உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • th படிப்பு 10 பக். 13
  • குரல் வேறுபாடு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • குரல் வேறுபாடு
  • வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • இதே தகவல்
  • குரல் வேறுபாடு
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • கருத்து அழுத்தமும் குரலில் ஏற்றத்தாழ்வும்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • போதிய சத்தம்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • ஆர்வத்துடிப்பு
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
மேலும் பார்க்க
வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
th படிப்பு 10 பக். 13

படிப்பு 10

குரல் வேறுபாடு

வசனம்

நீதிமொழிகள் 8:4

சுருக்கம்: குறிப்புகளைத் தெளிவாகச் சொல்வதற்கும், கேட்பவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கும் உங்கள் குரலின் சத்தத்திலும் ஏற்றத்தாழ்விலும் வேகத்திலும் வேறுபாடு காட்டுங்கள்.

எப்படிச் செய்வது?

  • சத்தத்தில் வேறுபாடு காட்டுங்கள். முக்கியக் குறிப்புகளை வலியுறுத்துவதற்கும், கேட்பவர்களைச் செயல்படத் தூண்டுவதற்கும் உங்கள் சத்தத்தைக் கூட்டுங்கள். பைபிளிலுள்ள நியாயத்தீர்ப்புச் செய்திகளை வாசிக்கும்போதும் சத்தத்தைக் கூட்டுங்கள். ஆனால், பயத்தையோ கவலையையோ தெரிவிப்பதற்கு அல்லது எதிர்பார்ப்பைத் தூண்டுவதற்கு உங்கள் சத்தத்தைக் குறையுங்கள்.

    நடைமுறை ஆலோசனை

    அடிக்கடி சத்தத்தைக் கூட்டாதீர்கள்; கேட்பவர்கள் நீங்கள் திட்டுகிறீர்கள் என்று நினைத்துக்கொள்வார்கள். ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு வாசிப்பதன் மூலம் கேட்பவர்களுடைய கவனம் உங்கள்மேல் திரும்பிவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.

  • ஏற்றத்தாழ்வில் வேறுபாடு காட்டுங்கள். ஏதோ ஒன்றின் அளவை அல்லது தூரத்தைச் சொல்வதற்கோ, உற்சாகத்தைக் காட்டுவதற்கோ உங்கள் குரலை ஏற்றுங்கள். ஆனால், வேதனையை அல்லது கவலையைத் தெரிவிப்பதற்கு உங்கள் குரலை இறக்குங்கள்.

  • வேகத்தில் வேறுபாடு காட்டுங்கள். சந்தோஷத்தை வெளிக்காட்டுவதற்கு, நீங்கள் பேசும் வேகத்தைக் கூட்டுங்கள். முக்கியமான குறிப்புகளைச் சொல்லும்போது வேகத்தைக் குறையுங்கள்.

    நடைமுறை ஆலோசனை

    கேட்பவர்களைத் திடுக்கிட வைக்கும் அளவுக்கு வேகத்தைத் திடீர் திடீரென்று மாற்றாதீர்கள். ரொம்ப வேகமாகவும் பேசாதீர்கள்; அப்படிப் பேசினால் உங்கள் வார்த்தைகள் தெளிவாகக் கேட்காது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்