இருதயத்தைச் சந்தோஷப்படுத்தும் நன்கொடைகள்
கீழே கொடுக்கப்பட்ட அடைப்புக்குள் கிறிஸ்தவ மண்டலத்தின் மதங்களால் நிதி திரட்டுவதற்காக அனுப்பப்பட்ட இரு கடிதங்களின் மாதிரிகள் இருக்கின்றன. அவை இருதயத்தைக் ?குதூகூலப்படுத்துவதாக நீங்கள் காண்கிறீர்களா? அவ்விதமாகச் சொல்வதற்கேயில்லை! என்றாலும், கடவுள் அங்கீகரிக்கும் வணக்கத்தை முன்னேற்ற உதவ பலவகைகளில் இன்று நிதி தேவைப்படுகிறது. ஆகவே கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்குத் தேவைப்படும் நிதியை ஒரு கிறிஸ்தவ அமைப்பு எப்படிப் பெறுகிறது?
இதற்கான உத்தரவை முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையின் பழக்கங்களை ஆராய்வதினால் காணக்கூடும். லூக்கா 6:38-ல் இயேசு ஆலோசனை கூறுகிறார்: “கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும். அமுக்கிக் குலுக்கிச் சரிந்துவிழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்.” இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டவர்களுக்கு அந்தச் சித்தரிப்பு எவ்வளவு பொருத்தமாகத் தோன்றியது. பொருட்களை எடுத்துச்செல்ல அல்லது வைக்க அவர்களுடைய கிழக்கத்திய உடைகள் உள்ளடங்கிய ஒரு பையைக் கொண்டதாக இருந்தது. மடிப்பு அல்லது நேரடியான அர்த்தத்தில் “மடி” [கிரேக்க பதம், கோல்’போஸ்] என்பது இடுப்பிற்கு மேல், தொங்கலான அங்கியின் மடிப்பினாலாகிய பை போன்ற ஒன்றைக் குறிக்கிறது; இந்தப் பைக்குள் வியாபாரிகள் அளக்கப்பட்ட பொருட்களைக் கொட்டுவார்கள்.
எத்தனை வியாபாரிகள் ஒரு வாங்குவோரின் அங்கியின் பையிற்குள் அது நிரம்பி வழியக்கூடிய அளவிற்குப் பொருட்களை அமுக்கி, பின் குலுக்கி கொட்டுவார்கள்? அப்படி எவரேனும் இருந்தாலும் மிகச் சிறியோரே இருப்பர்! என்றாலும் தேவையில் இருப்பவர்களுக்குக் கருணை செயலாக மனமுவந்து கொடுக்கும் கிறிஸ்தவர்கள் இரக்கத்தைத் தாராளமாகப் பெறுவார்கள். நாம் மற்றவர்களை நடத்தும் அளவினாலேயே, தாராளமாகவோ அல்லது உலோபியாகவோ, நாம் மனிதர்களிடமிருந்து மட்டுமல்ல அதைவிட முக்கியமாக யெகோவா தேவனிடமிருந்து பதிலாகப் பெறுவது அளக்கப்படுகிறது.—2 கொரிந்தியர் 9:6-ஐ ஒப்பிடுங்கள். கலாத்தியர் 6:7.
இந்த நியமம் செயல்படுவதை, இயேசு தாராளமாகத் தன்னையும் தன்னிலுள்ள யாவற்றையும் கொடுப்பதன் மூலமாக அனுபவித்தார். அவர் தாராளத் தன்மையின் உருவமாக இருந்தார். எளியவர்க்குக் கடவுளின் ராஜ்யத்தின் நற்செய்தியை வைராக்கியத்துடனும், தன்னலமின்றியும் அவர் பிரசங்கித்தார். அவருடைய சேவைக்கு அவர் பணம் கேட்கவுமில்லை, ஓரளவுக்குச் சம்பளத்தைப் பெறுவதையும் எதிர்பார்க்கவுமில்லை. என்றாலும், அவர் ஒன்றிலும் குறைவுள்ளவராக இல்லை. ஜனங்கள் தாராளமாய் மனமுவந்து அவருடைய சேவையில் அவரை ஆதரித்தார்கள்.—லூக்கா 7:22; 8:1-3.
இயேசுவினுடைய கொடை மற்றவர்களை—சீமோன் பேதுரு, யாக்கோபு, யோவான் மேலும் பன்னிரண்டு பேரில் மற்றவர்களையும் ஊழியத்தில் பங்கைப் பெறுவதற்கு எல்லாவற்றையும் விட்டுவிடுவதில் அதே விதமான தாராளத் தன்மையைக் காண்பிக்கும்படி ஏவியது. (லூக்கா 5:10, 11; 9:1-6) இந்த விதமான கொடை இன்றும் அதே விதமான பலன்களைக் கொடுக்கிறது. மற்றவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைக் கேட்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய நேரத்தையும், சக்தியையும், பொருளையும் கொடுக்கிறார்கள். அதன் விளைவாக பிரசங்கிப்பதில் அவர்கள் தாராளத் தன்மையைக் காட்டுவதைப் போல், இன்னும் மற்றவர்களும் நற்செய்தியைப் பரப்புவதில் பங்குகொள்வதன் மூலம் தாராளத் தன்மையைக் காட்டத் தூண்டப்படுகிறார்கள்.—நீதிமொழிகள் 11:25.
என்றாலும் இருதயத்திற்கு ?குதூகலம் அளிக்கும் பிரசங்கிக்கும் நம்முடைய கொடைக்கும் அதிகமான ஒன்று இருக்கிறது. சரியான நோக்கத்துடனும், சரியான காரணங்களுக்காகவும், நிதி கொடுப்பது உண்மை வணக்கத்தின் ஒரு பாகமாகவுங்கூட இருக்கிறது. (2 கொரிந்தியர் 9:9-14) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களால் இது எப்படிச் செய்யப்பட்டது?
ஆதி கிறிஸ்தவர்கள் செய்த விதம்
பொ.ச. 33-ஆம் ஆண்டில் கிறிஸ்தவ சபையின் பிறப்பின் முதல் நாளன்று, “அந்நியோனியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம் பண்ணுதலிலும்” மனமாற்றமடைந்து புதிதாக முழுக்காட்டப்பட்ட 3,000 பேர் தரித்திருந்தார்கள். என்ன நல்ல காரணத்திற்காக? அப்போஸ்தலர்களுடைய போதகத்தில் தொடர்ந்து தாங்கள் கவனம் செலுத்தி அந்தப் புதிதாகப் பிறந்த விசுவாசத்தை ஸ்திரப்படுத்துவதற்காக.—அப்போஸ்தலர் 2:41, 42.
யூதர்களும் யூத மதத்தைத் தழுவியவர்களும் பெந்தெகொஸ்தே பண்டிகை நாட்களுக்கு மட்டுமே எருசலேமில் தங்குவதற்குத் திட்டமிட்டு வந்திருந்தார்கள். ஆனால் அவர்களில் கிறிஸ்தவர்களாக ஆனவர்கள் இன்னும் சிறிதுகாலம் தங்கி தங்களுடைய புது விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்குக் கற்றுக்கொள்ள விரும்பினார்கள். இது உணவிலும் வீட்டு வசதி பிரச்னையிலும் ஒரு நெருக்கடியை உண்டாக்கிற்று. வந்தவர்களில் சிலரிடம் போதுமான நிதி இல்லாமலிருந்தது. அதே சமயத்தில் மற்றவர்களிடம் அதிகமிருந்தது. ஆகவே தற்காலிகமாக, பொருட்கள் மொத்தமாகக் கூட்டப்பட்டு தேவையுடையவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.—அப்போஸ்தலர் 2:43-47.
அவர்களுடைய உணவு மற்றும் வீட்டுவசதி எப்படிச் சமாளிக்கப்பட்டன? அப்போஸ்தலர்கள் நிர்வாகக் குழுவாகச் செயல்பட்டு, அளிக்கப்பட்ட பொருட்களைச் சேகரிக்கவும் விநியோகிக்கவும் ஒருமுகப்பட்டார்கள். இவ்விதமாக இந்தக் காட்சி, கிறிஸ்தவ சபை அதனுடைய அங்கத்தினர்கள் தங்களுடைய பொருள் உடமைகளைத் தங்களுடையவைகளாகவே கருதாமல் முழு சபையின் நலனுக்காக உபயோகிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதைக் காட்டினார்களென்று காண்பிக்கிறது. (அப்போஸ்தலர் 2:44; 4:32) கூடுதலான நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவற்றை விற்று, விற்கப்பட்டவற்றின் கிரயத்தைக் கொண்டுவந்து அப்போஸ்தலர்களுடைய பாதத்தில் வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத் தக்கதாய் பகிர்ந்து கொடுக்கப்பட்டது.—அப்போஸ்தலர் 4:34, 35.
சொத்துக்களை விற்று பொருட்களைப் பகிர்ந்து கொள்வது முற்றிலும் மனமுவந்து செய்யப்பட்டதாகவேயிருந்தது. ஒருவரும் விற்கவோ அல்லது கொடுக்கவோ கடமைப்பட்டவர்களாயில்லை; வறுமையை வளர்க்கும் ஒன்றாகவும் அது இல்லை. கூறப்பட்ட கருத்து செல்வந்த அங்கத்தினர்கள் தங்கள் எல்லா சொத்தையும் விற்று இவ்விதமாக எளியவர்களானார்கள் என்பதல்ல. மாறாக, அக்காலத்தின் சூழ்நிலைமைக்குள்ளிருந்த சக விசுவாசிகளின் மேலுள்ள கருணையின் பேரில் அவர்கள் தங்கள் சொத்தை விற்று அதன் விலை எல்லாவற்றையும் ராஜ்ய அக்கறைகள் முன்னேற்றப்படுவதற்குத் தேவைப்பட்டதைப் பூர்த்தி செய்ய அளித்தார்கள்.—2 கொரிந்தியர் 8:12-15-ஐ ஒப்பிடுங்கள்.
அதுபோல் இன்றும் தனிப்பட்டவர்கள் தங்களுடைய சொத்தை உவாட்ச் டவர் சங்கத்திற்கு எழுதிக்கொடுத்தோ, அல்லது அவர்களுடைய மரண சாசனங்களில் இந்த அமைப்பை நியமித்து அதன் மூலமாக யெகோவாவின் சாட்சிகளின் நிர்வாகக் குழுவிற்கு ராஜ்ய தேவை அதிகப்படுமிடத்தில் உபயோகிப்பதற்காக நிதியைக் கொடுக்கிறார்கள். இவ்வித கொடையெல்லாம் பெந்தெகாஸ்தே சமயத்தில் இருந்ததுபோல் ஆவிக்குரிய வெளிச்சத்தைப் பரப்புவதில் உதவி செய்கிறது. அவற்றில் எதுவும் ஒருபொழுதும் கட்டாயமாக இல்லை.
கிரமமாகச் செய்யப்படுவது முக்கியம்
பொ.ச. 33-ஆம் வருடத்தில் பெந்தெகொஸ்தேக்கு சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட அளிப்பின் தேவையைப் பற்றி அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்திய சபைக்கு ஞாபகமூட்டுகிறான். அவன் எழுதுகிறான்: “பரிசுத்தவான்களுக்காகச் சேர்க்கப்படும் தர்மப் பணத்தைக் குறித்து நான் கலாத்தியா நாட்டுச் சபைகளுக்குப் பண்ணின திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள்.” அதன் பின்பு அவர் ஒரு சிறிய ஆலோசனையைக் கூட்டுகிறார்: “நான் வந்திருக்கும்போது பணம் சேர்க்குதல் இராதபடிக்கு உங்களில் அவனவன் வாரத்தின் முதல் நாள்தோறும் தன்தன் வரவுக்குத்தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன், நான் வரும்போது உங்கள் உபகாரத்தை எருசலேமுக்குக் கொண்டுபோகும்படிக்கு நீங்கள் தகுதியுள்ளவர்களாகக் குறிக்கிறவர்கள் எவர்களோ, அவர்களிடத்தில் நிரூபங்களைக் கொடுத்து அவர்களை அனுப்புவேன்.” எவ்வளவு கொடுக்க வேண்டுமென்பதைத் தீர்மானிப்பது அவர்களுடைய “வீட்டில்” நடக்க வேண்டியதிருந்ததால், வலியவனானாலும், எளியவனானாலும் முழு குடும்பத்தையும் உட்படுத்தியதாகக் காணப்படுகிறது.—1 கொரிந்தியர் 16:1-3.
எந்தவிதமாகக் கொடுக்கப்பட வேண்டுமென்பதில் பவுலுடைய ஆலோசனை சபை அங்கத்தினர்களால் இன்று பொருத்தப்படலாம். எப்படி? கிரமமாக செய்வது முக்கியமாக இருக்கிறது. உங்களுடைய சபை, நீங்கள் கூடும் இடத்திற்காக அல்லது ராஜ்ய மன்றத்திற்காக மாதவாடகை அல்லது நடத்தும் செலவு கொடுக்க வேண்டுமென்றால், பெரூ தேசத்தின் கிளைக்காரியாலயம் எழுதுவதுபோல், “கொடுக்கப்படும் தொகை அவ்வளவு பெரிய காரியமில்லை. ஆனால் ராஜ்ய அக்கறைக்காக ஒவ்வொரு வாரம் அல்லது மாதந்தோறும் ஒழுங்காக ஒதுக்கிவைப்பதே” முக்கியமாக இருக்கிறது. இந்தக் கருத்து உங்களுக்கு ஏற்றதாக காணப்படுகிறதா? ஒழுங்காக கொடுப்பது அவர்களுடைய வணக்கத்தின் பாகமாக எப்படி இருக்கிறது என்பதைக் குழந்தைகள்கூட மதிப்பதற்குப் போதிக்கப்படலாம்.
ஆகவே, சரியான நோக்கத்துடனும், சரியான காரணத்திற்காகவும், அளிப்புகள் அளிக்கப்படும்போது அவை கடவுளுடைய இருதயத்திற்கும் மனுஷருடைய இருதயத்திற்கும் ?குதூகலமளிக்கின்றன. 2 கொரிந்தியர் 9:7 கூறுகிறது: “அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன், உற்சாகமாய் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.” (w86 12/1)
[பக்கம் 27-ன் பெட்டி]
கிறிஸ்தவ மண்டலத்தால் உபயோகிக்கப்படும் முறைகள்
இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுத ஆண்டவர் என்னிடம் பேசினார் . . . நீங்கள் எனக்கு இப்பொழுது உதவிசெய்ய 20,000 டாலரை துரிதமாக அனுப்புவீர்களானால் நீங்கள் இதற்கு முன்னொருபொழுதும் ஆசீர்வதிக்கப்படாத விதமாய் அவர் ஆசீர்வதிப்பார் என்று இந்தக் கடிதத்தை எழுதி உங்களிடம் சொல்லும்படி கடவுள் என்னிடம் சொல்லாதிருந்தால், நான் இந்தக் கடிதத்தை இந்த உலகில் வேறு எதற்காகவும் எழுதியிருக்க மாட்டேன்.—கனடாவிலுள்ள ஒரு மதகுரு, ‘உங்கள் ஊழியனும் உடன் பங்காளியும்’ என்று கையொப்பமிட்டு எழுதிய பாரம் வடிவத்திலுள்ள கடிதம்
இந்தப் பரிசுத்த அபிஷேக எண்ணெயை திறவுங்கள். (ஒரு துளியையுங்கூட வீணாக்காதீர்கள்). இயேசு இந்த விசுவாசத்தின் எண்ணெயாயிருக்கிறார். இதனால் உங்கள் நெற்றியில் ஒரு சிலுவை அடையாளத்தை இட்டுக்கொண்டு, அதன் பின்பு நீங்களாகவே ஒரு அறைக்குள் விசுவாசத்துடன் போய், உங்களிடமிருக்கும் எல்லா பணத்தையும் எடுத்து உங்களுடைய பணப்பிரச்னையைத் தீர்க்கவும், லூக்கா 6:38-ல் உள்ளதுபோல் உங்களுடைய பணம் பெருகவும், ஒவ்வொரு நோட்டிலும் ஒரு சிலுவை அடையாளத்தைப் போடுங்கள். இந்தப் பரிசுத்த அபிஷேக எண்ணெயினால் நீங்கள் வைத்திருக்கும் பணத்தை நீங்கள் அபிஷேகம் செய்யும்போது ஒவ்வொரு நோட்டையும் அபிஷேகம் செய்யுங்கள். ஒவ்வொரு நோட்டிலும் சிலுவை அடையாளத்தைப் போட்டு அதன் பின் உங்களிடமிருக்கும் பணம் எல்லாவற்றிலும் பெரிய நோட்டில் 20, 10, 5 டாலர்கள் இருக்குமென்றால் அபிஷேக எண்ணெய்யால் சிலுவை அடையாளத்தை இட்டு, அதைக் கடவுளுடைய வேலைக்காகத் தபாலில் அனுப்புங்கள்—“30 வருடங்களாக கடவுளின் ஒரு தீர்க்கதரிசி” என்று கையொப்பமிட்ட, ஐக்கிய மாகாணங்களில் ஒரு ‘ரெவரண்டின்’ கடிதத்திலிருந்து
[பக்கம் 29-ன் பெட்டி]
எப்படிச் சிலர் ராஜ்ய வேலைக்கு நன்கொடை அளிக்கிறார்கள்
◆ வெகுமதிகள்: பணம் சார்ந்த நன்கொடைகள் நேரிடையாக உவாட்ச் டவர் சொஸையிட்டிக்கு (Watch Tower Bible and Tract Society of Pennsylvania, 25 Columbia Heights, Brooklyn, New York 11201) அல்லது உள்ளூரில் அமைந்திருக்கும் கிளை அலுவலகத்துக்கு அனுப்பப்படலாம். சொத்துக்களுங்கூட நன்கொடையாக அளிக்கப்படலாம். இது ஒரு நன்கொடை என்று தெரிவிக்கக்கூடிய சுருக்கமான ஒரு கடிதம் இந்த நன்கொடைகளோடு சேர்ந்து வரவேண்டும்.
◆ நிபந்தனைக்குட்பட்ட நன்கொடை ஏற்பாடு: பணம், தொழில் நிறுவனத்தில் உள்ள பங்குகள் (stocks), கடன்பத்திரங்கள் மற்றும் சொத்துக்கள் சங்கத்திற்குக் கொடுக்கப்படலாம். தனக்குத் தேவையான சமயத்தில், நன்கொடையளித்தவருக்கு அவை திருப்பித்தரப்படும் என்ற அடிப்படையில் இவை கொடுக்கப்படலாம். மரணத்தின்போது சொத்துரிமையைச் சங்கம் பெற்றுக்கொள்வதை நிச்சயப்படுத்துவதோடுகூட, இந்த முறையானது ஓர் உயிலின் உண்மையை சட்டப்பூர்வமாக நிரூபிக்கும் செலவுகளைத் தவிர்க்கிறது.
◆ காப்புறுதி (இன்சூரன்ஸ்): ஒரு ஆயுள்-காப்புறுதி திட்டத்தின் அனுபவ பாத்தியத்தை உடையதாக உவாட்ச் டவர் சொஸையிட்டி பெயரிடப்படலாம். வங்கி சேமிப்புக் கணக்குகளுங்கூட சங்கத்திற்குக் கிடைக்கும்படியாக (trust) வைக்கப்படலாம். இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் இவ்விஷயம் சங்கத்துக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.
◆ உயில்கள்: சொத்து அல்லது பணம் சட்டப்பூர்வமாக நிறைவேற்றப்பட்ட ஒரு உயில் மூலமாக உவாட்ச் டவர் சொஸையிட்டிக்கு ஒப்படைக்கப்படலாம். அதன் ஒரு நகல் சங்கத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.
கூடுதலான தகவல்களை அல்லது தெளிவுரைகளைப் பெற்றுக்கொள்ள உவாட்ச் டவர் சொஸையிட்டிக்கு (Watch Tower Bible and Tract Society of Pennsylvania, 25 Columbia Heights, Brooklyn, New York 11201) அல்லது சொஸையிட்டியின் உள்ளூர் கிளை அலுவலகத்துக்கு எழுதுவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
[பக்கம் 30-ன் படங்கள்]
கடந்த இரண்டு ஆண்டுகளில் ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிக்க உங்களுடைய நன்கொடைகளை யெகோவாவின் சாட்சிகளின் ஆளும் குழு உபயோகித்திருக்கும் முறைகள்:
12,700 மிஷனரிகளையும் விசேஷ பயனியர்களையும் ஆதரித்து வருகிறது
5,000-ற்கும் அதிகமான பிரயாணக் கண்காணிகளுக்கும் அவர்களுடைய மனைவிகளுக்கும் உதவி செய்தல்
இயற்கை விபத்துக்களில் அகப்பட்டுக்கொண்டவர்களுக்கு உதவுதல்
40 கிளைக்காரியாலய வசதிகளைக் கட்டுதல் அல்லது விஸ்தரித்தல்
அதிக வேகமாக இயங்கும் எட்டு ரோட்டரி அச்சு இயந்திரங்களை வாங்கியது
8,400-ற்கும் அதிகமான பெத்தேல் அங்கத்தினர்களுக்கு வசதிகள் செய்தல்