக்கு சகோதரர் ஒருவர் பைபிளிலிருந்து ஒரு வசனத்தை எடுத்து காட்டுகிறார்

எப்போதெல்லாம் உண்மைகளைச் சொல்லிக்கொடுக்கலாம்?

  • வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்போது

  • சந்தர்ப்ப சாட்சி கொடுக்கும்போது

  • பைபிள் படிப்பு ஆரம்பிக்கும்போது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்