வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
மார்ச் 5-11
பைபிளில் இருக்கும் புதையல்கள்|மத்தேயு 20–21
“உங்களில் உயர்ந்தவனாக இருக்க விரும்புகிறவன் உங்களுக்குச் சேவை செய்கிறவனாக இருக்க வேண்டும்”
மத் 20:3-க்கான nwtsty மீடியா
சந்தை
பயிற்சி புத்தகத்தில் காட்டப்பட்டிருப்பதைப் போன்ற சில சந்தைகள் சாலையோரமாக அமைந்திருந்தன. வியாபாரிகள் தங்கள் விற்பனைப் பொருள்களைத் தெருவில் குவித்து வைத்ததால் போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்பட்டது. உள்ளூர்வாசிகளால் வீட்டு உபயோகப் பொருள்களையும், மண்பாண்டங்களையும், விலை உயர்ந்த கண்ணாடிப் பொருள்களையும் அங்கே வாங்க முடிந்தது. காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுப்பொருள்களும் அங்கே கிடைத்தன. அந்தக் காலத்தில் குளிர்சாதனப் பெட்டிகள் இல்லாததால், தேவையான பொருள்களை வாங்க மக்கள் தினமும் சந்தைக்குப் போக வேண்டியிருந்தது. அங்கே பொதுவாக, மற்ற ஊர் வியாபாரிகள் மூலமாக அல்லது மற்ற ஊர் மக்கள் மூலமாகக் கடைக்காரர்கள் சில செய்திகளைத் தெரிந்துகொள்வார்கள்... பிள்ளைகள் விளையாடிக்கொண்டு இருப்பார்கள்... வேலை இல்லாதவர்கள் கூலி வேலைக்காகக் காத்துக்கொண்டு இருப்பார்கள். சந்தையில் இயேசு நோயாளிகளைக் குணப்படுத்தியிருக்கிறார், அங்கே பவுலும் ஊழியம் செய்திருக்கிறார். (அப் 17:17) ஆனால், பெருமைபிடித்த வேத அறிஞர்களும் பரிசேயர்களும், இந்தப் பொது இடங்களில் மக்கள் தங்களைக் கவனிக்க வேண்டுமென்றும், தங்களுக்கு வணக்கம் சொல்ல வேண்டுமென்றும் ஆசைப்பட்டார்கள்.
மத் 20:20, 21-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்
செபெதேயுவின் மனைவி: அதாவது, அப்போஸ்தலர்களான யாக்கோபு மற்றும் யோவானின் அம்மா. யாக்கோபும் யோவானும்தான் இயேசுவிடம் உதவி கேட்டதாக மாற்குவின் பதிவு சொல்கிறது. அப்படியென்றால், அவர்கள்தான் தங்களுடைய அம்மாவை இயேசுவிடம் அனுப்பி உதவி கேட்கச் சொல்லியிருப்பார்கள் என்று தெரிகிறது. அவர்களுடைய அம்மா சலோமே, இயேசுவின் பெரியம்மாவாக அல்லது சித்தியாக இருந்திருக்கலாம்.—மத் 27:55, 56; மாற் 15:40, 41; யோவா 19:25.
ஒருவனை உங்களுடைய வலது பக்கத்திலும் இன்னொருவனை இடது பக்கத்திலும்: வலது பக்கம், இடது பக்கம் ஆகிய இரண்டுமே மதிப்பையும் அதிகாரத்தையும் குறித்தன. ஆனால், எப்போதுமே வலது பக்கம்தான் மிகவும் மதிப்புக்குரிய இடமாக இருந்தது.—சங் 110:1; அப் 7:55, 56; ரோ 8:34.
மத் 20:26, 28-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்
சேவை செய்கிறவனாக: வே.வா., “வேலையாளாக.” இதற்கான கிரேக்க வார்த்தை, டையக்கொனொஸ். மனத்தாழ்மையோடு மற்றவர்களுக்குச் சேவை செய்வதில் சோர்ந்துபோகாமல் இருப்பவரைக் குறிப்பதற்காக இந்த வார்த்தையை பைபிள் அடிக்கடி பயன்படுத்துகிறது. கிறிஸ்துவுக்கும் (ரோ 15:8), கிறிஸ்துவின் ஊழியர்களுக்கும் (1கொ 3:5-7; கொலோ 1:23), உதவி ஊழியர்களுக்கும் (பிலி 1:1; 1தீ 3:8), வீட்டு வேலைக்காரர்களுக்கும் (யோவா 2:5), அரசாங்க அதிகாரிகளுக்கும் (ரோ 13:4) இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
மத் 21:9-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்
தாவீதின் மகனை: இயேசு தாவீதின் வம்சத்தில் வந்தவர் என்பதையும், அவர்தான் வாக்குக் கொடுக்கப்பட்ட மேசியா என்பதையும் மக்கள் நம்பியதை இந்த வார்த்தைகள் காட்டுகின்றன.
காத்தருளுங்கள்!: கிரேக்கில், “ஓசன்னா.” இந்த கிரேக்க வார்த்தை, “காப்பாற்றும்படி வேண்டிக்கொள்கிறோம்” அல்லது “தயவுசெய்து காப்பாற்றுங்கள்” என்ற அர்த்தத்தைத் தரும் எபிரெய வார்த்தைகளிலிருந்து வந்திருக்கிறது. காப்பாற்றச் சொல்லி அல்லது வெற்றி தரச் சொல்லி கடவுளிடம் கெஞ்சுவதை இது குறிக்கிறது. “தயவுசெய்து மீட்புக் கொடுங்கள்” என்றும் இதை மொழிபெயர்க்கலாம். காலப்போக்கில், இந்த வார்த்தை ஜெபம் செய்யும்போது மட்டுமல்லாமல், கடவுளைப் புகழும்போதும் பயன்படுத்தப்பட்டது. இதற்கான எபிரெய வார்த்தைகள் சங் 118:25-ல் கொடுக்கப்பட்டுள்ளன. அவை பஸ்கா பண்டிகைக் காலத்தில் பாடப்பட்ட அல்லேல் பாடல்களின் (சங் 113-118) பாகமாக இருந்தன. அதனால், இந்தச் சந்தர்ப்பத்தில் அந்த வார்த்தைகள் உடனடியாக மனதுக்கு வந்தன. தாவீதின் மகனைக் காத்தருள வேண்டுமென்று செய்யப்பட்ட ஜெபத்துக்குக் கடவுள் பதிலளித்த ஒரு விதம், அவரை உயிர்த்தெழுப்பியதாகும். சங் 118:22, 23-ல் உள்ள வார்த்தைகளை இயேசுவே மேற்கோள் காட்டி, அதை மேசியாவுக்குப் பொருத்திக் காட்டினார்.—மத் 21:42.
அத்தி மரத்தை வைத்து ஒரு பாடம்
இயேசு ஏன் அந்த அத்தி மரத்தைப் பட்டுப்போக வைத்திருந்தார்? அவர் சொல்கிற பதிலிலிருந்து அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளலாம். “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடு இருந்தால், நான் இந்த அத்தி மரத்துக்குச் செய்ததை நீங்களும் செய்வீர்கள்; அதுமட்டுமல்ல, நீங்கள் இந்த மலையைப் பார்த்து, ‘இங்கிருந்து பெயர்ந்து போய்க் கடலில் விழு’ என்று சொன்னாலும் அது அப்படியே நடக்கும். விசுவாசத்தோடு ஜெபம் செய்தால், நீங்கள் கேட்கிற எல்லாமே உங்களுக்குக் கிடைக்கும்” என்று அவர் சொல்கிறார். (மத்தேயு 21:21, 22) விசுவாசத்தால் மலையையும் பெயர்க்க முடியும் என்று இதற்கு முன்பு சொன்ன அதே விஷயத்தைத்தான் இயேசு இப்போது திரும்பவும் சொல்கிறார்.—மத்தேயு 17:20.
கடவுள்மேல் விசுவாசம் வைப்பது அவசியம் என்பதைப் புரிய வைப்பதற்காகத்தான் இயேசு அந்த மரத்தைப் பட்டுப்போக வைத்திருந்தார். “நீங்கள் கடவுளிடம் எதையெல்லாம் கேட்கிறீர்களோ அதையெல்லாம் பெற்றுக்கொண்டதாகவே விசுவாசியுங்கள், அப்போது அதையெல்லாம் நிச்சயம் பெற்றுக்கொள்வீர்கள்” என்று சொல்கிறார். (மாற்கு 11:24) இயேசுவைப் பின்பற்றுகிற எல்லாருக்குமே இது ஒரு முக்கியமான பாடம். குறிப்பாக, இது அப்போஸ்தலர்களுக்குச் சரியான சமயத்தில் கொடுக்கப்படுகிற ஆலோசனை. ஏனென்றால், சீக்கிரத்திலேயே அவர்கள் பயங்கரமான சோதனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. பட்டுப்போன அத்தி மரத்துக்கும் விசுவாசத்துக்கும் இன்னொரு சம்பந்தமும் இருக்கிறது.
இஸ்ரவேல் தேசத்து மக்கள் அந்த அத்தி மரத்தைப் போல ஏமாற்றம் அளிக்கிறார்கள். அவர்கள் கடவுளுடன் ஒரு ஒப்பந்தத்துக்குள் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்தால், திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பவர்களைப் போலத் தெரியலாம். ஆனால் ஒரு தேசமாக அவர்கள் விசுவாசத்தையும் காட்டுவதில்லை, நல்ல கனிகளையும் கொடுப்பதில்லை. அவர்கள் கடவுளுடைய சொந்த மகனையே ஒதுக்கித்தள்ளுகிறார்கள். அதனால், கனி கொடுக்காத அத்தி மரத்தைப் பட்டுப்போக வைப்பதன் மூலம், விசுவாசமில்லாத, கனி தராத இந்தத் தேசத்துக்கு என்ன கதி ஏற்படப்போகிறது என்பதை இயேசு காட்டுகிறார்.
மார்ச் 12-18
பைபிளில் இருக்கும் புதையல்கள்|மத்தேயு 22–23
“மிக முக்கியமான இரண்டு கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள்”
மத் 22:37-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்
இதயத்தோடும்: வே.வா., “உள்ளத்தோடும்.” ‘இதயம்’ என்ற வார்த்தை அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தப்படும்போது, ஒருவர் உள்ளுக்குள் எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதைப் பொதுப்படையாகக் குறிக்கிறது. ஆனால், ‘மூச்சு,’ ‘மனம்’ ஆகிய வார்த்தைகளோடு சேர்த்து பயன்படுத்தப்படும்போது, குறிப்பாக ஒருவருடைய உணர்ச்சிகளையும் விருப்பங்களையும் அர்த்தப்படுத்துவதாகத் தெரிகிறது. இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் மூன்று வார்த்தைகளும் (இதயம், மூச்சு, மனம்), முற்றிலும் வித்தியாசமான அர்த்தங்களைக் கொடுக்கும் வார்த்தைகள் அல்ல; அவை ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்ட வார்த்தைகள்தான். கடவுள்மேல் முற்றும் முழுமையாக அன்பு காட்ட வேண்டும் என்பதை எந்தளவுக்கு வலிமையோடு வலியுறுத்த முடியுமோ, அந்தளவுக்கு வலிமையோடு வலியுறுத்துவதற்காக அவை சேர்த்து சொல்லப்பட்டிருக்கின்றன.
மூச்சோடும்: வே.வா., “முழு ஜீவனோடும்.”
மனதோடும்: அதாவது, அறிவுத்திறனோடும். ஒருவர் கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் அவர்மேல் அன்பை வளர்த்துக்கொள்ளவும் தன்னுடைய அறிவுத்திறனைப் பயன்படுத்த வேண்டும். (யோவா 17:3; ரோ 12:1) இந்த வசனம் உபா 6:5-ஐ மேற்கோள் காட்டுகிறது. அதன் மூல எபிரெயப் பதிவில், ‘இதயம், மூச்சு, பலம்’ ஆகிய மூன்று வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், கிரேக்க மொழியில் உள்ள மத்தேயுவின் பதிவில், ‘பலம்’ என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘மனம்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். முதலாவதாக, பழங்கால எபிரெய மொழியில் ‘மனம்’ என்பதற்கு எந்தவொரு குறிப்பிட்ட வார்த்தையும் இருக்கவில்லை; அதோடு, ‘இதயம்’ என்ற எபிரெய வார்த்தை பெரும்பாலும் மனதையும் குறித்தது. ‘இதயம்’ என்ற வார்த்தை அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தப்படும்போது, ஒருவர் உள்ளுக்குள் எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதைக் குறிக்கிறது; அதாவது, அவருடைய யோசனைகள், உணர்ச்சிகள், மனப்பான்மை, நோக்கம் போன்ற எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாகக் குறிக்கிறது. (உபா 29:4, அடிக்குறிப்பு; சங் 26:2; 64:6; இதயத்தோடு என்ற வார்த்தைக்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.) அதனால்தான், எபிரெயப் பதிவில் ‘இதயம்’ என்று வரும் இடங்களில், ‘மனம்’ என்பதற்கான கிரேக்க வார்த்தையை செப்டுவஜன்ட் அடிக்கடி பயன்படுத்தியிருக்கிறது. (ஆதி 8:21; 17:17; நீதி 2:10; ஏசா 14:13) உபா 6:5-ஐ மேற்கோள் காட்டும்போது, ‘பலம்’ என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘மனம்’ என்ற வார்த்தையை மத்தேயு பயன்படுத்தியதற்கு இன்னொரு காரணமும் இருந்திருக்கலாம். ‘பலம்’ என்பதற்கான எபிரெய வார்த்தை உடல் பலத்தை மட்டுமல்லாமல், மனோபலத்தை அல்லது அறிவுத்திறனைக்கூட குறிக்கும். எப்படியிருந்தாலும், எபிரெய மற்றும் கிரேக்க வார்த்தைகள் இப்படி ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டவையாக இருந்ததால்தான், உபாகமம் புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டியபோது சுவிசேஷ எழுத்தாளர்கள் அதே வார்த்தையைப் பயன்படுத்தாமல் வேறு வார்த்தையைப் பயன்படுத்தினார்கள்.
மத் 22:39-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்
இரண்டாம்: பரிசேயன் கேட்ட கேள்விக்கு இயேசு சொன்ன நேரடியான பதிலைப் பற்றி மத் 22:37 சொல்கிறது. அப்படி நேரடியாகப் பதில் சொன்னதோடு நிறுத்திக்கொள்ளாமல், கூடுதலாக இரண்டாவது கட்டளையையும் இயேசு மேற்கோள் காட்டியதை (லேவி 19:18) பற்றி இந்த வசனம் சொல்கிறது. இயேசு அந்த இரண்டு கட்டளைகளையுமே குறிப்பிடுவதன் மூலம், அவை ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்திருந்ததைக் காட்டினார்; அவைதான் திருச்சட்டம் முழுவதுக்கும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களுக்கும் சாராம்சம் என்பதையும் காட்டினார்.—மத் 22:40.
மற்றவர்கள்மேலும்: வே.வா., “சக மனிதர்மேலும்.” இதற்கான கிரேக்க வார்த்தையின் நேரடி அர்த்தம், “பக்கத்தில் இருப்பவர்.” அந்த வார்த்தை, ஒருவருக்குப் பக்கத்தில் வாழ்கிறவர்களை மட்டுமல்ல, அவர் யாரையெல்லாம் சந்திக்கிறாரோ அவர்கள் எல்லாரையும் குறிக்கலாம்.—லூ 10:29-37; ரோ 13:8-10.
மத் 22:40-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்
திருச்சட்டம் முழுவதுக்கும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களுக்கும்: “திருச்சட்டம்” என்பது ஆதியாகமம்முதல் உபாகமம்வரை இருக்கும் பைபிள் புத்தகங்களைக் குறிக்கிறது. ‘தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள்’ என்பது எபிரெய வேதாகமத்தில் இருக்கும் தீர்க்கதரிசனப் புத்தகங்களைக் குறிக்கிறது. ஆனாலும், இவை இரண்டும் சேர்த்து சொல்லப்படும்போது, எபிரெய வேதாகமம் முழுவதையும் குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.—மத் 7:12; 22:40; லூ 16:16.
அடிப்படையாக இருக்கின்றன: இதற்கான கிரேக்க வினைச்சொல்லின் நேரடி அர்த்தம், “உறுதியாகப் பிடித்துக்கொண்டு இருக்கின்றன.” பத்துக் கட்டளைகள் அடங்கிய திருச்சட்டத்துக்கு மட்டுமல்லாமல், எபிரெய வேதாகமம் முழுவதற்குமே அன்புதான் அடிப்படை என்பதை இயேசு சுட்டிக்காட்டினார்.—ரோ 13:9.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
மத் 22:21-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்
அரசனுடையதை அரசனுக்கும்: இந்த வசனத்தையும் இதன் இணைவசனங்களையும் (மாற் 12:17; லூ 20:25) தவிர, வேறெங்கும் ரோமப் பேரரசனைப் பற்றி இயேசு குறிப்பிட்டதாகச் சொல்லப்படவில்லை. ‘அரசனுடையது’ என்பது, அரசாங்க சேவைகளுக்காகச் செலுத்தப்படும் பணத்தைக் குறிக்கிறது; அதோடு, அப்படிப்பட்ட அதிகாரங்களுக்குக் காட்ட வேண்டிய மதிப்பையும் கீழ்ப்படிதலையும்கூட குறிக்கிறது.—ரோ 13:1-7.
கடவுளுடையதைக் கடவுளுக்கும்: முழு இதயத்தோடு கடவுளை வணங்குவதையும், முழு மூச்சோடு அவர்மேல் அன்பு காட்டுவதையும், எப்போதுமே அவருக்கு முழுமையாகக் கீழ்ப்படிவதையும் இது குறிக்கிறது.—மத் 4:10; 22:37, 38; அப் 5:29; ரோ 14:8.
மத் 23:24-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
கொசுவை வடிகட்டிவிட்டு, ஒட்டகத்தை விழுங்கிவிடுகிறீர்கள்!: இஸ்ரவேலர்களுக்குத் தெரிந்த அசுத்தமான உயிரினங்களில் மிகச் சிறியது கொசு, மிகப் பெரியது ஒட்டகம். (லேவி 11:4, 21-24) இயேசு இங்கே உயர்வு நவிற்சி அணியைக் கொஞ்சம் நகைச்சுவையாகப் பயன்படுத்தியிருக்கிறார். ஒரு கொசுவினால் தீட்டுப்படாமல் இருப்பதற்காக மதத் தலைவர்கள் தங்களுடைய பானங்களை வடிகட்டினார்கள்; ஆனால், திருச்சட்டத்தில் இருந்த மிக முக்கியமான கட்டளைகளை அவர்கள் ஒரேயடியாக அலட்சியம் செய்தார்கள்; அது, ஒட்டகத்தை விழுங்குவதுபோல் இருந்தது.
மார்ச் 19-25
பைபிளில் இருக்கும் புதையல்கள்|மத்தேயு 24
“இந்தக் கடைசி நாட்களில் ஆன்மீக ரீதியில் விழிப்போடு இருங்கள்!”
it-2-E 279 ¶6
அன்பு
ஒருவரின் அன்பு குறைந்துபோகலாம். இயேசு கிறிஸ்து தன்னுடைய சீஷர்களிடம் எதிர்காலச் சம்பவங்களைப் பற்றிச் சொல்லும்போது, கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் என உரிமைபாராட்டுகிற ஆட்களுடைய அன்பு (அகாப்பே) குறைந்துவிடும் என்று குறிப்பிட்டார். (மத் 24:3, 12) சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாகப்போகிற காலத்தில், நிறையப் பேர் “பண ஆசைபிடித்தவர்களாக,” அதாவது பணத்தின் மேல் அளவுக்கதிகமான அன்பு வைப்பவர்களாக, இருப்பார்கள் என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (2தீ 3:1, 2) அப்படியானால், ஒருவர் சரியான நியமங்களை மறந்துவிடுவதற்கும், சரியான விஷயங்களின் மேல் முன்பு காட்டிவந்த அன்பைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொள்வதற்கும் வாய்ப்பிருக்கிறது என்பது தெரிகிறது. கடவுளுடைய வார்த்தையைத் தியானிப்பதன் மூலமும், அதிலுள்ள நியமங்களுக்கு ஏற்ப வாழ்க்கையில் மாற்றங்கள் செய்வதன் மூலமும் தொடர்ந்து அன்பு காட்டி, அதை வளர்ப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இது வலியுறுத்துகிறது.—எபே 4:15, 22-24.
கடவுளிடம் உங்கள் முழு கடமையையும் நிறைவேற்றுகிறீர்களா?
5 நாம் வாழும் கொடிய காலங்களைப் பற்றி இயேசு கிறிஸ்து இவ்வாறு சொன்னார்: “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.” (மத்தேயு 24:37-39) மிதமாக புசிப்பதிலும் குடிப்பதிலும் தவறேதும் இல்லை. திருமணம் என்பது கடவுள்தாமே ஆரம்பித்து வைத்த ஓர் ஏற்பாடு. (ஆதியாகமம் 2:20-24) ஆனால் இதுதான் வாழ்க்கை என மூழ்கிவிட்டதை உணர ஆரம்பித்தால், ஏன் அதற்காக ஜெபம் செய்யக்கூடாது? ராஜ்ய அக்கறைகளை முதலில் வைக்கவும், சரியானதை செய்யவும், அவரிடம் நம் கடமையை நிறைவேற்றவும் யெகோவா நமக்கு உதவ முடியும்.—மத்தேயு 6:33; ரோமர் 12:12; 2 கொரிந்தியர் 13:7.
அப்போஸ்தலர்கள் அடையாளம் கேட்கிறார்கள்
தன்னுடைய சீஷர்கள் எச்சரிக்கையாகவும், விழிப்பாகவும், தயாராகவும் இருக்க வேண்டும் என்று இயேசு சொல்கிறார். இதை வலியுறுத்துவதற்காக இயேசு இன்னொரு உவமையைச் சொல்கிறார். “ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்: ராத்திரி எந்த நேரத்தில் திருடன் வருவான் என்பது வீட்டு எஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவர் விழித்திருந்து, வீட்டுக்குள் திருடன் புகுந்துவிடாமல் பார்த்துக்கொள்வார். அதனால், நீங்களும் தயாராக இருங்கள்; ஏனென்றால், நீங்கள் நினைக்காத நேரத்தில் மனிதகுமாரன் வருவார்” என்று எச்சரிக்கிறார்.—மத்தேயு 24:43, 44.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
மத் 24:8-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
வேதனைகளுக்கு: இதற்கான கிரேக்க வார்த்தை, குறிப்பாகப் பிரசவத்தின்போது ஏற்படும் கடும் வலியைக் குறிக்கிறது. ஆனால், இங்கே அது வேதனையையும் வலியையும் துன்பத்தையும் பொதுப்படையாகக் குறிக்கிறது. அதேசமயத்தில், மத் 24:21-ல் சொல்லப்பட்டிருக்கும் மிகுந்த உபத்திரவத்துக்கு முன்பான காலப்பகுதியில், கஷ்டங்களும் துன்பங்களும் பிரசவ வலியைப் போல அதிகமாகிக்கொண்டே போகும் என்பதை இது குறிக்கலாம். அதாவது, பிரசவ நேரம் நெருங்க நெருங்க, வலி எப்படி இன்னும் அடிக்கடி வருமோ, இன்னும் கடுமையாகுமோ, இன்னும் அதிக நேரத்துக்கு இருக்குமோ, அப்படித்தான் கஷ்டங்களும் அதிகமாகும் என்பதைக் குறிக்கலாம்.
மத் 24:20-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்
குளிர் காலத்திலோ: குளிர் காலத்தில் கன மழை பெய்யும், வெள்ளம் பெருக்கெடுக்கும், குளிர் அதிகமாகும். அதனால், பயணம் செய்வது கஷ்டம். உணவும் தங்குமிடமும் கிடைப்பதுகூட கஷ்டம்.—எஸ்றா 10:9, 13.
ஓய்வுநாளிலோ: யூதேயா போன்ற பகுதிகளில், ஓய்வுநாள் சட்டத்தின் அடிப்படையில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன; அதனால், ஓய்வுநாளின்போது ரொம்பத் தூரம் பயணம் செய்யவோ பொருள்களைச் சுமந்துகொண்டு போகவோ முடியவில்லை. அதோடு, ஓய்வுநாளில் நகரவாசல்கள் மூடப்பட்டிருந்தன.—அப் 1:12-ஐயும் இணைப்பு B12-ஐயும் பாருங்கள்.
மார்ச் 26–ஏப்ரல் 1
பைபிளில் இருக்கும் புதையல்கள் | மத்தேயு 25
“விழிப்புடன் இருங்கள்”
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு உண்மையாக இருங்கள்
7 இன்று நாம் செம்மறியாடு-வெள்ளாடு பற்றிய உதாரணத்தை தெளிவாகப் புரிந்துவைத்திருக்கிறோம். இயேசுதான் “மனிதகுமாரன்” அதாவது, “ராஜா.” இயேசுவோடு பரலோகத்தில் ஆட்சி செய்ய கடவுளுடைய சக்தியால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள்தான் ராஜாவின் ‘சகோதரர்கள்.’ (ரோ. 8:16, 17) எல்லா தேசத்தையும் சேர்ந்த மக்கள்தான் செம்மறியாடுகளாகவும் வெள்ளாடுகளாகவும் இருக்கிறார்கள். இயேசு அவர்களை, மிகுந்த உபத்திரவத்தின் கடைசியில்தான் நியாயந்தீர்ப்பார். சீக்கிரத்தில் மிகுந்த உபத்திரவம் ஆரம்பிக்கப் போகிறது. இப்போது பூமியில் வாழ்கிற பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களை மக்கள் எப்படி நடத்துகிறார்களோ அதை வைத்துத்தான் இயேசு அவர்களை நியாயந்தீர்க்கப் போகிறார். இந்த உதாரணத்தையும் மத்தேயு 24, 25 அதிகாரங்களில் இருக்கிற மற்ற உதாரணங்களையும் யெகோவா நமக்கு தெளிவாகப் புரிய வைத்ததற்காக அவருக்கு ரொம்ப நன்றியோடு இருக்க வேண்டும்!
w09 10/15 16 ¶16-18
‘நீங்கள் என் நண்பர்கள்’
16 கடவுளுடைய அரசாங்கத்தின்கீழ் இந்தப் பூமியில் வாழும் நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதென்றால், கிறிஸ்துவின் சகோதரர்களோடு உங்களுக்கிருக்கும் நட்பை நீங்கள் எப்படி வெளிக்காட்டலாம்? மூன்று வழிகளை மட்டும் இப்போது சிந்திப்போம். முதல் வழி, பிரசங்க வேலையில் முழு இருதயத்தோடு ஈடுபடுவதாகும். நற்செய்தியை உலகமெங்கும் பிரசங்கிக்கும்படி கிறிஸ்து தம் சகோதரர்களுக்குக் கட்டளையிட்டார். (மத். 24:14) என்றாலும், இன்று பூமியிலுள்ள கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு, அவர்களுடைய நண்பர்களாகிய ‘வேறே ஆடுகளின்’ உதவியில்லாமல் அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவது கடினம். உண்மையில், வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு முறையும் பிரசங்க வேலையில் ஈடுபடும்போது, இந்தப் பரிசுத்த வேலையை நிறைவேற்ற கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு உதவவே செய்கிறார்கள். இந்த விதத்தில் அவர்கள் காட்டுகிற நட்பை உண்மையும் விவேகமும் உள்ள அடிமை வகுப்பார் பெரிதும் போற்றுகிறார்கள், கிறிஸ்துவும் போற்றுகிறார்.
17 வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு உதவுகிற இரண்டாவது வழி, பிரசங்க வேலைக்குப் பண உதவி அளிப்பதாகும். “அநீதியான இந்த உலகத்தின் செல்வங்களைக் கொண்டு” நண்பர்களைச் சம்பாதித்துக்கொள்ளும்படி இயேசு தம் சீடர்களுக்கு ஊக்கமளித்தார். (லூக். 16:9) இயேசுவின் நட்பையும் யெகோவாவின் நட்பையும் நாம் விலைகொடுத்து வாங்கிவிடலாம் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக, கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு நம்முடைய பணத்தையும் பொருளையும் பயன்படுத்தி, அவர்கள் மீது நமக்குள்ள நட்பையும் அன்பையும் வெளிக்காட்டலாம் என்று அர்த்தப்படுத்துகிறது; ஆம், வெறுமனே சொல்லினால் அல்லாமல் ‘செயலினாலும் சத்தியத்தினாலும்’ வெளிக்காட்டலாம் என்று அர்த்தப்படுத்துகிறது. (1 யோ. 3:16-18) பிரசங்க வேலையில் ஈடுபடும்போதும், கூட்டங்கள் நடைபெறுகிற மன்றங்களைக் கட்டி, அவற்றைப் பராமரிப்பதற்கு நன்கொடை வழங்கும்போதும், உலகளாவிய பிரசங்க வேலைக்காக நன்கொடை கொடுக்கும்போதும் நாம் இந்தப் பண உதவியை அளிக்கிறோம். நாம் கொடுக்கிற நன்கொடை அதிகமாக இருந்தாலும் சரி குறைவாக இருந்தாலும் சரி, அதைச் சந்தோஷமாகக் கொடுக்கும்போது யெகோவாவும் இயேசுவும் நிச்சயமாகச் சந்தோஷப்படுவார்கள்.—2 கொ. 9:7.
18 நாம் எல்லாருமே கிறிஸ்துவின் நண்பர்கள் என்பதை நிரூபிக்கிற மூன்றாவது வழி, சபை மூப்பர்கள் அளிக்கிற வழிநடத்துதலுக்கு ஒத்துழைப்பதாகும். இந்த மூப்பர்கள், கடவுளுடைய சக்தியினால் கிறிஸ்துவின் வழிநடத்துதலின்படி நியமிக்கப்படுகிறார்கள். (எபே. 5:23) ‘உங்களைத் தலைமைதாங்கி நடத்துகிறவர்களுக்குக் கீழ்ப்படிந்து, அடிபணிந்து நடங்கள்’ என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபி. 13:17) பைபிள் அடிப்படையில் சபை மூப்பர்கள் கொடுக்கிற அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிவது சில சமயங்களில் நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். ஒருவேளை அவர்களுடைய குறைபாடுகளை அறிந்திருப்பதன் காரணமாக அவர்கள் தருகிற அறிவுரையைத் தவறான கண்ணோட்டத்தில் நாம் காணலாம். என்றாலும், சபையின் தலைவராகிய கிறிஸ்து அந்த அபூரண மனிதர்களைப் பயன்படுத்த மனமுள்ளவராக இருக்கிறார். ஆகவே, அவர்களுடைய அதிகாரத்தைக் குறித்து நாம் காட்டுகிற மனப்பான்மை, கிறிஸ்துவோடுள்ள நம் நட்பை நேரடியாகப் பாதிக்கும். மூப்பர்களின் குறைபாடுகளைப் பெரிதுபடுத்தாமல், அவர்கள் தருகிற அறிவுரைகளுக்கு மனமுவந்து கீழ்ப்படியும்போது கிறிஸ்துமீது நமக்குள்ள அன்புக்கு அத்தாட்சி அளிக்கிறோம்.